காஞ்சிபுரம் மாவட்டம்
திருபெரும்புதூரில் புரட்சிகர இளைஞர் கழகம் கருத்தரங்கம் நடத்தியது.
இஸ்ரேலை கண்டிக்க மறுக்கும் மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து இயக்கம் நடத்த
முடிவு செய்யப்பட்டது. மாவட்ட சிறப்புத் தலைவர் தோழர் ராஜேஷ்
கருத்தரங்குக்கு தலைமை தாங்கி நடத்தினார். புரட்சிகர இளைஞர் கழக
தேசியச்செயலாளர் தோழர் கே.பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜகுரு
உரையாற்றினார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கண்டன
பதாகையில் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன.

