COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 15, 2013

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தொகுதியான கந்தர்வகோட்டையில் அரசாணை எண் 92 அமல்படுத்தக் கோரி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, ஆதி திரவிடர் நலத்துறை அமைச்சர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் தொகுதியாகும். 05.10.2013 அன்று அரசாணை 92அய் அமல்படுத்த வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் நடத்தப்பட்டது.

புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் சாமி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் அகில இந்தியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா, ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர் அதியமான், அகில இந்திய மாணவர் கழக மாநில பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான் ஆகியோர் உரையாற்றினர்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயல்படாமல், தலித்துகளின் நலனிலிருந்து செயல்பட வேண்டுமென்றும், அரசாணையை அமல் படுத்தாமல் இருக்கும் ஜெயலலிதா அரசை வன்மையாக கண்டித்தும் உரையாற்றினர்.

Search