கோவை நாடாளுமன்றத் தொகுதி, தொழிலாளர் வர்க்கம் நிறைந்த தொகுதி. ஜவுளித் தொழிலின் பல வகைப்பட்ட தொழிலாளர்கள் முதல் நவீன தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்கள் வரை, செங்கல் சூளை தொழிலாளர் முதல் கட்டுமானத் தொழிலாளர் வரை வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.
இந்தத் தொகுதியில் வாக்கு அளிக்க முடியாத ஏராளமான நூற்பாலை நவீனக் கொத்தடிமைத் தொழிலாளர்களும் உள்ளனர். பெரிய, நடுத் தரத் தொழில்களைக் கொண்டிருந்தபோதும், அவற்றோடு நெருக்கமான பிணைப்புள்ள சிறுவீத உற்பத்தியே மேலோங்கி உள்ளது. இதில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பல்லடம் தொகுதி திருப்பூர் மாவட்டத்திற்குள்ளும் மற்ற அய்ந்து தொகுதிகள் கோவை மாவட்டத்திற்குள்ளும் உள்ளன.
கோவையில் முதல் ஜவுளி ஆலை பிரிட்டிஷாரால் துவக்கப்பட்டது. 1896ல் ஸ்டேன்ஸ் மற்றும் நரசிம்மலு நாயுடு உதவியுடன் ஸ்டேன்ஸ் மில் துவக்கப்பட்டது. ஸ்டேன்ஸ் மில் பல இந்திய முதலாளிகளின் கைகளுக்கு மாறி தற்போது முருகன் மில், காளீஸ்வரா மில் என்ற பெயரில் 1970லிருந்து என்.டி.சி மில்லாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை துவங்கப்பட்ட பின்பு, முதல் உலகப் போர் காலகட்டத்தில் பல ஆலைகள் துவங்கப்பட்டு, தென் இந்தி யாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் அளவு கோவை ஜவுளித் தொழில் நகரமானது.
கடுமையான உழைப்பு சுரண்டல் இருந்தது. 16 மணி நேர வேலை, எப்போதும் ஆலை வளாகத்திற்குள்ளே அடியாட்களை இருந்தனர். கோவை வரலாற்றில் இதற்கெதிரான தொழிலாளர் போராட்டம் குறிப்பிடத்தக்கது. ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டம் வீரஞ் செறிந்தது. சின்னியம்பாளையம் தொழிலாளர் போராட்டம், பங்கஜா மில் துப்பாக்கி சூடு, ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கி சூட்டில் பெண்கள் உட்பட 11 பேர் வீர மரணம், (5 பேரைத் தவிர 6 பேர் இது நாள் வரை அடையாளம் காணப்படவில்லை) லட்சுமி மில் தொழிலாளர் போராட்டம் என நாட்டை உலுக்கிய போராட்டங்கள் கண்ட பூமி. தொழிலாளர்களின் செங்குருதி பாய்ந்த பூமி.
அன்று தொழிலாளர் போராட்டங்கள் நாட்டு விடுதலைப் போரோடு இணைக்கப்பட் டிருந்தன. 1947க்கு முன்பே சிங்காநல்லூர் தொகுதி தொழிலாளர் தொகுதி என ஒதுக்கப்பட்டு அன்று காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்று அறியப்பட்ட என்.ஜி.ராமசாமி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டார். அவரும் பின்னாளில் மில் முதலாளிகளின் ரவுடிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அன்று கம்யூனிஸ்ட்களும் காங்கிரசுக்குள்தான் வேலை செய்தார்கள். சிறப்பு மிகுந்த கோவை ஜவுளித் தொழிலாளர்களின் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகள் பல.
நாடு முழுவதும் நலிவுறும் தறுவாயில் இருந்த 230க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் 1970ல் அரசுடைமையாக்கப்பட்டன. அதில் கோவையில் 14 ஆலைகள் அரசுடைமை யாக்கப்பட்டன. பின்னாளில் அவற்றில் பெரும்பாலான ஆலைகள் மூடப்பட்டாலும் கோவை யில் அவை இது வரை இயங்கி வருகின்றன. அரசுடைமையாக்குவதற்கு கோவை தொழிலாளர் போராட்டமும் ஒரு முக்கிய காரணம்.
1985ல் ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்ட புதிய ஜவுளிக் கொள்கை, கோவையில் பாரதூரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. 90க்கு மேற்பட்ட நலிவுற்ற ஆலைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. காம்போஸிட் ஆலைகள் உடைக்கப்பட்டு ஒருங்கிணைந்த துறைகள் தனித்தனி சிறிய யூனிட்களாக மாற்றப்பட்டன. கல்யாண மண்டபங்களும் மாட்டுக் கொட் டாய்களும் நூற்பாலைகளாயின. கிராமப்புறங்களில் புதிய புதிய மில்கள் உருவாயின.
நெசவுப் பிரிவில் ஓடிய விசைத்தறிகள் கழற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான விசைத்தறிக்கூடங்களாக மாற்றப்பட்டன. அனைத்து ஆலைகளிலும் நிரந்தரத் தொழிலாளர்கள் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டனர். சைமா (ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ள 230 ஆலைகளைக் கொண்டிருந்தது) தொழிற்சங்கப் பேச்சுவார்த்தை என்று உருவாகிய கூட்டுபேர உரிமை காலாவதியாகியது, 1985 முதல் 1995க்குள் போராடிப் பெற்ற அத்தனை உரிமைகளும் தவிடு பொடியாயின. மூடிய ஆலைத் தொழிலாளர்களின் அவலக்குரல் அடங்கும் முன்பு கேம்ப் கூலி மற்றும் மாங்கல்ய திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் அவலக்குரலும் சேர்ந்து விட்டது.
தொழிலாளர் வர்க்க இயக்கம் இந்தத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை தற்காப்பு நிலையில் இருந்து அணுகியது. அதனால் முடமானது; அல்லது முடமாக்கப்பட்டது. வீரஞ்செறிந்த மரபு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அது தொழிற்சங்க இயக்கத்தில் அவலக் குரலாக ஒலித்தது. அது அரசியல் தளத்தில் சரணாகதியானது.
இடதுசாரி நிகழ்ச்சிநிரல் தாக்குதல் நிலையைத் தளர்த்திய சூழலில் கோவை குண்டு வெடிப்பையொட்டிய நிகழ்வுகள் வலதுசாரி கருத்துக்களை தாக்குதல் நிலைக்கு கொண்டு வந்தன. இடைப்பட்ட காலத்தில் டெக்ஸ்டைல் அல்லாத தொழிற்சாலைகளில் தொழி லாளர்களின் தேடுதல்கள் சென்னைக் கலாச்சாரமான ஒரு தொழிற்சாலைக்கு ஒரு யூனியன் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு சுற்று வலம் வந்து ஓய்வை நோக்கி சென்று கொண்டி ருக்கின்றன. அந்தப் போக்கு தொழிலாளர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் போக் காகும்; அல்லது வலதுசாரிப் போக்கின் பின் ஓடும் போக்காகும்.
இத்தகைய நிலைமைகளில் தொடரும் நவதாராளவாத கொள்கைகள் கோவை தொழிற் துறையை பெரிய அளவில் மறுகட்டமைப்பு செய்திருக்கின்றன. இன்றும் ஜவுளி ஏற்றுமதியில் கோவை, இந்தியாவில் 3ஆவது இடத்தை வகிக்கிறது. மாறிய நிலைமைகளில் ஜவுளித் துறை யிலும், பொறியில் துறையிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பலவிதமான மோசமான பணி நிலைமைகளில் பணியாற்ற வைத்திருக்கின்றது.
25,000த்திற்கு மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் தொகுதிக்குள் உள் ளன. சுமார் 800 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. 2 லட்சத்திற்கும் மேலான விசைத்தறி களும் பனியன் யூனிட்களும் இயங்குகின்றன. உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சிஎச்அய்எல் மற்றும் டைடல் பார்க் ஆகியவற்றோடு மேலும் அய்ந்து திட் டங்களுக்கான வேலையும் நடந்து வருகின்றது.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் முன்னணி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீஸ், சி.டி.எஸ், அய்பிஎம், ராபர்ட் போஸச் ஜிஎம்பிஎச், டாடா எல்எக்சி, டெல், ஆதித்தி டெக்னாலாஜிஸ், சிஎஸ்எஸ் கார்ப் மற்றும் கேஜிஅய்எஸ்எல் ஆகியவை கால் பதித்துள்ளன. சி.டி.எஸ் கோயம்புத்தூரில் இந்தியாவின் 2வது மய்யமாக திகழ்கிறது. அதில் 5,000 பேர் பணி புரிகின்றனர். உலகில் 17ஆவது அவுட்சோர்சிங் மய்யமாக கோவை திகழுகிறது.
கோயம்புத்தூரின் ஜவுளி அல்லாத பல தரப்பட்ட தொழில் நிறுவனங்களின் பெயர்களை பட்டியலிட வேண்டியதில்லை. ஆபரணம் தயாரிப்பு, வெட் கிரைண்டர், மோட்டார் பம்புசெட் உற்பத்தியில் ஈடுபடும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மலிவான உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கல்வி, மருத்துவம், ஹோட்டல் துறையென மூலதனம் பாய்ந்திருக்கிறது. ஓர் ஆண்டிற்கு 55 ஆயிரம் பொறியாளர்கள் உருவாக் கப்பட்டு, வேலை சந்தையில் போட்டியிட வைக்கப்படுகின்றனர். ஒட்டு மொத்தத்தில் 90% அமைப்புசாரா தொழிலாளர்கள். இவர்களுக்கு கூட்டு பேர உரிமை, சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
கோவை நாடாளுமன்றத் தொகுதி கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், பல்லடம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதுவரை 17 முறை தேர்தல் நடந்திருக்கிறது. சிபி.அய் 5 முறை, சிபிஅய்(எம்) 2 முறை என 7 முறை இடதுசாரிகளும், காங்கிரஸ் 6 முறையும், திமுக, பாரதிய ஜனதா கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு முறை கூட அதிமுக போட்டியிட வில்லை. தற்போதைய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஅய்(எம்)அய்ச் சேர்ந்தவர். அவர் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர். கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது.
தற்போது அரசியல் கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய தயாரிப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. மாலெ கட்சியும் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறது. இடதுசாரி அரசியலை, பாட்டாளி வர்க்க அரசியலை சமரசப் பாதையிலிருந்தும் சரணாகதிப் பாதையிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும். பாட்டாளி வர்க்க அரசியல் கருத்தியலின் குறிப்பான அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் அதற்கேற்ப அமைப்பு ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுதந்திரமான பாட்டாளி வர்க்க அரசியலை தூக்கலாக அறுதியிட வேண்டும்.
தொழிற்சங்க இயக்கத்தில் பிரிக்கால் போராட்டத்தின் மூலம் புரட்சிகரப் போக்கை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன் வீச்சு மெல்ல மெல்ல வேரூன்ற ஆரம்பித்துள்ளது. பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தோடு நில்லாமல், மாவட்டத்தில் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டு, அது, முதலாளித்துவ நிறுவனங்களோடும் முதலாளித்துவ அரசியலோடும், பாட்டாளி வர்க்கத்தின் போரை வழிநடத்தத் துவங்கியுள்ளது.
அரசியல் கருத்தியல் பிரச்சாரம் செய்ய, அமைப்பை இயக்கத்தை விரிவுபடுத்த, நாடாளுமன்ற தேர்தல் வேலை நிச்சயம் பயன்படும்.