COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

அரசாணை 92அய் அமல்படுத்து !

அரசாணை 92அய் அமலாக்கக் கோரி புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததுடன் மக்கள் மன்றத்தில் பல்வேறு போராட்டங்கள் கட்டமைத்து வருகின்றன.

செப்டம்பர் 13 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் பட்டினிப் போராட்டம் நடத்தின. 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். இககமாலெ திருவள்ளூர், சென்னை மாவட்டச் செயலாளர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், எஸ்.சேகர், இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் எஸ்.இரணியப்பன் மற்றும் சென்னை மாவட்டக் குழு உறுப்பினர்கள், அகில இந்திய மாணவர் கழக முன்னணி தோழர்கள், புரட்சிகர இளைஞர் கழக முன்னணி தோழர்கள், தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர், பொறியாளர் சங்க பொதுச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் கங்காதரன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி நிறைவுரையாற்றினார்.

Search