COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

கல்வியில் ஊழல், கொள்ளையை தடுக்கக் கோரி கண்டனக் கூட்டம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் அதிகரித்து வரும் ஊழல்களைக் கண்டித்தும் பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமை, கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படாமை கண்டித்தும் அதற்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்தும் அரசாணை 92அய் மீறும் கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தோழர் தனவேல் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தில் 18.08.2014 அன்று அகில இந்திய மாணவர் கழகம் கண்டனக் கூட்டம் நடத்தியது. தோழர் திருமலை தலைமை தாங்கினார். தோழர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாணவர் கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர் ராஜசங்கர், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் தனவேல், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலாளர் தோழர் செண்பக வள்ளி, அகில இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் தோழர் தேசிங்குராஜா, மாற்றுத் திறனாளிகள் பட்டதாரிச் சங்கத் தலைவர் தோழர் சுரேஷ் கண்டன உரையாற்றினர்.



Search