கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு. குடிநீர் கேட்டு திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை. இப்படி நாளொரு மறியலும் பொழுதொரு போராட்டமும் தமிழகத்தில் தண்ணீருக்காக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ரொட்டி இல்லையா கேக் சாப்பிடுங்கள் என்று பிரெஞ்சு மகாராணி மேரி அன்டொய்னட் சொன்னதுபோல் தமிழகத்தின் ராணியாரும் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் இல்லையா பத்து ரூபாய்க்கு அம்மா குடிநீர் வாங்கிப் பருகுங்கள் என்கிறார். தனியார் நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில் 1 லிட்டர் விலை 20 ரூபாயாம். ரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில் விலை 15 ரூபாயாம். அதனால், பேருந்தில் போகும் பயணிகளுக்கு பத்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் தருகிறாராம் தமிழக முதல்வர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் அம்மா குடிநீர் தயாரிக்கப்பட்டு, அரசு பேருந்துகள் மூலமே கொண்டு செல்லப்பட்டு பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப் படுகிறது. இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அதிமுக சங்கத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் சும்மா இருந்து விற்பனை செய்வதற்கு கூட வரத் தயங்குகிறார்களாம். ஏனென்றால், வரும் பாட்டில்கள் உடைந்து போய்விட்டால் அந்தப்பாட்டில்களுக்கான காசை அந்த விற்பனையாளர்தான் கட்ட வேண்டுமாம். கும்மிடிப் பூண்டியில் சாலைப் போக்குவரத்து நிறுவனமான ஆய்ஆர்டிக்கு சொந்தமான இடத்தில் இருந்துதான் அம்மா குடிநீர் தயாராகிறது. ஓட்டுநர் வேலையில் சேர பயற்சிக்கு வந்தவர்களை வைத்து குடிநீர் தயாராகிறது. அம்மா குடிநீர் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கே அங்கு சுத்தமான குடிநீர் தரப்படுவதில்லை என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.
அம்மா குடிநீர் பாட்டிலில் பச்சைக் கலரில் இரட்டை இலைகள் துளிர் விடுகின்றன. யாராவது வழக்கு போட்டால், அது இலை இல்லை, குதிரை இறக்கை என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பாட்டில் லேபிளில் ‘மழை நீரைச் சேமிப்போம். நிலத்தடி நீரை அதிகரிப்போம்’. ‘முதலமைச்சர் அம்மாவின் சீரிய சிந்தனையில் மலர்ந்த மழை நீர் சேமிப்புத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவோம்’ ‘மழை நீரைச் சேமித்து நீர் வளத்தைக் காப்போம்’ என அச்சடித்துள்ளார்கள்.
விருட்சமாக வளர்ந்து நிழலும் மழையும் கொடுத்த சாலையோர மரங்களையெல்லாம் சாலை சீரமைப்பு என்ற பெயரில் வெட்டிச் சாய்த்து விட்டு, மழை நீரைச் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்ட பெரிய பெரிய ஏரிகளையும் குளங்களையும் கண்மாய்களையும் கட்டடங்கள் கட்டி காணாமல் செய்துவிட்டு இப்போது குட்டி குட்டியாய் தொட்டி கட்டி நீர் வளத்தைப் பெருக்கச் சொல்கிறார் ஜெயலலிதா.
ஆற்று மணலெல்லாம் அள்ளப்பட்டு விட்டதால் கண்ணாடியாக இருந்த தண்ணீர் எல்லாம் களிமண் கலவையாக மாறிவிட்டது. இப்போது குடிநீருக்காக பூமியைக் குடைந்து தண்ணீர் எடுத்து அதையும் விற்றும் காசு பார்க்கும் மகா கொள்ளைத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.
மத்திய அரசை எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்ளும் அவர், மத்திய அரசின் முதலாளிகள் சார்பு, மக்கள் விரோத கொள்கைகளை யெல்லாம் மன்மோகன் அமல்படுத்துவதற்கு முன்பே தமிழகத்தில் அமல்படுத்தி முதலிடம் பிடிக்கிறார். கையில் காசு திட்டத்தை மத்திய அரசு அறிவித்த உடனேயே ஒரு புறம் அதை எதிர்ப்பதுபோல் எதிர்த்துக் கொண்டு மறுபுறம் பொங்கல் செலவுக்கு ரேசன் கடைகள் மூலம் 100 ரூபாய் கொடுத்தார். அந்தப் பணத்தின் கணிசமான பகுதி டாஸ்மாக் மூலம் அரசு கஜானாவிற்குத் திரும்பப் போனது தனி கதை.
அதேபோல், மன்மோகன் அரசு, தண்ணீர் கொள்கை 2012 மூலம் தண்ணீரையும் விற் பனைப் பொருளாக்கி டாடாக்களும் அம்பானிகளும் சம்பாதிப்பதற்கான சதித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. அந்தத் திட்டத்தைத் தான் முதலாவதாக தமிழகத்தில் அரங்கேற்றி யிருக்கிறார், அம்மா குடிநீர் என்ற பெயரில். பேருந்தில் பயணிப்போருக்கு 1 லிட்டர் பாட்டில் என்பதுபோல், வீடுகளுக்கு 20 லிட்டர் பாட்டில் கொண்டு வருவதற்கான திட்டமும் அரசிடம் உள்ளதாம். யாரும் கார்ப்பரேஷன் தண்ணீருக்கு இனி தவம் கிடக்க வேண்டாம். உங்கள் வீடு தேடி வரும் அம்மா குடிநீர். ஆனால், வீட்டு பட்ஜெட்டில் தண்ணீருக்கு என்று மட்டும் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
தண்ணீரை அரசே விற்பனை செய்வதன் மூலம் தண்ணீரும் விற்பனைப் பொருள்தான் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில் முதலில் பதிய வைக்கிறார்கள். அடுத்து குறைந்த விலையில் குடிநீர் பாட்டில் கொடுத்து குக்கிராமத்தில் உள்ளவர்களையும் கூட தண்ணீர் பாட்டில் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, குடிநீர் வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கினால் தப்பில்லை என்கிற மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்துவதற்கான உத்திதான் இது.
எல்லார் கையிலும் எல்லார் வீட்டிலும் தண்ணீர் பாட்டில் என்று வந்த பின்பு தண்ணீர் விற்பனையை ஒட்டுமொத்தமாக தனியார் கையில் தாரை வார்த்து விடும் அரசு. தமிழகத்தில் ஏற்கனவே அமெரிக்காவின் கொக்கக்கோலா நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அம்மா குடிநீர் சேவையல்ல. தண்ணீர் தனியார்மயமாக்கத்திற்கான முதல்படி. பாட்டில் தண்ணீர், தண்ணீரை விற்பனைப் பொருளாக்குவது என்பது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் மொத்த நிலமும் நீரும் மாசுபட்டு வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையையே நாசமாக்கப் போகும் மோசமான திட்டமாகும்.
சமீபத்தில் ஜெர்மன் ஃபெடரல் இன்ஸ்ட் டியுட் ஆப் ஹைட்ராலஜி அமைப்பின் ஆய்வாளர்கள் வேறுவேறான 18 பாட்டில் தண்ணீரை சோதனை செய்து பார்த்ததில் பாட்டில் தண்ணீரில் 24,520 வேறு வேறு வேதிப் பொருட்கள் உள்ளன என்றும் அவை மனித உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் கண்டு பிடித்துள்ளார்கள். 18 பாட்டில்களில் 13 பாட்டில்களில் இருந்த தண்ணீரில் பெண் தன்மையை அழிப்பதற்கான பொருள்கள் இருந்ததையும் 16 பாட்டில் தண்ணீரில் ஆண் தன்மையைக் கட்டுப்படுத்தும் வேதிப் பொருள்கள் இருந்ததையும் மனித இன உற்பத்திக்கே தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பில் நாளமில்லா சுரப்பிகளை நாசப்படுத்தும் வேதிப் பொருள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதுதான்.
மகிழுந்து மற்றும் பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் பாட்டில் தண்ணீரில் சூடேறி பிளாஸ்ட்டிக்கின் வேதிப்பொருள் தண்ணீரோடு கலந்து விடுகிறது என்றும் அந்தத் தண்ணீர் புற்றுநோயை உருவாக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். குறிப்பாக. கர்ப்பமான பெண்கள் கார்களில் வெகுநேரம் வைத்திருந்த பாட்டில் தண்ணீரை பருகக் கூடாது என்று கூறியுள்ளார்கள்.
அய்க்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள மாகாண அரசுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன. அவர்கள் அதிர்ச்சி தரும் 5 முக்கிய காரணங்களைச் சொல்கிறார்கள்.
(1) பிளாஸ்டிக் பாட்டில்கள் மக்கிப்போக 1000 ஆண்டுகளும் மேல் ஆகும். அவற்றை எரித்தால் விஷ வாயுக்களை உருவாக்கும். பாட்டில்கள் ஒருமுறை பயன்படுத்துவதற்கு மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. (திரும்பத் திரும்ப பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு. அதனால்தான் தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டிலை கசக்கிக் போட்டுவிடவும் என்று பாட்டில்களிலேயே குறிப்பிட்டிருப்பார்கள்). எனவே 80% பாட்டில்கள் குப்பைகளாகின்றன.
(2) எல்லா பாட்டில்களையும் மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாது. பெட் பாட்டில்களை ளஆர்ற்ற்ப்ங்ள் ம்ஹக்ங் ர்ச் டர்ப்ஹ்ங்ற்ட்ஹ்ப்ங்ய்ங் ற்ங்ழ்ங்ல்ட்ற்ட்ஹப்ஹற்ங் (டஉப, ள்ர்ம்ங்ற்ண்ம்ங்ள் டஉபஉ)ன மட்டுமே மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியும். அய்ந்தில் ஒரு பாட்டில் மட்டுமே மறுசுழற்சிக்குப் போகிறது. மற்ற எல்லாமே தூர வீசப்படுகிறது.
(3) இவ்வாறு தூர வீசப்பட்ட பாட்டில்கள் அய்க்கிய அமெரிக்காவில் மட்டுமே 2 மில்லியன் டன்.
(4) அய்க்கிய அமெரிக்காவின் தண்ணீர் பாட்டில் தயாரிப்புக்கு மட்டுமே 1.5 மில்லியன் பீப்பாய்கள் (ஒரு பீப்பாய் சுமார் 160 லிட்டர்) எண்ணெய் செலவாகிறதாம். இது ஒரு வருடத்தில் 1 லட்சம் காருக்கான சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆகும் எண்ணெயின் அளவை விடக் கூடுதல். இதனுடன் கச்சா எண்ணெய், உற்பத்தியின்போது வெளியிடப்படும் வாயுவின் அளவு மற்றும் பாட்டில்களைக் கொண்டு செல்வதற்கு ஆகும் போக்குவரத்திற்கான எண்ணெய் செலவுகளைச் சேர்த்தால் பல ஆயிரம் மில்லயன் பீப்பாய்கள் எண்ணெய் செலவாகிறதாம்.
(5) மிக மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால், 1 லிட்டர் பாட்டில் குடிநீர் தயாரிக்க 3 லிட்டர் தண்ணீர் செலவழிக்க வேண்டியுள்ளது. அதாவது, 1 கிலோ கிராம் பாட்டில் தண்ணீர் தயாரிக்க 26.876 லிட்டர் தண்ணீரும் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யும் 1.8 பவுண்ட் எரிவாயுவும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு காலன் (3.785 லிட்டர்) தண்ணீர் தயாரிக்க 10 டாலர் செலவாகிறது என்றால், அதே அளவு குழாய் தண்ணீருக்கு 0.0015 டாலர்தான் செலவாகிற தாம். மேலும் 40 சதவீத பாட்டில் தண்ணீரில் அப்படியே குழாய் தண்ணீர்தான் பயன்படுத் தப்படுகிறதாம். தண்ணீரை பாட்டில்களில் அடைக்கப்பட்ட பின்பு சோதனைகள் எதுவும் செய்யப்படுவதில்லையாம்.
அய்க்கிய அமெரிக்காவிலேயே அப்படி என்றால் இந்தியாவில் தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். பிளாஸ்டிக் பைகளும் பிளாஸ்டிக் பாட்டில்களும் கடலில் சேர்வதால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆண்டு துவக்கத்தில் அயக்கிய அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாகாணத்தில் உள்ள கண்கார்ட் நகரத்தில் தண்ணீர் பாட்டில் பயன்பாட்டிற்குத் தடைவிதித்துள்ளது அங்குள்ள நிர்வாகம். மீறிப் பயன்படுத்துவோருக்கு முதல் தடவை 25 டாலர் அபராதம். அடுத்த முறை என்றால் 50 டாலர் அபராதம். மக்கள் குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கிலிருந்து மக்களைக் காப்பற்றவுமே இந்த நடவடிக்கை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.
ஆனால், மக்கள் நலனுக்கு எதிரானது என்று அயக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் தடைவிதிக்கும் திட்டங்கள் எல்லாவற்றையும் அது அணுஉலையில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் வரை தமிழக மக்கள் தலையில் கட்டுவதையே தன் தலையாயக் கடமையாகச் செய்து வருகிறார் ஜெயலலிதா.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான். ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் என்று தன்னுடைய தலைவர் பாடியதை வைத்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அது வெறும் சினிமாப் பாட்டுதானே என தன் செயலின் மூலம் காட்டுகிறார். அம்மாவின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு வரம் என்று கொக்கரிக்கிறார்கள் அவர் விசுவாசிகள். ஆனால், உண்மையில் அம்மாவின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு வரம் அல்ல; சாபம்.