சீனப் புரட்சியின் கட்டம் மற்றும் வகைமாதிரி இயல்பு
1. எந்தப் புரட்சிக்கும் அதன் கட்டத்தைத் தீர்மானிப்பது என்பது புரட்சிக்கு முந்தைய சமூகத்தின் புறநிலைரீதியான மதிப்பீட்டுடன் தொடர்புடையது.
சீனாவைப் பொறுத்தவரை, அது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்லும் கட்டத்தில் இருந்தது. இந்த இயல்பான மாறிச் செல்லுதலில் எந்த தெளிவான இறுதிநிலையும் ஏற்படும் முன், அந்த இயக்கப்போக்கில் ஏகாதிபத்தியமும் நிதி மூலதனமும் தலையிட்டன.
இந்த விசயத்தில் சீனா விதிவிலக்கு இல்லை என்றாலும், உலகம் முழுவதும், குறிப்பாக வளர்ச்சியடையாத மற்றும் பின்தங்கிய நாடுகளில், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டமாக எழுந்த பிறகு, அது குறிப்பிடத்தக்க விதத்தில் இருந்தது. உண்மையில், அதைத் தொடர்ந்து, வர்த்தகப் புரட்சி மூலம் மூலதனத் திரட்சி என்ற இயக்கப்போக்கில் காலனிமயமாக்க இயக்கப் போக்கும் துவங்கியது.
முதலாளித்துவ வளர்ச்சியின் விதிகள்படி, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மூலதனத் திரட்சி, உற்பத்தி சக்திகளிடம் இருந்த பரந்த உற்பத்தியாளர்களைப் பிரிப்பதன் மூலம் உழைப்புச் சந்தையை உருவாக்குவது, உற்பத்தி இயக்கப்போக்கில் நவீன விஞ்ஞானத்தைப் பொருத்துவது போன்ற நிலைமைகள் அதற்கு வேண்டும்.
அரசியல் இயக்கப்போக்கைப் பொறுத் தவரை, நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்தைய பிற்போக்கு சக்திகளை களைந்தெறிய ஒரு புரட்சி, அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி வேண்டும். முதலா ளித்துவ வளர்ச்சிக்கான இந்த நிலைமைகள் நிறைவேறும் முன்னரே சீனத்தில் ஏகாதிபத்திய தலையீடும் துவங்கிவிட்டது. எனவே, சீனத்தில் மாறிச் செல்லும் கட்டத்தின் இயல்பான நிகழ்வுப் போக்கு தடுக்கப்பட்டு, அரை - நிலப்பிரபுத்துவம் மற்றும் அரை - காலனியம் என்ற வடிவத்தில் ஒரு வழிவிலகிய, சிதைக்கப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதை வடிவமைக்கப்பட்டது.
எனவே, சீனத்தில் புரட்சியைக் கட்டமைக்கும் கடமையை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்தபோது, முதலாளித்துவ புரட்சி முற்றுபெறவில்லை. ஆனால், மானுட சமூகத்தின் வளர்ச்சி விதிகள்படி, எந்த ஒரு கட்டத்தையும் விட்டுவிட்டுச் செல்லவோ, மறைத்து விடவோ முடியாது. ஆக, சீனப் புரட்சியின் கட்டம் சாரத்தில் ஜனநாயகப் புரட்சியாக இருந்தது. ஆனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்ட இந்த ஜனநாயகப் புரட்சி சிக்கலானதாக இருந்தது.
2. முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகத்தில் இருந்த, முற்போக்கு மற்றும் புரட்சிகர தன்மை கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுத்துவத்தை தூக்கியெறியும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் இயல்பான தலைவனாக இருந்தது. ஆனால், ஏகாதிபத்திய சகாப்தத்தில், வளர்ச்சியடையாத நாடுகளில் எழுந்துவந்த முதலாளித்துவ வர்க்கம் பலவீனமானதாகவும் சார்புத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. 1917ல் ரஷ்ய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, எந்தப் புரட்சியையும் நடத்துவதில் முதலாளித்துவத்துக்கு தயக்கம் ஏற்பட்டது. மேலும், ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறாத நிலையில், ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவத்தின் விளை பொருளாய் பாட்டாளி வர்க்கம் எழுந்தது.
இந்த அனைத்து காரணிகளும் சேர்ந்து, ஜனநாயகப் புரட்சியின் தலைவனாக முதலாளித்துவ வர்க்கம் இருப்பதை பொருத்தப்பாடு இல்லாததாக்கின. நிறைவேற்றப்படாத ஜனநாயகப் புரட்சிக்கு தலைமை தாங்கும் உள்ளாற்றல் கொண்ட ஒரே சக்தியாக பாட்டாளி வர்க்கம் எழுந்தது. இருபதாம் நூற்றாண்டு முதல், ஜனநாயகப் புரட்சி என்ற தளத்தில் இதுவே எழுந்துவரும் போக்காக மாறியது. ஆக, வரலாற்றின் இயங்கியல், முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டும் சோசலிசப் புரட்சியின் இயல் பான தலைவனான பாட்டாளி வர்க்கத்தை முற்றுப் பெறாத ஜனநாயகப் புரட்சியின் தலை வனாக மாற்றியது.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இந்த புதிய வகை ஜனநாயகப் புரட்சியை ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ என்று மாவோ வரையறுத்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றும் முதல் சோதனைக் களமாக சீனா எழுந்தது.
3. புதிய ஜனநாயகப் புரட்சிக்கு, ஜனநாயகக் கடமை, தேசியக் கடமை என்ற இரட்டைக் கடமைகள் உண்டு. ஜனநாயகக் கடமை, பெரிய தரகு முதலாளித்துவத்தை நிலப்பிரபுத்துவத்துடன் சேர்த்து தூக்கியெறியும் கடமையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தேசியக் கடமை ஏகாதிபத்தியத்தை முறியடித்து தூக்கியெறிவது. இந்த இரண்டு கடமைகளும் தனித்தனிப் பெட்டியில் இருப்பவையோ பிரிந்து இருப்பவையோ அல்ல. மாறாக, முற்றுப் பெறாத ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவது என்ற ஒரே முழுமையான விசயத்தில், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; ஒன்றுடன் ஒன்று இணைந்தவை.
4. நிலப்பிரபுத்துவத்தை தூக்கியெறிவதே புதிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை கடமை என்ற போதிலும், அது, ஏகாதிபத்திய குடையின் கீழ் உள்ள அந்நிய மற்றும் உள்நாட்டு வகை முதலாளித்துவம் இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் புதிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை தனித்துவம். அது, நிலப்பிரபுத்துவத்தை தூக்கி யெறியும் தனி கடமை கொண்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியுமல்ல; முதலாளித்துவத்தை தூக்கியெறியும் தனிப்பட்ட கடமை கொண்ட சோசலிசப் புரட்சியுமல்ல. இதில், ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை கடமைகள், சோசலிசப் புரட்சியின் சில கூறுகளோடு பின்னிப் பிணைந்துள்ளது.
உதாரணமாக, பெரிய நிலப்பிரபுக்களின் நிலத்தைப் பறிப்பதன் மூலம் முழுமையான நிலச்சீர்திருத்தத்தை நிறைவேற்றுவது மட்டுமின்றி, சோசலிச உணர்வின் விதைகளை புகுத்த, உழுபவர்களுக்கு (குறிப்பாக சிறு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு) நிலம் விநியோகிப்பதன் அடிப்படையில் கூட்டுறவு இயக்கத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். அல்லது பெருமூலதனம் மற்றும் அந்நிய மூலதனத்தைக் கட்டுப்படுத்துவதுடன் தொழிலாளர்களின் திறன்மிக்க ஈடுபாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில்களை ஜனநாயகரீதியாக நிர்வகிப்பது என்பதையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
இதுபோன்ற பின்னிப்பிணைந்துள்ள கடமைகளால், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் புதிய ஜனநாயகப் புரட்சி, இடைவெளி ஏதுமின்றி, ஒரு தொடர் இயக்கப்போக்காக, சோசலிசப் புரட்சியை நோக்கிச் செல்லும்.
எனவே, சீனத்தைப் பொறுத்தவரை, புதிய ஜனநாயகப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையில் சீனச்சுவர் ஏதுமில்லை. மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், அது ஒரு தொடர்ச்சியான, சுமுகமான மாறிச் செல்லுதலாக இருந்தது. அது, சீன சமூகத்தின் வளர்ச்சி பற்றிய புறநிலை ரீதியான மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் மேல்கட்டுமானத்தின் பிற அம்சங்கள் ஆகியவற்றில் கொள்கைகள் மாற்றம் என்ற இயக்கப்போக்கில் பிரதிபலிக்கும்.
புதிய ஜனநாயகப் பொருளாதாரத்தின் உள்ளடக்கம், கட்டுப்படுத்தப்பட்ட முதலா ளித்துவம் மற்றும் சோசலிசத்தின் கூறுகள் ஆகியவற்றின் ஒரு வகைமாதிரி சேர்க்கையாக இருக்கும். மூலதனத்தை முறைப்படுத்துதல், நில உடைமையை சமனாக்குதல், ஒருபோதும் ஒரு சிலருக்கு சொந்தமாக இருத்தல் என்ற நிலை இல்லாமை என்ற பாதையில் அது வளரும். ஒரு சில முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் மக்களின் வாழ்வுரிமை மீது மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது. மறுபுறம், புதிய ஜனநாயக அரசு, பெரிய வங்கிகள், ஆலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் உடைமையாளராகவும் இருக்க வேண்டும்.
சீனத்தின் புதிய ஜனநாயகக் குடியரசு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் கீழான முத லாளித்துவ குடியரசின் பழைய அய்ரோப்பிய - அமெரிக்க வடிவம் கொண்டதாகவும் இருக் காது; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழான சோவியத் வகை சோசலிச குடியரசு போலவும் இருக்காது. மாறாக, காலனிய, அரை - காலனிய நாடுகளில் நடக்கும் புதிய ஜனநாயக புரட்சி போன்ற புரட்சிகளில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்துக்கு, ஒரு மூன்றாவது வடிவத்தை கடைபிடிக்க வேண் டும். இந்தக் குடியரசின் உள்ளடக்கம், ஜனநாயக மத்தியத்துவத்தின் தலைமையிலான, புதிய ஜனநாயகப் புரட்சியின் பின்னணியில், அனைத்து புரட்சிகர வர்க்கங்கள் மற்றும் தட்டுக்களின் கூட்டு சர்வாதிகாரமாக இருக்கும்.
இந்த புதிய ஜனநாயகக் கலாச்சாரம், புதிய ஜனநாயகப் பொருளாதாரம் மற்றும் அரசியலின் கருத்தியல் ரீதியான பிரதிபலிப்பாகும். உள்ளடக்கத்தில், இந்த புதிய ஜனநாயகக் கலாச்சாரம், தேசிய அளவிலான, விஞ்ஞான பூர்வமான வெகுமக்கள் கலாச்சாரமாகும்.
தேசிய பரிமாணம், ஏகாதிபத்திய ஒடுக்கு முறையை எதிர்த்து, சீன தேசத்தின் கவுரவம் மற்றும் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால், சீனத்தின் இயல்பான கலாச்சாரத்தின் ஆக்கபூர்வமான பாரம்பரியத்துடன் அது சுருங்கிவிடுவதில்லை; மாறாக, அழுகிப்போன ஏகாதிபத்திய கலாச்சாரத்துக்கு நேரெதிராக, பிற நாடுகளின் சோசலிச மற்றும் புதிய ஜனநாயக கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறது.
விஞ்ஞானபூர்வ பரிமாணம், அனைத்துவிதமான நிலப்பிரபுத்துவ மற்றும் மூடநம்பிக்கை கருத்துக்களை எதிர்க்கிறது. அது விவரங்களில் இருந்து உண்மைகளை கண்டறிவதை வலியு றுத்துகிறது. ஆயினும் பழையவற்றை முழுமையாக நிராகரித்துவிடாமல், ஜனநாயக மரபை உயர்த்திப் பிடிக்கிறது.
வெகுமக்கள் பரிமாணம், அதன் பரந்த வெகுமக்கள் இயல்பை பிரதிநிதித்துவப்படுத்து கிறது. அது பரந்த உழைக்கும் மக்களுக்கு சேவை செய்கிறது. அவர்களின் போராட்டங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது; அவர்களின் தன்னெழுச்சியான படைப்பில் இருந்து மூலப் பொருளை சேகரித்து, முழுமையாக்கப்பட்ட கலாச்சார விளைபொருட்களை, அவர்கள் மத்தியில் பரவலாக்குவதன் மூலம் அவற்றை சோதிக்கிறது.
ஆக, தேசிய, விஞ்ஞான மற்றும் வெகுமக்கள் கலாச்சாரம் - மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு கலாச்சாரமே புதிய ஜனநாயகக் கலாச்சாரம் - சீன தேசத்தின் புதிய கலாச்சாரம்.
சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய அம்சங்களும்.... அடுத்த இதழில்