COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 15, 2013

மக்கள் திரள் கல்வி வகுப்புக்கள்

சென்னையில் அக்டோபர் 2 அன்று அம்பத்தூரிலும் திருபெரும்புதூரிலும் இரண்டு கல்வி முகாம்கள் நடந்தன. கட்சியின் 9ஆவது காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் வர்க்க இயக்கம்: சூழல், கடமைகள், வாய்ப்புக்கள் என்ற தீர்மானங்கள் மீது இந்த வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இந்த வகுப்புக்களுக்கான விவாதக் குறிப்புக்கள் பிரசுரிக்கப்பட்ட செப்டம்பர் மாத தொழிலாளர் ஒருமைப்பாடு பத்திரிகை 500 பிரதிகள் மீண்டும் அச்சிட்டு, வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

டிஅய்டிசி, ஆன்லோடு கியர்ஸ், இன்னோவேட்டர்ஸ், சாய்மிர்ரா, ஸ்டான்டர்டு கெமிக்கல்ஸ், ஜெய் இன்ஜினியரிங், இன்டோடெக், பாலாஜி மோல்ட், கிளைமேக்ஸ் புராடக்ட்ஸ், காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, சென்னை ஜிம்கானா கிளப், அரசு அச்சகம், பிஅண்டுசி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர் முன்னோடிகள், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சங்க முன்னோடிகள், சென்னை கட்சி உறுப்பினர்கள், முன்னணிகள் என 350 பேர் வகுப்பில் கலந்துகொண்டனர்.

ஒருமைப்பாடு இதழில் உள்ள 3 பக்க குறிப்புக்களை 11 தோழர்கள் வாசிக்க, அரசியல் தலைமைகுழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி ஒவ்வொரு பகுதியிலும் விளக்கி பேசினார்.

சென்னையில் கட்சி ஆவணத்தின் மீது இத்தனை முன்னோடிகள் படித்து புரிந்து கொண்டது இதுதான் முதல்முறை. ஆனாலும் எந்த சலசலப்பும் இடைவேளையும் இல்லாமல் நடைபெற்றது. தீப்பொறி வாசகர் வட்டக் கூட்டங்களை பெரும்திரள் பேரவைகளில் படிக்க விவாதிக்க முடியும் என்பதை உணர்த்தியது இக்கூட்டம்.

இதே தலைப்பில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் தொழிலாளர் கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன. 05.10.2013 அன்று பள்ளிபாளையத்தில் 40 விசைத்தறி தொழிலாளர்கள் பங்கு பெற்ற கல்வி வகுப்பு நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் விளக்கிப் பேசினார்.

06.10.2013 அன்று குமாரபாளையத்தில் நடைபெற்ற கல்வி வகுப்பில் விசைத்தறி தொழிலாளர்கள் 30 பேருடன் திருப்பூர் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். தோழர்கள் ஏ.கோவிந்தராஜ் மற்றும் கே.கோவிந்தராஜ் ஆகியோர் விளக்கமளித்துப் பேசினர். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன் தொகுப்புரையாற்றினார்.

Search