COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

ஆகஸ்ட் 14, ஜனநாயகத்திற்கு இன்னுமொரு சோகமான நாள்

சுதந்திர தினத்தை ஒட்டி மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் உரையாற்ற கபிர் கலா மஞ்ச் செயல்வீரரும், தலித் பாடகருமான ஷீதல் சாதே அழைக்கப்பட்டிருந்தார். ஏபிவிபியினர் வன்முறையால் அந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்த பின்னணியில் திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் அவருக்கு பதிலாக உரையாற்றினார். அவருடைய உரை இங்கு தரப்பட்டுள்ளது.

இன்று உரையாற்ற முறைப்படி அழைக்கப்பட்டிருந்த ஷீதல் சாதே இடத்தில் உங்கள் முன்னால் நான் உரையாற்றுகிறேன். ஷீதல் சாதேவிற்கோ அல்லது அவர் குழந்தைக்கோ உடல் நலக்குறைவு என்று அவர் வராமல் இல்லை. அவரிடம்  உங்களுக்கு சொல்வதற்கு எதுவுமில்லை என்பதாலும் அவர் வராமல் இல்லை.  அவர் எதைச் சொல்ல வேண்டுமோ அதை உங்களிடம் சொல்வதற்கு அச்சப்படுகிறார் என்பதாலும் அல்ல. அவரை பேச அழைத்தவர்களின் நம்பகத்தன்மை பற்றி அவருக்கு சந்தேகம் இருக்கிறது என்ற காரணத்தாலும் அவர் வராமல் இல்லை.

அவர் இந்த விழாவில் பேசினாலோ, பாடி னாலோ இடையூறு ஏற்படும் என்று (ஏபிவிபி) விடுத்திருந்த எச்சரிக்கைக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களும், இங்கு குழுமியிருக்கிற மக்களும் ஆளாகிவிடக் கூடாது என்ற காரணத்தினாலும், தன்னை விழாவிற்கு அழைத்த அந்த மாணவர்கள் அவர் மீது கொண்டிருக்கிற அளப்பரிய அன்பு மற்றும் மரியாதை காரணமாகவும் தான்  அவர் வரவில்லை.

இந்த எச்சரிக்கையை யார் விடுத்தார்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த எச்சரிக்கையை நீதிமன்றமோ காவல்துறையோ அல்லது மத்திய, மாநில அரசாங்கங்களோ விடுக்கவில்லை.

ஷீதல் சாதே, தான் குற்றமற்றவர்  என்று நிரூபணம் செய்வதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி இருக்கிறது. நீதிமன்றம் அவர் பேசுவதற்கான சுதந்திரத்தையோ அல்லது பாடுவதற்கான உரிமையையோ பறித்து விடவில்லை. நீதி மன்றம் அவரது குரலையோ அல்லது ஒடுக்கப்பட்ட, முத்திரை குத்தப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் குரலை அவர் பாடுவதையோ முடக்கவில்லை.

நம் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாய் இருக்கிற, அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இதுபோன்ற அரசியல்சாசனத்திற்கு அப்பாற்பட்ட பல அமைப்புகளின் அதிகாரம் வளர்ந்து வருகிறது. அவர்களுக்கென்று பல பெயர்கள் இருக்கின்றன. பல கடமைகளும் இருக்கின்றன. சில இந்திய மக்கள் எதுமாதிரி புத்தகங்கள் படிக்க வேண்டுமென்றும், சில எந்த மாதிரி படங்கள் பார்க்க வேண்டுமென்றும், சில எத்தகைய பேச்சுக்களை, பாடல்களை கேட்க வேண்டுமென்றும் முடிவு செய்கின்றன. அவர்கள் தாமாகவே பல தணிக்கைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் ஒரே குடும்பம், ஒரே தத்துவம், ஒரே தொகுப்பான நம்பிக்கையைச் சார்ந்தவை. இந்த நம்பிக்கைகள் மிகவும் இளம் வயதினரிடம், மனதில் விளைவை உண்டாக்கக் கூடியவர்களின் மூளையில் செலுத்தப்படுகிறது. பொற்காலம் என்று அவர்களால் சொல்லப்படும் 1000 ஆண்டுகளுக்கு முன்பான பார்ப்பனிய வேத காலத்தில்தான் விமானம் மற்றும் ராக்கட் விஞ்ஞானம் கண்டு பிடிக்கப்பட்டது என்று சொல்வதோடு அல்லாமல், தலித்துகள் மற்றும் பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட, அதை எதிர்த்தவர்கள் சொல் லொணா தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பண்டைய கால பார்ப்பனிய சட்டமான மனு ஸ்மிரிதி மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருப் பவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

இன்று அதே தத்துவம், தேசியவாதம் என்ற பெயரில் நம் முன்னே வருகிறது. சுதந்திரத்தின் போது மூவர்ணக் கொடி ஏற்றுவதை வன்மையாக எதிர்த்து, இந்துத்துவாவின் ஆரஞ்சு நிறக் கொடியை ஏற்றுமாறு அதன் வழிவந்தவர்களால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அதேதான் இப்போது இந்தியக் கொடியால் போர்த்தப்பட்டு வருகிறது. அவர்கள்  ‘வந்தே மாதரம்’தான் தேசிய கீதமாக இருக்க வேண்டும் என்று சொல்லி ‘ஜனகன மன’ பாடவும் மறுத்தார்கள். இந்திய முஸ்லீம்களை இழிவு படுத்தும் 19ஆம்  நூற்றாண்டில் பக்கிம் சந்திரா எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலில் வருவதுதான் ‘வந்தே மாதரம்’ என்பதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

தேசியவாதம் அல்லாமல் இந்தியாவின் மேட்டுக்குடி மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பேராசையை பற்றவைத்த மற்றுமொரு இன்னும் அதிக போதையூட்டும் முகமூடி ஒன்று உள்ளது. அந்த முகமூடிதான் ‘வளர்ச்சி’. இந்த வளர்ச்சி பேராசை மூவர்ணத்தை விட உயர்ந்ததாகி விடுகிறது. அது ‘உலகின் எண்ணெய் வளமும், தண்ணீரும் வேகமாக குறைந்து வருவதால் என்னவாகிவிடப்போகிறது, சுற்றுச் சூழல் மாசு, உலகம் வெப்பமயமாதல், சுனாமி அச்சம், அணுப் பேரழிவு ஆகியவை நடந்தால் என்ன, பன்னாட்டு நிறுவனங்கள் அபகரிக்க விரும்பும் இந்தியாவின் காற்று, நீர், காடுகள், நிலம், தாது ஆகிவற்றை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?’ என்றும் கேட்க வைக்கிறது.

ஒரு சிலரின் குறுகியகால நலன்களுக்காக நம் இறையாளுமையை விற்க தயாராகியிருக்கிறார்கள். பிறகு, நவீனம், வளர்ச்சி பற்றிய கூக்குரலோடு கூடவே மிகவும் துவக்ககால, இனவெறி, சுரண்டல் கலாச்சார மற்றும் பொருளாதார மரபுகளை வளர்ப்பதை நோக்கிச் செல்கிறார்கள்.

நானும் நீங்களும் இதை எப்படி தடுக்கப் போகிறோம்? நாம் தவறிழைத்துவிடக்  கூடாது. இந்தக் கருத்தியல் மாறுபட்ட கருத்து எதையும் அனுமதிப்பதில்லை. இன்று இந்திய ஜனநாயகத் துக்கு மற்றுமொரு சோகமான நாள். இன்று நூறாண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் ஒரு கல்லூரிக்கு எதிராக ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அரசியல் சாசனத்தைத் தாண்டிய ஓர் அமைப்பு அச்சுறுத்தல் விடுத்த நாள். ஆம் அதுதான் இறுதி வரி ஆகும்(?) அதுதான் புனித சேவியர் கல்லூரியை, அதிலும் குறிப்பாக அதன் கொள்கையாளரான முதல்வரை, தாக்குதலுக்கான இலக்காக்கியிருக்கிறது.

ஷீதல் சாதேவும், கபிர் கலா மஞ்ச்சும் இந்த விழாவை சீர்குலைக்க விரும்பவில்லை. ஆனால், எங்கள் குரலை ஒரு நாளும் அமைதிபடுத்த முடியாது என்பதையும் நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம். இந்த குறிப்பிட்ட அச்சுறுத் தலை விடுத்தவர் யார் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இந்திய மக்களிடம் நாங்கள் கடந்த காலங்களில் உறவு கொண்டிருந்த பிரிவினை, மதவாத, சாதிய சக்திகளுடன் இனி நிற்க மாட்டோம் என்று, மக்களிடம் சொல்லி ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சியின் இளைஞர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புதான் அச்சுறுத்தல் விடுத்த அமைப்பு. ஏபிவிபி போன்ற குழுக்கள் கேகேஎம் போன்ற குழுக்களை வெறுப்பதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது தேசியவாதத்தோடு அல்லது  நக்சலிசத்தோடு எவ்விதத்திலும் தொடர்பும் இல்லாதது. இருவரின் இந்தியா பற்றிய பார்வை நேர் எதிரானது. சாதி, மத, இன அடையாளங்கள் துறந்து, நாம் அனைவரும் நீதி, அமைதி, உண்மையான ஜனநாயகம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள வர்கள் என்பதை அங்கீகரிக்கும் பன்மைதன்மை கொண்ட இந்தியாவிற்காக கபீர் கலா மஞ்ச் நிற்கிறது. இந்த இந்துத்துவ கருத்தியலாளர்கள் எவ்வளவுதான் பெரிய தேசியக் கொடியால் தங்களைச் சுற்றி போர்த்தியிருந்தாலும் அவர்கள் எப்போதுமே முற்றிலும் புதிய நிகழ்ச்சிநிரல் கொண்டிருப்பார்கள்.



Search