சோனல் வியாபார் லிமிட் என்ற இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி இகக(மாலெ)
சேலம் மணியணூர் உள்ளூர் கமிட்டி 27.08.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆலையினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு
மருத்துவக் குழு அமைக்க வேண்டும், மணியணூரில் உள்ள அனைத்து மக்களுக்கும் 10
லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், அந்த செலவை சோனல்
வியாபார் நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்
வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் தோழர் மல்லி ஆனந்த்
தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன்,
சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், ஏஅய்சிசிடியு மாவட்டச்
செயலாளர் தோழர் வேல்முருகன், தோழர்கள் மாரிமுத்து, கணேசன், நடராஜன் ஆகியோர்
உரையாற்றினார்கள்.
களச் செய்திகள் தொகுப்பு: ஜி.ரமேஷ்
களச் செய்திகள் தொகுப்பு: ஜி.ரமேஷ்