பார்வையற்ற மாணவர்களும் பட்டதாரிகளும் தங்கள் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசாங்கம் பார்வையற்று இருப்பதாகச் சொல்கின்றனர். நம்பிக்கையுடன் வாழ்வது பற்றி குட்டிக் கதைகள் சொல்லும் முதலமைச்சர் தன்னம்பிக்கை மிக்க எங்களை ஏன் சந்திக்கக் கூடாது என்று கேட்கின்றனர். அவர்களை கைது செய்வது, விடுவிப்பது, மீண்டும் கைது செய்வது, மீண்டும் விடுவிப்பது என பார்வையிழந்த அந்தப் போராட்டக்காரர்களை தமிழக அரசு மிகவும் கொடூரமாக நடத்துகிறது. பார்வையற்றவர்களை ஓர் அரசாங்கம் இப்படி நடத்தியதாக இதுவரை பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
பார்வையற்றோர் விசயத்தில் ஜெயலலிதா ஹிட்லரை மிஞ்சப் பார்க்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக, இருக்கிற சலுகைகள் போதாதா, இன்னும் என்ன சலுகைகள் கேட்கிறார்கள் என்றுகூட குரல்கள் எழுகின்றன. கண்ணாடியும் கைத்தடியும் கட்டணமில்லா பேருந்து பயணமும் தவிர பொருளுள்ள வேறேதும் அவர்களுக்கு தரப்படவில்லை. பார்வையற்ற மாணவர்களும் பட்டதாரிகளும் சட்டமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் என்றோ அமைச்சராக வேண்டும் என்றோ கேட்கவில்லை. சொந்தக்காலில் நிற்க, குறைந்தபட்ச கவுரவமான வாழ்க்கை வாழ வேலை வாய்ப்பு கேட்கிறார்கள். அதற்காக தகுதித் தேர்வில் சலுகைக் கேட்கிறார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
கல்வி உரிமைச் சட்டப்படி இப்போதுதான் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமன ஆணையம் 1991 - 1996ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது. கல்லூரி ஆசிரியர் பணி நியமனம், ஆசிரியர் பணி நியமன ஆணையத்தின் மாநில அளவிலான தகுதித் தேர்வு மூலம் நடந்தது. இந்த விசயத்தில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு, மற்ற கட்சிகளுக்கு முன்னோடி.
தகுதித் தேர்வு என்று ஒன்று நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த முறையே ரத்து செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பணிக்கு அதற்கென்ற சிறப்புப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். சிறப்புப் படிப்பு ஆசிரியர் பணிக்கென வடிவமைக்கப்பட்டது. பிஎட் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் இன்னொரு தகுதித் தேர்வு ஏன் எழுத வேண்டும்? தமிழக அரசுதானே அந்தத் தேர்வுகளையும் நடத்துகிறது? பிறகு எதற்கு இரட்டை தேர்வு? தமிழக அரசுக்கு தான் நடத்தும் தேர்வில் நம்பிக்கை இல்லையா? அல்லது தமிழக அரசு நடத்தும் தேர்வு தகுதியற்றது என்று தமிழக அரசு முடிவு செய்கிறதா? அந்தத் தேர்வுகள் தகுதியற்றவை என்றால் தகுதித் தேர்வில் மட்டும் என்ன தகுதி வந்துவிடும்? தகுதித் தேர்வுக்கான வினாத்தாளில் 40 கேள்விகளில் பிழை என்ற பிரச்சனை நீதிமன்றம்முன் நீதி கேட்டு நின்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வேறுவேறு தேர்வுகளில் கேள்வித்தாள்கள் வெளியாகிவிடுவது சாதாரண நிகழ்வு.
தகுதி என்ற மேட்டுக்குடி கருத்தாக்கத்தை முன்வைத்து மக்கள் வாயை அடைக்கப் பார்க்கிறது தமிழக அரசு. இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம், டில்லி பல்கலை கழகம், அய்அய்டிக்கள் ஆகியவற்றில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் வேலை பெறும் தகுதியுள்ளவர்கள் ஆகிறார்கள். அவ்வளவே. எந்த மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரியில் தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்? தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இது போன்ற தகுதித் தேர்வுகள் எவையும் நடத்தப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில் பிஎட் பட்டம் கூட சமீபத்தில்தான் கேட்கத் துவங்கியுள்ளனர்.
வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையை பயன்படுத்தி, தகுதித் தேர்வு என்ற பூச்சாண்டி காட்டி, பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கும் உத்தி இது. உங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததற்கு நான் பொறுப்பல்ல, உங்கள் குறைதிறனே பொறுப்பு என்று அரசாங்கம், பழியை வேலை தேடி வாடும் இளைஞர்கள் மீதே சுமத்தி, தான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் வழி இது. படித்து விட்டு வெளியே வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தத் தவறுகிற அரசாங்கம் சொல்கிற சாக்கு இது.
குரூப் 1, 2, 3, 4 போன்ற பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவதும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவதும் வேறுவேறு. குரூப் 1, 2, 3, 4 போன்ற பணியிடங்களுக்கு என சிறப்புப் பட்டமோ, பட்டயமோ யாரும் பெறுவதில்லை. அதனால் அந்தப் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே குறிப்பிட்ட பிரிவில் சிறப்புத் திறன் பெற்றுத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு நடத்துவது மோசடி.
தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் விண்ணப்பம் வாங்க கட்டணம் என விண்ணப் பதாரர் ஒவ்வொருவரும் சில நூறு ரூபாய் செலுத்த வேண்டும். இருக்கிற பணியிடங்களைப் போல் பல மடங்கானவர்கள் ஒரு தேர்வு எழுதுகிறார்கள். எவ்வளவு பெரிய கல்லா! 2012 ஜ÷லையில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 6.72 லட்சம் பேர் தேர்வெழுதி 2448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். கேள்வித்தாள் கடினமாக இருந்ததும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதும் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதற்குக் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில் 6.56 லட்சம் பேர் தேர்வெழுதி 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா சிலருக்கு பணி நியமன ஆணை தர, அவர்கள் பணியில் சேர்ந்தனர்.
பட்டப் படிப்பு மற்றும் இன்னபிற படிப்புகள் படிக்கும் பார்வையற்றோர், எல்லோரும் எழுதும் அதே கேள்வித்தாளுக்குத்தான் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கென்று தனி கேள்வித்தாள் எதுவும் தரப்படுவதில்லை. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் வேலை கேட்கிறார்கள். இதில் பணி என்று வரும்போது குறைதிறன் பற்றிய கேள்வி எப்படி முளைக்கிறது? மதிப்பெண் அடிப்படையில், பதிவு மூப்பு அடிப்படையில் வேலை தருவதுதானே முறை? மாற்றுத்திறனாளிகளை குறைதிறனாளிகள் என்று சொல்லும் தமிழக அரசாங்கம் மற்றவர்களையும் சேர்த்துத்தான் துன்புறுத்துகிறது.
தமிழ்நாட்டில் 665 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீடு 16,926 இடங்கள், நிர்வாகத்துக்கு 40,000 இடங்கள் என படிக்கின்றனர். 2012ல் 20,000 பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகும் இன்னும் 20,000 காலி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஓராசிரியர், ஈராசியர் பள்ளிகள் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்கிறது. தகுதித் தேர்வில் கல்வி உரிமைச் சட்டத்தை கறாராக கடைபிடிக்கப் பார்க்கும் தமிழக அரசாங்கம், 30:1 என்ற நிபந்தனையை நிறைவேற்றுமானால் ஆசிரியர் பணியிடங்களுக்கும் பஞ்சமில்லை. தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் பணி நியமனத்தை எந்த அளவுக்கு சிக்கலானதாக, வேலை கேட்டு காத்திருப்பவர்களுக்கு சுமையானதாக மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு மாற்றியிருக்கிறார்கள். தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை லாபம் பார்க்க அனுமதித்துவிட்டு அந்த நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி படித்து நட்டப்பட்டு போனவர்களை மேலும் நட்டத்துக்கு, துன்பத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.
கல்வியின் தரத்தை உயர்த்த ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. அதாவது, தொகுப்பூதியம் என்ற பெயரில் நாடு முழுவதும் அரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் அற்பசொற்ப ஊதியத்துக்கு வேலை செய்து கொண்டிருக்கும்போது, அவர்கள் பணிநிரந்தர கோரிக்கைகளுக்கு காவல்துறை குண்டாந்தடி கள் பதில் சொல்லும்போது, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடுமையான வேலைப் பளுவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளபோது, கல்விச் சூழல் கெட்டுப் போனதற்கு, தரம் குறைந்து போனதற்கு தகுதி குறைந்த ஆசிரியர்களே காரணம் என்று மத்திய மாநில அரசாங்கங்கள் சொல்லப்பார்க்கின்றன. மத்திய மாநில அரசுகளின் கல்வி வர்த்தகமய கொள்கைகளின், நடவடிக்கைகளின் விளைவால் நஞ்சேறிப்போன கல்விச் சூழலில், மேலும் மேலும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும்போது, நாட்டின் கல்வித் தரமே குறைந்து வரும்போது, அதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை குற்றம் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள். உலகின் முதல் 200 உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ஓர் இந்திய நிறுவனம் கூட இல்லை என்று குடியரசுத் தலைவர் கவலைப்படுகிறார். பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் இந்திய கல்விச் சந்தையில் அனுமதிக்கப்பட்டால் நாட்டின் கல்வித் தரம் எங்கேயோ போய்விடும் என்பது அவர் சொல்ல வருகிற தீர்வு. ஆரம்பப் பள்ளிகளைக் கூட முறையாக நடத்த முடியாதவர்கள் உயர்கல்வி நிறுவனங்களை நடத்தும் திறன் அற்றவர்களாக பார்வையற்றவர்களாக, கொள்கையற்றவர்களாக இருப்பதுதான் காரணம் என்பதை மறைக்க முயற்சி செய்தாலும் கத்திரிக்காய் முளைத்து கடைக்கு வந்துவிடுகிறது.
திரைப்பட நூற்றாண்டு விழாவுக்கு எதற்கு ரூ.10 கோடி என்று தேநீர் கடைகள் வரை மக்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த விழாவின் துவக்க அமர்வு, இறுதி அமர்வு என்று கலந்து கொண்டு விருதுகள் கொடுத்து, விருது பெற்றுக் கொள்ள நேரம் ஒதுக்கிய முதலமைச்சர், பார்வையற்றவர்களை ஒரு முறை ஏன் பார்க்கக் கூடாது என்றும், அந்த ரூ.10 கோடியை பார்வையற்றோர் கோரிக்கையை நிறைவேற்ற ஒதுக்கலாமே என்றும் மிக இயல்பாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் காதுகளுக்கு இந்தக் கேள்விகள் உடனிருப்போர் சொல்லித்தான் எட்ட வேண்டும் என்று அவசியமில்லை. பொதுபுத்தி போதுமானது.
போராட்டக்காரர்களும் முதலமைச்சரை சந்திக்க விடு என்று முழக்கம் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டின் ஆதிபராசக்தி ஜெயலலிதாவின் கடைக்கண் பார்த்தால் அமைச்சர்களும் அதிகாரிகளும் எழுந்து நின்று சல்யூட் அடிக்கும்போது, பார்வையற்றவர்களைப் பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் முடிவு செய்துவிட்டால், அவரை தடுக்கும் துணிவு அரசாங்க அமைப்பில் யாருக்கு இருக்கிறது? உண்மையில், வீதியில் இறங்கி போராடுபவர்கள்பால் குற்றமய அலட்சியம் காட்டுபவர் ஜெயலலிதாதான் என்பதை போராட்டக்களத்தில் இருக்கும் பார்வையற்ற மாணவர்களும் பட்டதாரிகளும் அம்பலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
10 நாட்களுக்கு மேல் நடந்து கொண்டிருக்கிற பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்ட தாரிகள் போராட்டம் அவர்களுக்கான உடனடி குறைந்தபட்ச கோரிக்கைகளை வலியுறுத்துகி றது என்றாலும், தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை பற்றிய பல கேள்விகளை முன்னிறுத்தியுள்ளது. தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டின் ஆசிரியர் மத்தியில் எழுந்துவிட்டது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப் பட வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். தமிழ்நாடு பற்றியெறிகிறது. ஜெயலலிதா பிடில் வாசிக்கிறார்.
பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதித் தேர்வு எதற்கு என்பதில் இன்று பார்வையற்ற மாணவர்களும் பட்டதாரிகளும் கோரிக்கை எழுப்பவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி பெற்றவர்கள் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்கு போராட்ட வடிவம் தர வேண்டியுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி அவர்களை ஏமாற்றும் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டியுள்ளது.
பார்வையற்றோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளித் துள்ள தமிழக அரசு தகுதித் தேர்வில் யாருக்கும் எந்த சலுகையும் தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தகுதியற்றவர்கள் ஆட்சியில் இருப்பதால் தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். புறக்கணிக்கப்படுபவர்கள் தங்களை புறக்கணித்தவர்களை உரிய நேரத்தில் புறக்கணிப்பார்கள்.