COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, August 14, 2014

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு ஏற்று நடத்திடவும், அதன் ஊழல் நிர்வாகத்துக்கு எதிராக போராடிய புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர்களில் ஒருவரான தோழர் தனவேல்ஆகஸ்ட் 8 அன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் ஆகஸ்ட் 11 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் இளங்கோவன், அம்மையப்பன், அய்சா மாநில பொதுச் செயலர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாவட்டத் தலைவர் தோழர் கார்த்திக், அவிதொச மாவட்டத் தலைவர் தோழர் புலவேந்திரன்ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


Search