COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, August 15, 2014

அனைத்திந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் பிரச்சார இயக்கம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டக் கூலியை உயர்த்திட வேண்டும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி வீட்டு மனை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கிராமப்புற வறியவர் கோரிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை ஊராட்சிகள் மட்டத்தில் அவிதொச பிரச்சாரம் மேற்கொண்டது.

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றத்தில் ஆகஸ்ட் 4 அன்று அவிதொச ஊராட்சிமட்டத் தலைவர் தோழர் கோவிந்தசாமி தலைமையில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடந்தது., நல்லூரில் ஆகஸ்ட் 5 அன்று அவிதொச ஊராட்சிமட்டத் தலைவர் தோழர் பி.வேல்பாலா தலைமையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஆகஸ்ட் 7 அன்று அவிதொச ஊராட்சிமட்டத் தலைவர் தோழர் வெங்கடேசன் தலைமையில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். முன்னதாக இப்பகுதிகளில் வீடுவீடாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் கண்டன உரையாற்றினார்.

ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாவட்ட தலைவர்கள் தோழர்கள் ராமன், திருநாவுக்கரசு, அன்புராஜ், பாலாஜி, மணி, வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, குன்றான்டார்கோயில், கரம்பக்குடி ஒன்றியங்களில் 13 ஊராட்சிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 3, 4 தேதிகளில்  இரண்டு ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கரம்பக்குடியில் ஏழு ஊராட்சிகளில் உள்ள மக்களை திரட்டி பேரணி நடைபெற்றது. கட்சியின்  மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி அவிதொச மாநில தலைவர்கள் தோழர்கள் வளத்தான், ராஜாங்கம் மற்றும்  மாவட்டத் தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

கடலூரில் கார்கூடல், மாவிடந்தல் ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கட்சியின்  மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அம்மையப்பன், அவிதொச மாவட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தஞ்சையில் மணலூர், நாகையில் திருமுல்லைவாசல் ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கட்சியின்  மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், அவிதொச மாநிலத் தலைவர் டிகேஎஸ் ஜனார்த்தனன், மாவட்டத் தலைவர் கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் சேந்தநாடு, வானாம்பட்டு, சேந்தமங்கலம், திருநாவலூர், மாம்பழப்பட்டு, கல்லாங்குத்து ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒலக்கூர்   ஊராட்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின்  மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், அவிதொச மாவட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

Search