COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளை தனியார்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் கொடுக்கும் முடிவை திரும்பப் பெறக் கோரி புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த  தோழர்கள் ஆகஸ்டு 20 அன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு மேயர் இல்லாததால், உதவி ஆணையர் தோழர்களை அழைத்துப் பேசினார். கோரிக்கை பற்றி பரிசீலனை செய்வதாகச் சொன்னார். ஆனால், கோரிக்கை நியாயமானது என்றாலும் முற்றுகை செய்தது தவறு என்று கூறி சென்னை மாநகரக் காவல் தோழர்களைக் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தது. இந்தப் போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகப் பொறுப்பாளர் சீதா தலைமை தாங்கினார்கள். இகக (மாலெ) சென்னை மாவட்டக் குழு தோழர்கள் முனுசாமி, மோகன்  முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டனர்.



Search