ஜெயா தொலைக்காட்சியின் நேர்முகம் நிகழ்ச்சியில் செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்ட பிரபலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன். தனது அடையாளமாக அவர் காட்டிக்கொள்ளப் பார்க்கும் சிவப்புத் துண்டுடன் தோன்றினார். ரபி பெர்னார்டுடன் கலந்துரையாடினார். கலந்துரையாடலுக்கான பொருள் இந்திய பொருளாதார நெருக்கடி. பார்வையற்ற மாணவர்களும் பட்டதாரிகளும் தமிழ்நாட்டின் காவல் துறையினரால் அன்றாடம் பந்தாடப்படும் சூழலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்திய வளம், குறிப்பாக மனித ஆற்றல், இவற்றைக் கொண்டு நாம் பிற நாடுகளுக்கு கொடுக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதை தலைகீழாக மாற்றி நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளி கார்ப்பரேட் சேவையில், ஊழலில் திளைக்கிற, மக்களை வஞ்சிக்கிற அய்முகூ ஆட்சியை ஒவ்வோர் அம்சத்திலும் அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்துப் போட்டு அம்பலப்படுத்தினார் தோழர் தா.பாண்டியன். இறுதியாக, மக்களுக்கான ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில உதாரணங்கள் சொன்னார்.
இங்குதான் அவர் அணிந்திருந்த சிவப்புத் துண்டுக்கு சோதனை ஏற்பட்டது.
அவர் சொன்னார். ‘அம்மா உணவகத்தில் பள்ளிக் கூட குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டி ருந்தார்கள். நான் அவர்களிடம் வீட்டில் நீங்கள் சாப்பிடவில்லையா என்று கேட்டேன். அம்மா காலை ஆறரை மணிக்கு வேலைக்குச் சென்று விட்டார். பத்து ரூபாய் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். நான் அய்ந்து ரூபாய்க்கு இங்கு இட்டிலி சாப்பிட்டேன். மீதி அய்ந்து ரூபாய் இருக்கிறது. அதை அம்மாவிடம் திருப்பிக் கொடுப்பேன் என்று அந்தக் குழந்தை சொன்னது. எனது வீட்டில் வேலை செய்கிற இரண்டு பேர் அம்மா உணவகத்தில்தான் சாப்பிடுகிறார்கள். எனது மகளைப் பற்றிய கவலையே எனக்கில்லை. தாலிக்கு தங்கமும் அய்ம்பதாயிரமும் ரூபாயும் கிடைக்கும் என்று எனது வீட்டில் வேலை செய்கிற பெண் சொல்கிறார்’.
தோழர் தா.பாண்டியன் இதைச் சொல்லும்போது, தங்கள் ஆதரவில் இருக்கும் ஆட்சி இப்படியெல்லாம் செய்கிறது என்று அவர் முகத்தில் பெருமிதம். அந்த பெருமிதத்தோடு, ஒரு மாநிலத்தில் மக்கள் குறை தீர்க்க, அவர்களை மகிழ்வுறச் செய்ய இப்படிச் செய்ய முடியும் என்றால் நாடு முழுவதும் இப்படிச் செய்ய முடியாதா என்று கேட்டார். இந்த மாநிலத்தில் செய்யப்பட்டதும் கொள்கை என்றெல்லாம் அறிவிக்கப்படவில்லை, நேரடியாக நடைமுறைப் படுத்தப்பட்டது என்று சொல்லி அந்த நடைமுறைக்கும் தனது கருத்துக்கும் வலுவூட்டினார். மாநிலங்களில் இதுபோன்று வழிகாட்டுபவர்கள் எல்லாம் சேர்ந்து இடதுசாரிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது செயல்திட்டத்தை இறுதியாகச் சொல்லி முடித்து விடை பெற்றார்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தபோது, ராஜ்யசபா சீட் தான் தவறிப் போச்சு, லோக் சபாவிலயாவது இடம் புடிச்சுடணும் என்ற வாசகங்களுடன் வெளியான கருத்துப்படம் ஒன்று தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது. இது மட்டுமே பிரச்சனையல்ல. ஒரு ரூபாய் இட்டிலியும் தாலிக்குத் தங்கமும் மக்கள் படும் துன்பத்துக்கு, பெண்கள் படும் துன்பத்துக்கு தீர்வு என்று சொல்லப் பார்ப்பது, அதுவும் சிவப்புத் துண்டை அணிந்துகொண்டு சொல்வது பெரும்பிரச்சனை.
விலை உயர்வு, மக்கள் கையில் வாங்கும் சக்தி இல்லாமை ஆகியவை பற்றிய ஜெயலலிதா வின் ஒப்புதல்தான் மலிவு விலை இட்டிலி என்பதை, சுமங்கலித் திட்டத்தில் தமிழகச் சிறுமிகள் சிதைந்துபோவதை, ஜெயலலிதா ஆட்சியின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை மலிவான இட்டிலிக் குவியலில் மறைத்துவிட ஜெயலலிதா முயற்சி செய்கிறார் என்பவற்றை எடுத்துச் சொல்லி, அய்முகூ அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தது போல, ஜெயலலிதா ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவார் என்றுதான் ஜெயலலிதா ஆட்சியின் நிஜமான அணுகுமுறையை அனுபவிக்கிற மக்கள், சிவப்புத் துண்டு அணிந்த ஒருவரிடம் எதிர்ப்பார்ப்பார்கள்.
மாறாக, தொலைக்காட்சி போன்ற ஒரு வலுவான ஊடகத்தில் மக்களை ஒடுக்குகிற, ஏமாற்றுகிற ஜெயலலிதா அரசின் நடவடிக்கை களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சிவப்புத் துண்டு அணிந்திருப்பது, தமிழக மக்களுக்கும் சிவப்புத் துண்டுக்கும் வந்த சோதனை என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?