ஆகஸ்ட் 8, AICCTU மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்குவதை இந்தியா நிறுத்திட வேண்டும் என்ற முழக்கங்களுடன், 2014 ஆகஸ்ட் 8 அன்று, ஏஅய்சிசிடியு மாநிலம் தழுவிய எதிர்ப்பு நாள் அனுசரித்து இயக்கம் நடத்தியது.
கோவை: கோவையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் மாலெ கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ். குமாரசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே. நடராஜன், மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் தாமோதரன், பழனிவேல், குருசாமி, மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், பிரிக்கால், சாந்தி கியர்ஸ் மற்றும் ஏஅய்சிசிடியு கிளை சங்கங்களின் தலைவர்கள், தொழிலாளர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
சிஅய்டியு மாவட்டச் செயலாளர் தோழர் ஆறுமுகம், எஸ்டிபிஅய் மாவட்டக் குழு உறுப்பினர் எ.காதர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநகர, மாவட்டச் செயலாளர் சாகுல் அமீது, ஆகியோர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
நெல்லை: இஸ்ரேல் எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் ஆகஸ்டு 8, 2014 அன்று நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு.மைதீன், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்டத் தலைவர் அகமது நவவி, எஸ்டிபிஅய் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் நசீர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கே.கணேசன், மாவட்டத் தலைவர் தோழர் எம்.சுந்தர்ராஜன் இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, அன்புச்செல்வி, ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் நிஜாம், சுப்பிரமணியன், ஆவுடையப்பன், கணேசன், சங்கர் உட்பட 75 பேர் கலந்து கொண்டனர்.
சென்னை: சென்னையில் கொட்டும் மழையில் மண்ணூர்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் முனுசாமி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ். ஜவகர்கண்டன உரையாற்றினார். மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் வேணுகோபால், மோகன், பசுபதி, ஆகியோர் கண்டனம் தெரிவித்து முழங்கினார்கள். இஸ்ரேலை கண்டித்து பிரசுரங்களுடன், பேனர்களில் கையெழுத்து திரட்டும்இயக்கம்அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்கிறது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலும் அடாத மழையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு மாவட்ட தலைவர் தோழர் க.ராமன் தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் எ.எஸ். குமார், கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். ஜானகிராமன் கண்டன உரையாற்றினார்கள். ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் திருநாவுக்கரசு, அன்புராஜ், மணி, வாசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் பொன்.கதிரவன் தலைமை தாங்கினார், கட்சி மாவட்டச் செயலாளர் எ.கோவிந்தராஜ் ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் சுப்பிரமணி, தண்டபாணி கண்டன உரையாற்றினர்.
குமரி: குமரியில் ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர் தோழர் அந்தோணி முத்து தலைமையில் குடியிருப்பு பகுதிகளில் நடைபயணப் பிரச்சாரம் நடைப்பெற்றது.