அமைப்பு விவகாரங்களில் தன்னெழுச்சிக்குத் தலை வணங்குவது...
கத்துக்குட்டித் தனம் தற்காலிகவாதம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவது, ஒரு புரட்சிகர வேலை நடையை நிறுவுவது ஆகியவை பற்றி திபு மாநாடு பர்த்வான் கருத்தரங்கம் குறிப்பிட்ட விசயங்கள், தோழர் வினோத் மிஸ்ரா திபங்கர் எழுதியவை போன்றவற்றை இந்தப் பகுதியில் காண்போம். அதற்கடுத்து 9ஆவது அகில இந்திய மாநாட்டின் கட்சி அமைப்பு பற்றிய அறிக்கை, முன்வைக்கிற தீர்வுகளைக் காண்போம்.
• கட்சி கட்டுதல் என்பது நிகழ்கால அன்றாட நடவடிக்கைகளில் வருங்கால கம்யூனிச லட்சியத்தை நுழைப்பதையும், ஒரு கம்யூனிஸ்ட்டின் கூட்டு வாழ்க்கை நடையைப் பேணி வளர்ப்பதையும் குறிக்கிறது. ஆகவே இது வெறுமனே ஓர் அமைப்புப் பிரச்சனை அல்ல. கம்யூனிஸ்ட் கருத்தியலுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள ஒரு பிரச்சனை ஆகும்.
• கம்யூனிஸ்ட்கள் தற்போதைய இயக்கத்தில், இயக்கத்தின் எதிர்கால நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, கவனித்துக் கொள்ளும்போது, தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தியல்ரீதியான ஒன்றுபடுதல் நிகழ்கிறது; இந்தக் கருத்தியல்ரீதியான ஒன்றுபடுதல், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாயத (கருத்து வடிவத்தில் மட்டும் அல்லாத பொருள் வடிவத்திலான) அமைப்புரீதியான அய்க்கியத்தால் மறு உறுதி செய்யப்டுகிறது.
• இயல்பாகவே எந்த கருத்தியல் ரீதியான நசிவும் தாமதமாக அல்லாமல் உடனடியாகவே அமைப்பு ரீதியான பலவீனத்திற்கும் ஒற்றுமையின்மைக்கும் இட்டுச் செல்லும். (அடுத்து செல்லும் முன், மாவோ வினோத் மிஸ்ரா சொன்ன, தொடர்புடைய இரு விசயங்களைப் பார்ப்பது நல்லது.
‘கட்சியில் அமைப்புரீதியாக மட்டும் சேர்ந்து கருத்தியல் ரீதியாகச் சேராத பல தோழர்கள் உள்ளனர்’. - மாவோ.
‘கம்யூனிஸ்ட் கட்சியில், உடல்கள் கட்சிக்குள் இருக்கிற, ஆன்மாவைப் புரட்சிக்கு அர்ப்பணித்த, ஆனால், மனங்கள் அளவில் முதலாளித்துவத் தாராளவாதக் கருத்துலகில் வாழும் தோழர்கள் உள்ளனர்’. - வினோத் மிஸ்ரா)
ஆனால் கருத்தியல் ஒன்றுபடுதல், இயல்பாக, அமைப்புரீதியான ஒன்றுபடுதல் ஒத்திசைவு உறுதிப்படுதல் ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லாது. இங்கேதான், மிகவும் துல்லியமாக அமைப்பு என்ற தளத்திற்கு கருத்தியல் போராட்டத்தை நீட்டிக்க வேண்டும். கட்சி கட்டுதலுக்கான உணர்வுபூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
• கட்சி உணர்வு என்பது, நாம் நீண்ட காலம் போராடிப் பெற்ற மரபுகளிலிருந்து பண்புகளிலிருந்து பெறப்படுகிறது. குட்டி முதலாளித்துவ ஊசலாட்டம், ஸ்திரமின்மை மற்றும் முதலாளித்துவ அறிவுஜீவி அகங்காரம் தனிநபர்வாதம் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு விடாப்பிடியான போராட்டம் நடத்துவதன் ஊடேதான், அதனைத் தக்க வைக்க முடியும், உயர்த்திப் பிடிக்க முடியும்
• சந்தர்ப்பவாதிகளும் அராஜகவாதிகளும் கேந்திரமான கட்சி கட்டுதல் கடமையை, வடிவம் மற்றும் சம்பிரதாயத்தால் பிடித்தாட்டப்படும் விசயங்கள் எனச் சிறுமைப்படுத்து கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்; மாறாக, இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் கட்சி வேலை யின் உள்ளடக்கத்திற்குக் கூடுதல் கவனம் வேண்டும் என்கிறார்கள்.
• லெனின், நமது வேலையின் அமைப்பு அதன் உள்ளடக்கத்திற்குப் பின் தங்குகிறது என்கிறார். அவர் மேலும் எச்சரிக்கிறார்;
‘வடிவத்தின் வளர்ச்சியுறாத மற்றும் ஸ்திரமற்ற குறை இயல்பு, உள்ளடக்கத்தை மேற்கொண்டு வளர்த்தெடுக்கும் எந்த காத்திரமான நடவடிக்கையையும் சாத்தியமே இல்லை என்றாக்குகிறது; இது ஒரு வெட்கக்கேடான தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆற்றல் விரயத்திற்கும் சொல் மற்றும் செயலுக்கிடையில் வேறுபாடு உருவா வதற்கும் இட்டுச் செல்கிறது’. (சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு என்பதை, திட்டத்திற் கும் திட்ட அமலாக்கத்திற்கும், இலக்குகளுக்கும் அவை அமலாவதற்கும் இடையிலான வேறுபாடு எனக் கூடப் புரிந்து கொள்ள முடியும்தானே!)
தன்னெழுச்சிக்கு எதிரான புரட்சிகர வேலைநடை பற்றி வினோத் மிஸ்ரா சொல்லும் இரு விசயங்களைக் காண்போம்.
• ‘பொதுவான அரசியல் மற்றும் கிளர்ச்சி அணிதிரட்டல்களோடு, மக்கள் திரள் இயக்கங் களினூடே தொடர்ந்து எழுகிற புதிய சக்திகளுக்கு அழுத்தம் வைப்பது, அவர்களை கட்சிக் கல்வி மற்றும் கட்சி அமைப்புக்குள் கொண்டு வருவது, கீழ் மட்டங்களில் கட்சி செயல் வீரர் குழுக்களை கட்சிக் கிளைகளை கட்டுவது செயலூக்கப்படுத்துவது ஆகியவை கம்யூனிஸ்ட் வேலை நடையின் சாரமான கூறுகளாகும். இந்தக் கூறுகள் இல்லாத வேலை நடை, ‘இயக்கம்தான் எல்லாம் இறுதி லட்சியம் ஏதுமில்லை’ என்ற அனுமானம் அடிப்படையி லான திரிபுவாத வேலைநடை ஆகும். இயக்கத்தின் செயல்பரப்பை எப்போதும் விரிவுபடுத்துவது அதே நேரம் வேர்க்கால்மட்ட கட்சியமைப்பை செயலூக்கப்படுத்துவது - பார்த்த மாத்திரத்திலான இந்த எதிர்மறைகளின் அய்க்கியமே - கம்யூனிஸ்ட் வேலைநடையின் சாரமாகும்’.
குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் குவித்து வேலை செய்தல் தொடர்பாக:
‘விவகாரம் ஒரு குறிப்பிட்ட பூகோள பரப்பில் கவனம் குவிப்பது மட்டுமல்ல. மாறாக, அது, ‘உணர்வு பூர்வமான வேலைப் பகுதி’ என்ற ஒரு குறிப்பான வேலை நடையைக் குறிக்கிறது’.
‘பல அறிக்கைகள், நிகழ்ச்சிகளுக்குப் பின் ஓடும் தன்னெழுச்சியான வேலை நடையைக் காட்டுகின்றன. கோவில் நகைகள் திருட்டுப் பிரச்சனையிலோ காவிரி நீர் பிரச்சனையிலோ இயக்கம் கட்ட விரைகிறோம். இந்த நிகழ்ச்சிகள் பின்னால் ஓடுகிறோம். இந்த வேலை நடை அடிப்படையில் வளர்க்கப்படும் தோழர்கள், பருவகால ஒரு பகுதித் தன்மை உடைய தோழர்களாக மட்டுமே இருப்பார்கள். இவர்கள் பெரிய நிகழ்ச்சிகள் நடந்தால் செயல்படுவார்கள், மற்ற நேரங்களில் செயல்பட மாட்டார்கள்’.
உணர்வுபூர்வமான (தொலை நோக்கு) திட்டமும் (உடனடி) செயல் திட்டமும், ஒரு நீண்டகால நோக்கு நிலையும் கொள்கைகளும் செயல்தந்திரங்களும் கொண்ட ஒரு குறிப்பிட்ட வேலை நடையின், அன்றாடம் மக்கள் திரள் வேலை பார்க்கும் செயல்வீரர்களைக் கொண்டுள்ள ஒரு வேலை நடையின், முன்மாதிரியாக,’கவனம் குவிக்கப்பட்ட வேலைப் பகுதிகள்’ வளர்க்கப்பட வேண்டும்.
‘மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்திற்குள், ஓர் உணர்வுபூர்வமான கூறை நுழைப் பதற்காகவே, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அப்படி ஒரு விசயம் இல்லாவிடில், கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதற்கான அவசியமே இல்லை’. தன்னெழுச்சிக்கு, மேலோட்டமான மேலாளர் வேலைநடை என்பவற்றிற்கு மாற்று எப்படி இருக்க வேண்டும் என வினாத் மிஸ்ரா குறிப்பிட்ட விசயங்களைக் கவனித்தோம்.
கட்டுரைத் தொடரின் இந்தப் பகுதியில் கட்சி கட்டுதல் தொடர்பான பர்த்வான் கருத்தரங்கில் தோழர் திபங்கர் குறிப்பிட்ட விசயங்களைக் காண்போம்.
‘கட்சி கட்டுதலில் கட்சி மற்றும் கட்டுதல் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளன. கட்டுதல் என்பது படைத்திடுதல் மற்றும் கட்டுமானம் தொடர்பானது. அதற்கு கட்டுப்பாடு, உறுதி, பொறுமை, கடின உழைப்பு, விடாப்பிடியான வேலை, துணிச்சல், நம்பிக்கை மற்றும் லட்சியப் பார்வை என்ற பண்புகள் தேவை. அவநம்பிக்கை மற்றும் கையறு நிலையின் அடிப்படையில் எதனையும் கட்ட முடியாது என்பதால் தான், நாம் புரட்சிகர நம்பிக்கைக்கும் உறுதிக்கும் அழுத்தம் வைக்கிறோம்’.
‘கட்சி என்பது போராட்டம் மற்றும் மாற்றியமைப்பதோடு தொடர்புடையது. ஆனால் இந்தப் போராட்டத்தை நடத்தும் போது நாம் பொறுமையோடு இருக்க வேண்டும். ஓர் ஆக்கப்பூர்வமான கூட்டு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். நாம், சோசலிசம் போல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையும் ஒரு லட்சிய உலகில் கட்டமுடியாது என்பதையும், அதனை ஸ்தூலமான நிலைமைகளில்தான் கட்டமுடியும் என்பதையும் வரலாற்றால் வழங்கப்பட்ட மற்றும் நிகழ்கால சமூகத்தால் வடிவமைக்கப்பட்டு தரப்பட்ட மூலப்பொருட்களின் அடிப்படையில்தான் கட்ட முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்’.
ஆக, கட்சி கட்டுதல் என்பதை, கருத்தியல் அரசியல் அமைப்புக் கடமைகளின் ஓர் ஒருங்கிணைந்த முழுமையாகக் காண வேண்டும். இந்தக் கடமைகளைத் தனித்தனி பெட்டிகளில் போடுவதோ, ஒன்றுக்கு ஒன்று எதிராக நிறுத்துவதோ சரி அல்ல. புரட்சிகர வேலைநடை மட்டுமே, தேர்ச்சிநயம் கொண்ட வேலைநடை மட்டுமே, கட்சி நடவடிக்கை களை மய்யப்படுத்தவும் கட்சியின் எல்லா ஆதாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தவும், நமக்கு உதவும்.