COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

மாலெ கட்சி தலைவர்கள் மீதான பொய் வழக்கைத் திரும்பப் பெறு

கெடிலத்தில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும் விழுப்புரம் மாவட்ட மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதனால் ஆத்திரமுற்ற குற்றவாளி தரப்பினர் விழுப்புரம் மாவட்ட மாலெ கட்சி செயலாளர் தோழர் எம்.வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கலியமூர்த்தி மற்றும் தோழர் கந்தசாமி ஆகியோர் மீது கத்தி கொண்டு தாக்க வந்தார்கள் என்று பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 26 அன்று கெடிலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

350 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் எம்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Search