‘குலையலாமா குடும்ப அமைப்பு?’ என்ற தலைப்புடன் செப்டம்பர் 25 அன்று தினமணி பத்திரிகையில் பாமக தலைவர் ராமதாஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரைக்கு உடனடி பதில்வினை ‘குலைய வேண்டும் குடும்ப அமைப்பு’ என்பதாகத்தான் இருக்க முடியும்.
சமூகம் முன்னேறிய திசையில் நகர்ந்து கொண்டிருக்க ராமதாஸ் தான் மட்டும் பின்னோக்கிச் செல்வதல்லாமல் பின்னோக்கியவையே முதன்மையானவை என்று சொல்லப் பார்க்கிறார். எந்த மாறிச் செல்லும் கட்டத்திலும் அதற்கேயுரிய வலி இருக்கும். ஒவ்வொரு மாறிச் செல்லும் கட்டத்திலும் சமூகம் அந்த வலியின் ஊடேதான் முன்செல்கிறது.
பழைய குடும்ப உறவுகள் இப்போதுள்ள சமூக உற்பத்தி நிலைமைகளில் காலத்துக்கு ஒவ்வாதனவாகிவிட்டதால் தானாக மாறுகின்றன. கூட்டுக் குடும்பத்தின் இடத்தில் தனிக் குடும்பம் என்பது விதியாகிவிட்டது. தனிக் குடும்பங்களும் சிதைகின்றன. இவை சமூக வளர்ச்சியின், முன்னோக்கிய மாற்றத்தின் விளைவுகளேயன்றி பிரச்சனைகள் அல்ல. இந்த விளைவுகள் ராமதாஸ் போன்றவர்கள் கொண்டாடும் முதலாளித்துவ சமூகத்தில்தான் நிகழ் கின்றன. சமூகம் சோசலிசம் நோக்கிச் சென்று பின் அதிலிருந்து கம்யூனிசம் நோக்கிச் செல்லும் போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அல்ல இவை. அப்படி ஒரு நிலைக்கு இந்திய சமூகம் இன்னும் செல்லவும் இல்லை. உண்மையில் இது போன்ற விளைவுகள் அல்லது பிரச்சனைகள் முதலாளித்துவ சமூகத்தில் உழைக்கும் மக்கள் கழுத்தை இறுக்கும் பல பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கோருகின்றன.
முற்போக்கு கருத்துக்களுக்கான போராட்டங்கள், நடவடிக்கைகள் என்று தமிழ்நாட்டுக்கு வரலாறு இருப்பது ஒரு பலம் என்றால், நவதாராளவாத யுகத்தில் ஒப்பீட்டுரீதியில் துரித வளர்ச்சி பெற்ற மாநிலம் என்ற விதத்தில் சாதகமான நிலை உள்ளது. தமிழ்நாடுதான் நகர்ப் புறமயமாதலில் முதலிடத்தில் இருக்கிறது. நகர்ப்புறமயமாதல் ராமதாசுகள் விரும்பும்படி நடப்பதில்லை. அதற்கே உரிய விதிகளுடன் நடக்கிறது. அதற்கே உரிய விளைவுகளும் ஏற் படுகின்றன. விஞ்ஞானபூர்வமான வளர்ச்சிப் போக்குடனான பழமையின் மோதல்களில் இது வரை பழமைக் கருத்துக்கள் தோல்வியுற்றுத்தான் போயுள்ளன.
நீயா, நானாவில் பங்கு பெறும், பல்வேறு குட்டி முதலாளித்துவக் கருத்துக்களால் ஆட் பட்டு இருக்கும் நடுத்தரப் பிரிவு ஆண்கள் கூட, பெண்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள் எனவே ஆண்கள் சமையலறைக்குள் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். மாற்றங்கள் திணிக்கப்படுபவையாக மாறும் முன்னர், ஒரு பிரிவு அந்த மாற்றங்களை முன்வைக்கிறது என்றால் மற்றொரு பிரிவு நடக்கிற மாற்றங்களுக்கு ஏற்ப, தன்னை தகவமைத்துக் கொள்ள தயாராகிறது.
இதுவும் விஞ்ஞானம்தான். ராமதாஸ் தான் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். சமீபத்தில் கைது செய்யப்பட்ட போது, கைது செய்யப்பட்டால் பெரிய மனிதர் களுக்கு வரும் நெஞ்சு வலி வந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நவீன மருத்துவம் வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. குளிர்வசதி கொண்ட கார் அவருக்கு தேவைப்படுகிறது. தைலாபுரத்தில் உள்ள வேப்பமர நிழல் போதும் என்று அவர் சொல்வதில்லை. நவீனத்தில் உள்ள வசதிகளும் நைந்து போனதில் உள்ள வசதிகளும் அக்கம் பக்கமாக வேண்டும் என்கிறார்.
சென்ற ஆண்டு நவம்பரில் நடந்தது போலவே, இந்தக் கட்டத்திலும் அவர் இருத்தலை பதிவு செய்ய ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அனைவரும் தேர்தல் நோக்கி வியூகங்கள் அமைத்துக் கொண்டிருக்கும்போது, ராமதாசுக்கும் ஏதாவது ஒரு தளம் தேவைப்படுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நவதாராளவாதக் கொள்கை எதிர்ப்பு, கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு என எந்தத் தளத்திலும் அவரால் மக்களை அணுக முடியாது. அவருக்கு இந்த எதிர்ப்புக்களில் உடன்பாடு இல்லை. அவருக்கு இப்போது கையில் கிடைத்திருப்பது கலாச்சார காவலர் அவதாரம். தனக்கே உரிய விதத்தில் அதைச் செய்யப் பார்க்கிறார்.
சென்ற ஆண்டின் இறுதியில் எடுத்த அந்த அவதாரம் தமிழ்நாடு முழுவதும் நிராகரிக்கப்பட்டதை நன்கு உணர்ந்த பிறகும், அது மீண்டும் செல்லுமா என்று சோதித்துப் பார்க்கிறார். இந்த முறை அவர் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியிடம் இருந்து உத்வேகமும் உற்சாகமும் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியாவைப் பாதுகாப்பதில் குடும்பங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று சமீபத்தில் குருமூர்த்தி சொன்ன கருத்துக்கள் ராமதாசை மிகவும் பாதித்துள்ளன. அந்தப் புள்ளியில் இருந்து துவங்கி நிலவுகிற குடும்ப அமைப்பின் அருமை பெருமைகளை, அது கட்டிக்காக்கப்பட வேண்டிய அவசியத்தை ராமதாஸ் விரிவாகச் சொல்கிறார்.
குடும்பம் அடிப்படை பொருளாதார அலகு என்றும் கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு என அரசு தனது கடமைகள் அனைத்தையும் குடும்பங்கள் மீது சுமத்திவிட்டு தான் தன் பொறுப்பில் இருந்து நழுவிவிடுகிறது என்றும் ராமதாஸ் சரியாகவே குறிப்பிடுகிறார். ஆனால், பொறுப்பில் இருந்து தவறும் அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்து வதற்கு பதிலாக குடும்பங்கள் சிதைந்தால் அரசு பார்க்க வேண்டியிருக்கும், பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அரசுகள் இல்லை என்று அரசு பக்கம் நின்று கொள்கிறார்.
மேலை நாடு களின் பெரிய செலவே குடும்பங்கள் சிதைந்ததால் தனித்து இருப்பவர்களை பார்த்துக் கொள்வதுதான் என்று கவலைப்படுகிறார். இப்படி மிகப்பெரிய சமூகப்பொறுப்பைச் சுமக்கிற குடும்ப அமைப்பின் அச்சாணி திருமணம் என்றும், எனவே அது தனிநபர் விசயம் அல்ல என்றும் வாதிடுகிறார். குடும்பம் இயற்கையானது, அரசுக்கு முந்தையது, அதைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.
மானுட வளர்ச்சி பற்றிய முதலாளித்துவ கருத்துப்படியே கூட குடும்பம் இயற்கையாக உருவானது இல்லை. அது காலப்போக்கில் உருவானது. மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்றும் அங்கு கணவன், மனைவி, குழந்தை, தாய், தந்தை, உடன்பிறந்தோர், உறவினர் என்று எந்த உறவுகளும் வரையறுக்கப்படவில்லை என்றும் மானுடவியல் சொல்லிவிடுகிறது. ராமதாஸ் தன் விருப்பிற்கேற்ப, நிகழ்ந்து முடிந்தவற்றை மாற்ற முடியாது.
மேற்கத்திய அநாகரிகத்தின் தாக்கத்தால் பாலியல் சுதந்திரம், திருமணம் தொடர்பான இன்னபிற பிறழ்வுகள் நிலவுவதாகச் சொல்கிறார். பழங்குடிச் சமூகங்கள் சில இன்னும் கூட பாலியல் கட்டுப்பாடு குறைந்தவையாகத்தான் இருக்கின்றன. அவை எந்த மேலைநாட்டு அநாகரிகத்தாலும் பாதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் நேர்ந்துள்ள மாற்றங்கள், மேலை அநாகரிகத்தின் தாக்கம் இல்லை என்றாலும் நடந்திருக்கும். மறுபுறம் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று ராமதாஸ் ஒப்புக்கொள்கிற மேலை நாடுகளில்தான் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன என்றால், அவை வளர்ச்சியின் விளைபொருட்கள் என்று அவர் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இயற்கையான பெற்றோருடன் வாழும் குழந்தைகள், அப்படியல்லாத குழந்தைகளை விட மேலான வாழ்வு வாழ்வதாகச் சொல்கிறார் ராமதாஸ். தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். குடும்பமே கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் பார்ப்பதில்லையா? தன் இயற்கையான பெற்றோருடன் வாழ்ந்து வளர்ந்த வன்னிய இளைஞர் திருபெரும்புதூர் ஆலைச் சக்கரத்தோடு சக்கரமாக சுற்றிக்கொண்டில்லையா? இவர்கள் மகிழ்ச்சிப் பெருவாழ்வு வாழ்கிறார்கள் என்று ராமதாஸ் சொல்லிவிட முடியுமா?
ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பதில் காணப்படுகிற சில புதிய பரிசோதனைகள் பற்றியும் ராமதாஸ் விமர்சிக்கிறார். தமிழக இளைஞர்கள் இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
முதலாளித்துவ சமூகத்தில் மனித உறவுகள் பணத்தால் பின்னப்பட்டவை என்று மார்க்ஸ் சொல்வதை ராமதாசோ, குருமூர்த்தியோ மறுத்துச் சொல்ல முடியுமா? சொந்த நாட்டில் வாழ்வாதாரம் கிடைக்காமல் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட உழைக்கும் மக்கள், அந்நிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பணம் அனுப்பித்தான் அவர்கள் குடும்பங்கள் வாழ வேண்டும் என்ற நிலை சுபிட்சமானது என்று தான் அவர்களால் சொல்ல முடியுமா?
முதலாளித்துவச் சுரண்டலுக்கான அடிப்படை அலகு குடும்பம். மலிவான மற்றும் கூலி தரப்படாத உழைப்பை உறுதி செய்ய, கூடுதல் கூலி கேட்டுப் போராடும் தொழிலாளியை மிரட்ட, பணிய வைக்க, முதலாளித்துவத்துக்கு குடும்ப அமைப்பை தக்க வைப்பது அவசியம். வர்க்கப் போராட்டம் தொடர்பான இந்தப் பிரச்சனை எழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள முதலாளித்துவ சமூகத்தில் பல்வேறு சக்திகளுக்கு சேவை செய்து கொண்டிருப்பவர் ராமதாஸ். அதில் இப்போது பாசிசத் தன்மையையும் ஏற்றப்பார்க்கிறார். ராமதாசின் வாதங்களில் உள்ள இந்த ஆபத்தை அடையாளம் கண்டுகொள்வது அவசியம்.
தனிச்சொத்து உருவானபோதுதான், அதை ஆணின் சந்ததிக்கு மாற்ற குடும்பம் உருவானது. தனிச் சொத்து ஒழிக்கப்படும்போது, பொருளாதார அம்சங்களால் பின்னப்பட்டிருக்கிற இன்றைய குடும்பங்களின் உள்ளடக்கமும் வடிவமும் சூழலுக்கு ஏற்ப மாறும்.