மாலெ கட்சி தருமபுரி மாவட்டக் குழுவில் பணியாற்றி வந்த தோழர் ம.க.பச்சியப்பன் 30.09.2013ல் மரணமடைந்தார். 2006ல் தருமபுரி சட்டமன்ற தேர்தலில் கட்சி போட்டியிட்ட நாள் முதல் தொடர்பில் இருந்து 01.02.2007 முதல் கட்சியில் இணைந்தார்.
தன் இளைய வயதில் நக்சல்பாரி இயக்கத்தில் 1970 முதல் இணைந்து தோழர் பாலனுடன் பல போராட்டங்களில் சிறை சென்றுள்ளார். தோழர் மாப்பிள்ளை, பச்சியப்பன் என்றே இடதுசாரி வட்டத்தில் அறியப்பட்டவர். கந்துவட்டி கொடுமை, விவசாய தொழிலாளர் கூலி உயர்வு, வீட்டுமனை, நில உரிமை போராட்டங்களில் முன் நின்று சிறை சென்றவர். மாலெ கட்சியில் இணைந்து விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டி பஞ்சபள்ளி, பாலக்கோடு, சோகத்தூர், கடகத்தூர் ஊராட்சி மாநாடுகளை நடத்தியுள்ளார்.
63 வயதான அவர் நோய்வாய்பட்டு 30.09.2013 அன்று மரணமுற்றார். கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர் ஏ.கோவிந்தராஜ், வேல்சின்னசாமி, கண்ணகி உள்ளிட்ட இடதுசாரி தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
11.10.2013 அன்று பாலக்கோடு மல்லாபுரத்தில் இடதுசாரி தோழர்கள் பங்கேற்ற இரங்கல் கூட்டம் நடந்தது.