புதுக்கோட்டையில் இககமாலெ,
அவிதொச இணைந்து பிரசுரங்கள், சுவரொட்டிகளுடன் பிரச்சாரம் நடைபெற்றது,
வெள்ளையனே வெளியேறு இயக்க நாளான ஆகஸ்ட் 9 அன்று கரம்பக்குடியில்,
கரம்பக்குடி ஒன்றியக் குழுச் செயலாளர் தோழர் கலைச்செல்வன் தலைமையில், பேரணி
மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர்
பழ. ஆசைத்தம்பி, மாவட்டக் குழு உறுப்பினர் மா.விஜயன் ஆகியோருடன், தமுமுக
முன்னாள் மாவட்டச் செயலாளர் எச்.முகமது சாதிக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா மாவட்டச் செயலாளர் முகமது சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன
உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

