2013 செப்டம்பர் 22 - 26 தேதிகளில் சென்னையில் நடந்த அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக்கின் 17ஆவது கட்சி காங்கிரசுக்கு இகக (மாலெ) (விடுதலை) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா அனுப்பிய வாழ்த்துச் செய்தி. மத்திய கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலக் கமிட்டிச் செயலாளருமான தோழர் எஸ்.பாலசுந்தரம் மாநாட்டில் கலந்து கொண்டார்.
தோழர் தேபபிரதா பிஸ்வாஸ்
பொதுச் செயலாளர்
அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக்
அன்புள்ள தோழரே,
2013 செப்டம்பர் 22 - 26 தேதிகளில் சென்னையில் அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக்கின் 17ஆவது கட்சி காங்கிரஸ் நடைபெறுகிறதென்றும் அதன் ஓர் அமர்வு இடதுசாரி ஒற்றுமை என்ற முக்கியமான பிரச்சனை பற்றி விவாதிக்க ஒதுக்கப்படுகிறது என்றும் அறியப் பெற்று மகிழ்ச்சியடைந்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் இந்த அமர்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை. மத்திய கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலக் கமிட்டிச் செயலாளருமான தோழர் எஸ்.பாலசுந்தரம் எங்கள் கட்சி சார்பாக இந்த அமர்வில் கலந்துகொள்வார்.
நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளன; நாட்டை ஓர் ஆழமான நீடித்த நெருக்கடியில் தள்ளியுள்ளன, நாட்டின் விலைமதிப்பற்ற செல்வாதாரங்களை நாசப்படுத்துவது அழித்துவிடுவது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை பறித்துவிடுவது, மகா ஊழல்கள் மற்றும் தங்குதடையற்ற கார்ப்பரேட் சூறையாடல் ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகியுள்ளன. நாட்டின் அரசியல் சுதந்திரத்தை, பொருளாதார சுயசார்பை வலுப்படுத்துவதற்கு பதிலாக, ஆளும் வர்க்கங்கள், ஏகாதிபத்திய நலன்களுக்கும் சதிகளுக்கும் அடிபணியும் கொள்கைகளுக்கு நாட்டை உட்படுத்திவிட்டன.
பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, மக்கள் விரோத சட்டங்கள் இயற்றுவதில், மக்கள் இயக்கங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வன்முறை உட்பட கடுமையான அரசு ஒடுக்குமுறையால் நசுக்கப்படுவதில், அதிகரித்த அளவிலான சுயேச்சதிகார முறையில் ஜனநாயகம் மறுக்கப்படுவதில், ஆளும் வர்க்கக் கட்சிகள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்துகொள்வது என அரசியல் அதிகரித்த அளவில் இறுக்கமாக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் மதவெறி பாசிச சக்திகள் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட மீண்டும் முயற்சி செய்கின்றன. மதவெறி வன்முறை மற்றும் கார்ப்பரேட் சூறையாடல் என்கிற நச்சுத்தன்மை கொண்ட கலவை பாசிச அளவுகளை அடையக் கூடிய அச்சுறுத்தலை நாம் பார்க்கிறோம்.
இந்த கார்ப்பரேட் - ஏகாதிபத்திய தாக்குதல் மற்றும் பாசிச அச்சுறுத்தலுக்கு மக்கள் எதிர்ப்பை கட்டமைப்பது என்ற கேள்வி இந்தக் கட்டத்தில் மிகவும் முக்கியமானது. இந்த இலக்கை நோக்கிச் செல்ல இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை வலுப்பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கட்டாய நிலப்பறிக்கெதிரான விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள் எதிர்ப்பு, கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் விரோதக் கொள்கைகள் பின்னோக்கித் திருப்பப்படுவதற்கான ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கம், ஊழல் மற்றும் கார்ப்பரேட் கொள்ளைக்கெதிரான மாணவர் - இளைஞர் எழுச்சியின் அறிகுறிகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான பெண்களின் நாடுதழுவிய அறுதியிடல், சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக அதிகரித்து வருகிற விழிப்புணர்வு என இவை அனைத்தும் இன்னும் கூடுதலான, இன்னும் வலுவான இடதுசாரி ஒற்றுமைக்கான தேவை மற்றும் வாய்ப்பை முன்னிறுத்துகின்றன.
மக்கள் எதிர்ப்பின் இந்த நிகழ்ச்சிநிரலை இடதுசாரிகள் முதல் முன்னுரிமையாக கருத வேண்டும் என்றும் இடதுசாரிகளின் தேர்தல் செயல்தந்திரம் இந்த மகத்தான இலக்குக்கு கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
அனைத்திந்திய அல்லது பிராந்திய ஆளும் கட்சிகளுடனான எந்த தேர்தல் புரிதலும் இந்த எதிர்ப்பை பலவீனப்படுத்தி இடதுசாரிகளின் போராட்ட அடையாளத்தை மங்கச் செய்யவே உதவும். இடதுசாரி ஒற்றுமை தேர்தல் அவசரத்தின், அரசியல் சந்தர்ப்பவாதத்தின் கைதியாக மாறி விடக்கூடாது.
அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக்கின் 17ஆவது கட்சி காங்கிரஸ், இடதுசாரிகளின் ஒற்றுமையை, போராட்ட வலிமையை, உறுதியை வலுப்படுத்தும் இயக்கப்போக்குக்கு பங்காற்றும் என நம்பிக்கை தெரிவிக்கிறோம். உங்களது 17ஆவது காங்கிரசில் கலந்துகொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுசாரி ஒற்றுமை மற்றும் மக்கள் எதிர்ப்பு என்ற மகத்தான கடமைக்கு எங்கள் முழுமையான கடப்பாட்டை மறு உறுதி செய்கிறேன்.
தோழமை வாழ்த்துக்களுடன்
திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர்
இகக(மாலெ) (விடுதலை)