COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 15, 2013

நவதாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக

உழைப்பவர் எவரானாலும் குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000 வழங்கு!

நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் வேலை செய்யும்
ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்து!

போனஸ் மற்றும் பணிக்கொடை உச்சவரம்பை நீக்கு!

டெல்லியில் நடந்த அனைத்து மய்ய தொழிற்சங்க கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் மீது செப்டம்பர் 25 அன்று நடத்தப்பட்ட அனைத்து மய்ய தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களில் ஏஅய்சிசிடியு பங்கேற்றது.

கோவையில் ஏஅய்சிசிடியு பெரும் சக்தியாக கலந்து கொண்ட 2,000 பேர் அணி திரண்ட அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்ட பிரிக்கால், சாந்தி கியர்ஸ் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க தொழிலாளர்கள் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், உரையாற்றினார்.

சென்னையில் செப்டம்பர் 25 அன்று ஏஅய்சிசிடியு, சிஅய்டியு, ஏஅய்டியுசி, எல்பிஎஃப், எச்எம்எஸ், பிஎம்எஸ், ஏஅய்யுடியுசி மற்றும் அய்என்டியுசி ஆகிய தொழிற்சங்க தொழிலாளர்கள் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார் உரையாற்றினார்.

சேலத்தில் அனைத்து மய்ய தொழிற்சங்கங்களையும் சேர்ந்த 1500 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு சார்பில்  கரூரிலிருந்து மின்வாரிய ஊழியர்களுடன் கட்டுமானம், கிராமப்புற அமைப்புசாரா தொழிலாளர்கள் என நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். மாநிலத் துணைத் தலைவர் தோழர் சந்திரமோகன் உரையாற்றினார்.

திருச்சியில் பல்வேறு மய்ய தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர்களுடன், விராலிமலை சன்மார் மற்றும் ரானே தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் தோழர் தேசிகன் உரையாற்றினார்.

திருநெல்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைக் குழுவிலிருந்து ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் ரமேஷ்  உரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர்  தோழர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

Search