ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் தேர்தல்களில் அகில இந்திய மாணவர் கழகம் பெற்றுள்ள அமோக வெற்றியும் டில்லி பல்கலை கழகத்தில் ஒரு வளருகிற மூன்றாவது சக்தியாக அகில இந்திய மாணவர் கழகம் எழுந்துள்ளதும் நாட்டின் புரட்சிகர மாணவர் இயக்க வரலாற்றில் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கிறது.
இந்திய இளைஞர்கள் மத்தியில் பாஜக விற்கப் பார்க்கும் மோடி மந்திரப் புனைக் கதைக்கு இது ஒரு சக்திவாய்ந்த பதிலடி. மேலும், காங்கிரசின் நாசகர கொள்கைகள் மற்றும் பாஜகவின் மதவெறி பாசிச நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றில் இருந்து விலகி நாட்டில் ஒரு முற்போக்கு அரசியல் மாற்றம் வேண்டும் என்ற இளைய இந்தியாவின் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது.
சமீப காலங்களில் டில்லி, வெகுமக்கள் ஜனநாயக எதிர்ப்புக்களின் கோட்டையாக எழுந்துள்ளது. அகில இந்திய மாணவர் கழகம், முற்போக்கான மாற்றத்துக்கான மாணவர் விருப்பத்தின் மிகவும் துடிப்பான விடாப்பிடியான மேடையாக எழுந்துள்ளது. இகக மாலெ மத்திய கமிட்டி டில்லியின் புரட்சிகர மாணவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கிறது. இந்த மகத்தான வெற்றிக்காக அகில இந்திய மாணவர் கழகத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது.
அகில இந்திய மாணவர் கழகத்தின் தலைமையிலான புரட்சிகர மாணவர் இயக்கம், ஊழல் மற்றும் ஆழமடைந்து வரும் நெருக்கடி என்ற காங்கிரசின் வழிமரபுக்கும் மதவெறி மற்றும் கார்ப்பரேட் பாசிசம் என்ற மோடியின் திட்டத்துக்கும் எதிரான வெகுமக்கள் எதிர்ப்பின் பலமான தளமாக முன்னேறிச் செல்ல வேண்டும்.
திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
16 செப்டம்பர் 2013