அந்நிய நேரடி முதலீட்டுக்கு
நாட்டின் கதவுகளை அகலத் திறந்து வைத்துவிட்டு, நாடெங்கும் மதவெறி வன்முறை
தலை விரித்தாட வழிசெய்துவிட்டு செங்கோட்டையில் மோடியும், அந்நிய
கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு தமிழகத் தொழிலாளர்களை பலி
கொடுத்துவிட்டு, தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருப்புச்
சட்டத்தை நிறைவேற்றிவிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் ஜெயலலிதாவும் சுதந்திர
தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசப்பற்று உரையாற்றினார்கள்.
ஜனநாயகத்தில் இதற்கு இடமுண்டு.
ஜெயலலிதா பதினான்காவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகச் சொன்னார். பகத்சிங் தியாகத்தை நினைவு கூர்ந்தார். (அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு?) அதற்குப் பிறகுதான் மகாத்மா, மற்றவர்கள். இளைஞர்களை ஈர்க்கிறாரா? அங்கிருந்து தமிழ்நாட்டு சுதந்திரப் போர் தியாகிகள் பட்டியல் ஊடாக அண்ணாதுரை, எம்ஜிஆர் என வந்துவிட்டார். (சுதந்திரத்துக்கு வந்த சோதனை...?)
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டின் காவல் துறை பெருமை பேசும் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் காவல்துறை பெருமையும் சட்டம் ஒழுங்கு சீரும் மட்டும் இடம் பெறவில்லை. யதார்த்தத்துக்கு வழிவிட்டிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என்று ஜெயலலிதா சொன்னாலும், தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், இணையக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம் 2014 என்று இனி அழைக்கப்படவுள்ள குண்டர் சட்டத் திருத்தம், பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்கள் அதிகரித்து வருவதாகச் சொல்கிறது.
சென்ற ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2140 பேர் கைது செய்யப்பட்டனர். 2013 - 2014ல் இந்த எண்ணிக்கை 2,500 என அதிகரிக்கலாம் என காவல்துறையினர் சொல்கின்றனர். இந்த வழக்குகள் தொடர்பான பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும் என்றும் கேட்கின்றனர். அரசு சராசரியாக 2,200 எனக் கணக்கிட்டு, தலா ரூ.8,000 செலவு என்ற அடிப்படையில் ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கியுள்ளது. (http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=48346#sthash.PjD1m6xx.dpuf)
தமிழ்நாட்டில், இந்தச் சட்டத்தின் பெயரிலேயே சொல்லப்படும் விதவிதமான குற்றங்கள் மலிந்திருக்கின்றன. நாளொன்றுக்கு 10 குற்றங்கள் என்று குறைவாக கணக்கிட்டால் கூட ஆண்டுக்கு 3,650 குற்றங்கள் என்றாகிவிடுகிறது. காவல்துறையினர் சொல்லும் எண்ணிக்கை குறைவுதான். மணல் கடத்துபவர்களையும், திருத்தப்படாத குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை இன்றி சிறையில் அடைக்க முடியும் என்றால், வைகுண்டராஜன் முதல் அஇஅதிமுக மற்றும் திமுக பிரமுகர்களுக்கு தனிச்சிறையே தேவைப்படும்.? திட்டக்குடி மாணவிகள் பாலியல் வன்முறை விசயத்தில் அதிமுக பிரமுகரும் அவரது வாகன ஓட்டுநரும்தான் முக்கிய குற்றவாளிகள் என்று கடலூர் மாவட்ட காவல்துறை சொல்கிறது. 13 அம்ச செயல் திட்டப்படி அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களா என்று ஜெயலலிதா நமக்குச் சொல்ல வேண்டும். பிரச்சனை உண்மை குற்றவாளிகள், தப்பவிடப்படுகிறார்கள். பொய் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் காவல்துறை காகிதங்களையும் தமிழ்நாட்டின் சிறைகளையும் நிரப்புகின்றன.
ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்களில் இந்த குண்டர் சட்டத் திருத்தமும் ஒன்று. இந்தத் திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் குரல்கள் எழுந்துள்ளன. மூன்று முறை அதே குற்றத்தைச் செய்யும் ஒருவரை மீண்டும் அந்தக் குற்றம் செய்யவிடாமல் தடுக்கும் பொருட்டு விசாரணையின்றி ஓராண்டு சிறை வைக்கும் சட்டமான குண்டர் சட்டம் 1982, ஒரு முறை குற்றம் செய்தாலே விசாரணையின்றி சிறையில் தள்ளலாம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தம் மக்கள் மத்தியில் கடுமையான ஆட்சேபத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகக் கூடும் என்பதால், இணையக் குற்றங்கள் முதலிலும் பிறகு பாலியல் குற்றங்களும் சட்டத்தின் பெயரிலும் உள்ளடக்கத்திலும் சேர்க்கப்பட்டன. இவை சேர்க்கப்பட்ட இடத்தில்தான் முதல் முறை குற்றத்துக்கு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவதற்கான நியாயங்களும் சொல்லப்பட்டுள்ளன.
‘ஒரே ஒரு குற்றம் கூட பொது அமைதியை சீர்குலைக்கும் உள்ளாற்றல் கொண்டது என்பதால், குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதைத் தடுக்க, குற்றவாளி அந்தக் குற்றத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் வரை காத்திருப்பதில் பொருளில்லை. எனவே அது போன்றவர்கள் பொது அமைதியை குலைக்கும் விதம் ஒரு முறை குற்றம் புரிந்தாலும் தடுப்புக் காவலில் கைது செய்ய வழிவகை தேவையிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்கிற இந்தக் காலத்தில் இணையக் குற்றங்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். எனவே, இந்தச் சட்டத்தின் கீழ் இணையக் குற்றங்களையும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று முதல் திருத்தத்திலும், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பொது அமைதியை பாதுகாப்பதில் தடைகளாக இருப்பதால் அவையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன’ என்று இரண்டாவது திருத்தத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
இணையதளத்தை முடக்கும் ஹேக்கர்களால் வர்த்தகம், அரசு செயல்பாடுகள் பாதிக் கப்படுகிறது. சில சமயங்களில் முடக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தத்தை முன்வைத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொன்னார். தமிழ்நாட்டில் அஇஅதிமுக இணையதளம் முடக்கப்பட்டது தவிர வேறு பரபரப்பு முடக்கம் ஏதும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் எந்த அரசு இணையதளமும் பாதிக்கப்படவில்லை. இதனால் அரசு செயல்பாடுகள் எவையும் பாதிக்கப்பட்டதாகவும் திருத்தத்துக்கான நோக்கத்தில் சொல்லப்படவில்லை. இணையதள குற்றங்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுவிட்டது, காப்பாற்றுங்கள் என்று தமிழ்நாட்டில் யாரும் போர்க்குரல் எழுப்பவும் இல்லை. நடக்காத குற்றத்துக்கு ஏன் இந்த அளவுக்குக் கடுமையான திருத்தம்? வரும் முன் காக்கும் நோக்கமா? சட்டத் திருத்தம் அஇஅதிமுக இணைய தளத்தை முடக்கியவர்களை முடக்கவா? அல்லது இணையதளக் குற்றங்களைத் தடுக்கவா?
சீர்காழியில் ஒரு பெண் திராவக வீச்சுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திராவக விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றதால், இப்போது ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திராவக வீச்சு குற்றங்கள் நடக்கத் துவங்கியுள்ளன.
பாலியல் வன்முறைக் குற்றங்களைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த 13 அம்ச செயல் திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாலியல் குற்றம் புரிபவர்கள் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் முறையாக, கறாராக அமல்படுத்தப்பட்டாலே, இணையக் குற்றங்களும் பாலியல் குற்றங்களும் தடுக்கப்படலாம். ஆனால், மக்கள் மத்தியில் சீற்றமும் அச்சமும் ஏற்படுத்தியுள்ள இந்தக் குற்றங்களில் பெயரால் குண்டர் சட்டத்தை கருப்புச் சட்டமாக்கும் முயற்சியைத்தான் ஜெயலலிதா இப்போது எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தடா, பொடா காலம் ஒன்று இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலம். தமிழ்நாட்டின் பத்திரிகைகள் அவரை ஹிட்லரைப் போல் கேலிச் சித்திரம் தீட்டிய காலம். வைகோ மாதக்கணக்கில் சிறையில் இருந்தார். தமிழ்நாட்டில் இன்னும் தடா, பொடா வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலைமைகளில் இருக்கிற சட்டங்கள்படியே தமிழ்நாட்டில் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு குறைவிருப்பதில்லை. புதிய சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு சவால் விடுக்கும், அரசியல்ரீதியான விமர்சனங்களை முடக்கும் நோக்கம் கொண்டுள்ளது தெளிவு. அரசியல் விமர்சனம் செய்யும் எதிர்க் கட்சியினர் மீது அவதூறு வழக்குகள் போடப் படுகின்றன. நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது. தினமலர் பத்திரிகை மீது வழக்கு உள்ளது.
ஜெயலலிதா 2011ல் ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் பெயர்களை பட்டியலிட்டு, தற்போதைய திருத்தம் அரசியல் பழிவாங்குதலுக்குத்தான் இட்டுச் செல்லும் என்று கருணாநிதி விரிவான அறிக்கை விடுத்துள்ளார். 2011க்குப் பிறகு வெவ்வேறு குற்றச் சம்பவங்களில், புகார்களில், குற்றம் சாட்டப்பட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான விதிகள் முறையாக பின்பற்றப் படவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். (அவர் பட்டியலில் சொந்தப் பிரச்சனை தூக்கலாக இருப்பது வேறு விசயம். தாமிரபரணியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கும் அவர் விரிவான விளக்கம் தந்தால் நல்லதுதான்).
அந்த அறிக்கையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோருடன் அமைக்கப்பட்ட குழு, ஜூன் 14, 2014 அன்று காலை 10.30 மணிக்குத் துவங்கி மதியம் 2 மணிக்குள் 220 வழக்குகளை விசாரித்து 212 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்கிறார்.
தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் வழக்குகளில் 5% வழக்குகளில் மட்டுமே குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் மெய்ப்பிக்கப்படாத வழக்குகளில், வழக்கு முடிவதற்குள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 6 முதல் 8 மாதங்கள் வரை சிறையில் கழிக்க நேர்வதாகவும் மனித உரிமை நீதிமன்றத்தின் முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞர் கண்ணதாசன் சொல்கிறார்.
ஏற்கனவே மனித உரிமைகளுக்குப் புறம்பாக பயன்படுத்தப்படுகிற குண்டர் சட்டத்துக்கு, ஒருவர் குற்றம் செய்தார் என்று சொல்லி காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கும் சுதந்திரத்தை இந்தத் திருத்தம் தந்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை சட்டபூர்வமாகவும், யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் எதுவும் இன்றி சுதந்திரமாகவும் செய்ய இந்தத் திருத்தம் வழி வகுத்துள்ளது. இணையதளத்தில் எழுதினால் குண்டர் சட்டம். கேள்வி கேட்டால் குண்டர் சட்டம். கோவையில் தேமுதிகவைச் சேர்ந்த ஒருவரை, அஇஅதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த இணையதள புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சுற்று ஒடுக்கு முறை நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் புதிய குண்டர் சட்டம் மூலம் அரங்கேறும்.
மரியாதை நிமித்தம் எழுந்து நிற்கவில்லை என்பதற்காக கையை வெட்டிவிடும் அளவுக்கு தமிழ்நாட்டில் குற்றவாளிகளுக்கு துணிச்சல் உள்ளது. குற்றங்கள் இப்படி கட்டுக்கடங்காமல் உள்ளன என்று தமிழக மக்கள் குற்றம் சுமத்துவதாலேயே அவர்கள் மீதே இப்படி ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.
சுதந்திர தின உரையாற்றுவதற்கு முன்பு, தமிழக மக்களின் சுதந்திரமான நடமாட்டத் துக்கு தடை போட்ட ஜெயலலிதா, தமிழக மக்களைப் பார்த்து கேட்கிறார்: கேட்பீர்களா? குற்றம் அதிகரிக்கிறதே என்று கேட்பீர்களா?