தொழிலாளர் எதிர்ப்பார்ப்புக்கள்
தொழிற்சங்கப் பதிவிற்கு மட்டுமே தொழிற்சங்கங்கள் சட்டம் 1926ல் இடம் இருக்கிறது. அந்த சட்டப்படி சங்கங்களை அங்கீக ரிக்க இடமில்லை என நிர்வாகங்கள் சொல்கின்றன. மாருதி, எம்ஆர்எஃப், ஹூண்டாய், பிரிக்கால் தொழிலாளர் போராட்டங்களை அடுத்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மைத் தொழிற்சங்கத்தைக் கண்டறிந்து அதற்கு அங்கீகாரம் வழங்க சட்டத் திருத்தம் வேண்டும்.
குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000 வேண்டும்; அது விலை உயர்வுக்கேற்ப உயர வேண்டும்; இது சட்டபூர்வமாக்கப்பட வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்பது விதிகளில் மட்டுமே உள்ளது. அது ஒப்பந்த தொழிலாளர் சட்ட ஷரத்தாக வேண்டும்.
நிரந்தரத் தன்மை வாய்ந்த ரெகுலர் உற் பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளரை ஈடுபடுத்துவோர்க்கு, உரிமை பதிவு தரப்படாது; அப்படி தரப்பட்ட பிறகு அவர்கள் அதனைச் செய்தால், ஒப்பந்ததாரர்/முதன்மை வேலை அளிப்பவரின் உரிமம் பதிவு போன்றவை ரத்து செய்யப்பட வேண்டும்.
ஒப்பந்த முறை ரத்தானாலும் முதன்மை வேலையளிப்பவர் வேலை தர வேண்டியதில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) ரத்து செய்து, ஒப்பந்த முறை ரத்து ஆனவுடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முதன்மை வேலை அளிப்பவரின் தொழிலாளர்கள் ஆவார்கள் என்ற சட்டத் திருத்தம் வேண்டும்.
தமிழ்நாட்டில் பயிற்சி முறைக்கு ஓர் அடி கொடுக்கும் விதத்தில் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு உருவாக்கும் விதம் 14.05.2008ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்த மசோதா 47/2008க்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.
போனஸ் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பணிக்கொடை கூடுதலாகக் கிடைக்க சட்டத் திருத்தங்கள் வேண்டும்.
நல்ல மருத்துவம், வீடு/குடியிருப்பு வசதி, குழந்தைகள் கல்வி, போன்ற சமூக பாது காப்பு திட்டங்கள் சட்டபூர்வமான அந்தஸ்து பெற்று, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.
இவை நிறைவேறினால் நல்ல காலங்கள் வருவதாகவும், வளர்ச்சியின் பயன்கள் தமக்கும் கிடைப்பதாகவும், உழைக்கும் மக்கள் கருத வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்து விடுமா?
சட்ட திருத்தங்களுக்குப் பின்னணி
முதலாளித்துவ சமூகத்தில் திரும்பத் திரும்ப நெருக்கடிகள் ஏற்படும், அவற்றிலிருந்து மீள முதலாளித்துவம் எடுக்கிற முயற்சிகள், அதனை மேலும் ஆழமான நெருக்கடிகளுக்குள் தள்ளும் என 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை சொன்னது 2014க்கும் பொருந்துகிறது. இடை யறாமல் உற்பத்தியை நவீனப்படுத்த லாபத்தைக் காப்பாற்றிக் கொள்ள, அதிகரிக்க முதலாளித்து வம் எடுக்கும் முயற்சிகள், குறுகலான உற்பத்தி உறவுகள் என்ற தம் எதிர்மறையை அதாவது குறைந்த கூலி போதுமான வாங்கும் சக்தி இன்மை என்ற எதிர்மறையை எதிர்கொள்வ தால், முதலாளித்துவ சமூகத்தின் பிரிக்க முடி யாத பகுதியாக நெருக்கடிகள் அமையும்.
இந்தியாவின் கார்ப்பரேட் பெரும் தொழில் குழுமத் துறையினர், குறைந்த கூலித் தொழிலாளர்களை, கூடுதல் நேரம் வேலை வாங்க, கூடுதல் உற்பத்தியைப் பெருக்க, அமர்த்து - துரத்து கொள்கையைப் பின்பற்ற, கூட்டுபேர உரிமையைச் சிதைக்க முயற்சிக்கிறார்கள். இந்தத் திசையில் பாஜகவின் ராஜஸ்தான் அரசாங்கம் சில திருத்தங்களுக்குத் தயாராகிறது.
மத்தியில் உள்ள மோடி அரசாங்கம், தவணை முறையில் சட்டத் திருத்தங்களைச் செய்யப் பார்க்கிறது. அது மேற்கொள்ள விரும்பும் 3 சட்டங்களிலான திருத்தங்களில், நாம், தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் பயிற்சி யாளர்கள் சட்டம் 1961 ஆகியவற்றிற்கான திருத்தங்களின் சில முக்கிய அம்சங்களை மட்டும் பார்ப்போம். கூடுதல் வேலை நேரம் குறைந்த கூலி தொழிலாளர்கள் என்பதே இந்தச் சட்டத் திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும். லங்காஷயர் பழகுநர்கள், இங்கிலாந்து தேசத்தின் ஆரம்ப கால பெண் தொழிலாளர் சுரண்டலை சட்டத்திருத்தங்கள் நினைவுக்குக் கொண்டு வரும்.
பெண்களின் அச்சமற்ற சுதந்திரம் என்ற முழக்கம் எழுந்துள்ள காலச் சூழலில், பெண்களுக்கு இரவுப்பணி என்பதை எவரும் கோட்பாட்டளவில் கொள்கை அளவில் எதிர்க்க முடியாதல்லவா? தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் பிரிவு 66(1) (பி) எந்த தொழிற்சாலையிலும் எந்தப் பெண்களும் காலை 6 மணி மாலை 7 மணி தாண்டி வேலை செய்யுமாறு கோரக் கூடாது, அனுமதிக்கக் கூடாது என்கிறது. துணைப் பிரிவு விதிவிலக்கு தரப்பட்டாலும், அது, இரவு 10 முதல் விடிகாலை 5 மணி வரை பொருந்தாது என்கிறது. பெண் சமத்துவம், ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு கூடாது என்ற முழக்கத்தின் திரைமறைவில், மோடி அரசு, பெண்கள் இரவு ஷிப்டில் வேலை செய்ய வழிவகை செய்கிறது.
பெண்கள் சங்கம் அமைத்து சண்டை போட மாட்டார்கள் என்ற நப்பாசையுடன், குறைந்த கூலிக்கு கூடுதல் ஷிப்டுகள், உற்பத்தி, லாபம் என நாவில் எச்சில் ஊற பசியுடன் காத்திருக்கும் மூலதனத்திற்கு, மோடி அரசு தீனி போடுகிறது.
சட்டப் பிரிவு 64(4)(iii) மிகைநேரப் பணியும் உள்ளடக்கி வாராந்திர வேலை நேரம் 60 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது என்றும் 64(4)(iv) மூன்று மாதங்களில் மிகை நேரப்பணி 50 மணி நேரம் தாண்டக் கூடாது என்றும் சொல்கிறது. தேசத்தின் அவசியம் கருதி 3 மாதங்களில் மிகை நேரப் பணி 100 மணி வரை இருக்கலாம் எனவும் சொல்கிறது. ஒரு ஷிப்டின் 8 மணி நேரம் என்பது பத்தரை மணி நேரத்துக்குள் மட்டுமே பரவியிருக்க (ஸ்ப்ரெட் ஓவர்) வேண்டும் என்பதை சட்டத் திருத்தம் பன்னிரண்டு மணி நேரமாக நீட்டித்திருக்கிறது.
20.06.1865 அன்று மார்க்ஸ் கூலி விலை லாபம் பற்றிப் பேசியதில் இருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்:
‘மூலதனம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், தொழிலாளி வர்க்கம் முழுவதையும் இந்த இழிவிலும் இழிநிலைக்குத் தள்ளுவதற்கு, அது விளைவைப் பற்றிக் கவலைப்படாமல், ஈவிரக்கமற்றுப் பாடுபடும் என்பதையே நவீன காலத் தொழில்களின் வரலாறு முழுவதும் எடுத்துக் காட்டுகிறது’.
கூடுதல் வேலை கூடுதல் உழைப்புச் சுரண் டலுக்கு வழி செய்யும் அதே நேரம், முந்தைய வருடம் 240 நாட்கள் பணி செய்திருந்தால்தான் அடுத்த வருடம், முந்தைய வருடம் வேலை செய்த 20 நாட்களுக்கு ஒரு நாள் சம்பளத்து டன் கூடிய ஈட்டிய விடுப்பு என்று உள்ள நிபந்தனையை 90 நாட்கள் பணி புரிந்தாலே போதும் எனத் தளர்த்தி உள்ளது. மற்ற மற்ற திருத்தங்கள் பற்றி சட்ட வல்லுநர்கள் எழுதுவ திலிருந்து நிச்சயம் அறிந்துகொள்ள முடியும்.
இன்று, முதலாளித்துவ ஊடகங்கள், அறிவாளிகள், இளைஞர்களின் வேலை வாய்ப்பு பற்றி ‘மிகுந்த கரிசனத்துடன்’ பேசுகிறார்கள். வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், இளைஞர்களின் ‘திறமை’ உயர வேண்டும். முதலாளிகள்/வேலை அளிப்பவர்கள் முன்வந்து, இளைஞர்களுக்குப் பயிற்சி தந்து, அவர்கள் திறமையை வளர்க்க வேண்டும். லட்சங்கள் என்ன கோடிகளில் பயிற்சியாளர்கள் இருந்தால் கூட நல்லது என்கிறார்கள்.
இந்தத் திசையில் ‘சரியாகவே’ பயிற்சியாளர்கள் சட்டம் 1961க் கான திருத்தங்கள் பயணம் செய்கின்றன. 22.05.2014 மற்றும் 06.06.2014 தேதிகளில் கூடிய அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ள முக்கிய திருத்தங்கள்:
மாநிலத்தைச் சேராத இடம் பெயர்ந்த வரும் பயிற்சி பெறலாம்.
நிறுவனங்கள் பயிற்சி கொடுப்பதை அவுட்சோர்ஸ் செய்யலாம்.
பயிற்சிக் காலம் நெளிவு சுளிவாக இருப்பது நல்லது. அதிகபட்சம் 3 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகள் ஆக்கலாம்.
அய்டிஅய் பொறியியல் படித்தவர்கள் தவிர, கலை அறிவியல் மற்றும் இதர பட்டப் படிப்பு படித்தவர்களும் பயிற்சியாளர் ஆகலாம்.
ஒரு நிறுவனத்தில் மொத்தமுள்ள தொழிலாளர் எண்ணிக்கையில், நியமிக்கப்பட்ட தொழில் பிரிவுகளில், 2.5%க்கு குறையாமல் 10%க்கு மிகாமல் பயிற்சியாளர் வைத்துக்கொள்ளலாம்.
பயிற்சியாளர்களை அமர்த்தக் கூடிய தொழில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இந்தத் தேவை கருதி, தொழிலாளி என்ற விவரிப்பு விரிவாக்கப்படுகிறது. வேலை அளிப் பவரின் வளாகத்தில் கூலிக்கு வேலை செய்யும் அனைவரும் தொழிலாளர்கள் ஆவார்கள்.
என்ன பெருந்தன்மை! தொழிலாளி எண்ணிக்கை அதிகமானால் பயிற்சியாளர் எண்ணிக்கை அதிகமாகும். அதனால்தான் மற்ற நலச் சட்டங்களில் ஒதுக்கப்படும் விலக்கப்படும் ஒப்பந்த மற்றும் மற்ற வகைப்பட்ட தொழிலாளர்கள், இச்சட்டத்தில் தொழிலாளர்கள் ஆகிறார்கள்.
ஏஅய்ஆர் 1995 உச்சநீதிமன்றம் பக்கம் 1115ல் பிரசுரமாகி உள்ள தீர்ப்பு, மற்ற விசயங்கள் தடையாக அல்லாதபோது, நேரடியாக வேலைக்கு எடுப்பவர்களைக் காட்டிலும் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை தரச் சொல்கிறது. அமைச்சர்கள் குழு, தேவையற்ற நீதிமன்ற வழக்குகள் தவிர்க்க எனக் காரணம் சொல்லி, பயிற்சியளார்க்கு வேலை வாய்ப்பில் முன் உரிமையை சட்டபூர்வமாகக் கட்டாயமாக்க வேண்டாம் எனவும், அதனை முதலாளிகள் கைகளிலேயே விட்டுவிடலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.
பயிற்சியாளர்களுக்கு உதவித் தொகை, செமி ஸ்கில்ட் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளத்தில் 70% முதல் 90% வரை இருக்கலாம் எனவும், ஆண்டு விற்று முதல் ரூ.100 கோடிக்குள் கொண்டுள்ள சின்னஞ்சிறு, சிறிய நடுத்தர நிறுவனங்கள் சட்டம் பொருந்தும் நிறுவனங்களுக்கு பயிற்சியின் முதலாண்டு உதவித் தொகை யில் 50% அரசே தரலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1961 பயிற்சியாளர்கள் சட்டப்படியாக பணிக்கு அமர்த்தப்படும் பயிற்சியாளர்கள் நடை முறையில் மிகமிகக் குறைவே. இன்று நாடெங்கும் அமர்த்தப்படும் பயிற்சியாளர்களில் 90%க்கும் மேல் இந்தச் சட்டப்படி அமர்த்தப்பட்டவர்கள் அல்ல. ஆனபோதும், சட்டத் திருத்தம், மூலதனத்தின் விருப்பத்தையும் அதற்கேற்ப அரசு பயணம் செய்ய விரும்பும் திசையையும் திட்டவட்டமாகப் புலப்படுத்துகிறது.
இந்த மொத்த விசயமும் எவ்வளவு பெரிய மோசடி என்பதை முதலாளித்துவ சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலமே காண முடியும். 05.08.2013 தேதிய அரசாணை (2டி) எண் 44 மூலம், ஜவுளி ஆலைகளில் பணியாற் றும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்சச் சம்பளம் நிர்ணயித்தது.
அது 01.04.2014 முதல் நாளுக்கு ரூ.283.80 என அமைந்துள்ளது. 30.04.2009 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பும், 2010 (3) எல்எல்என் பக்கம் 837ல் பிரசுரமாகியுள்ள முதன்மை அமர்வத் தீர்ப்பும், பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், (உதவித் தொகை அல்ல) நிர்ணயம் செய்ய முடியும் எனச் சொல்லியுள்ளன.
14.05.2008 தேதியிட்ட சட்டத் திருத்த மசோதாவின் நோக்கங்களும் குறிக்கோள்களும் பின்வருமாறு சொல்கின்றன:
சுமங்கலித் திட்டம், இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும். பிரமாதம்! கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, 14.05.2008 திருத்தச் சட்டத் திற்கு, இதுவரை, மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை.
மோடிக்கு முன்பாகவே ஜெயலலிதா தன் வேலையைக் காட்டிவிட்டார். அம்மா திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தில், 25,000 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் 6 மாதங்கள் பயிற்சி தரும். இளைஞர் மாதம் ரூ.5,000 உதவித் தொகை பெறுவார். அரசு நிறுவனத்திற்கு ஒரு பயிற்சியாளர்க்கு ரூ.12,000 வீதம் தரும். கரும்பு தின்ன கூலி!
தொழில் நிறுவனங்கள் ஒரு தொழிலாளிக்கு மாதமொன்றுக்குத் தரவேண்டிய ரூ.5,000த்தில் அரசாங்கம் ரூ.2,000 தந்து விடுகிறது. ஆண்டுக்கு ரூ.30 கோடி மக்கள் வரிப்பணம் தமிழ்நாட்டின் முதலாளி கள் சட்டைப் பைக்குச் செல்கிறது. இதற்கு திறன் வளர்ப்பு என்று பெயர் சூட்டப்படுகிறது. எல்லா விதங்களிலும் முதலாளிகளின் லாப விகிதங் களைப் பாதுகாப்பதே நவதாராளவாதம். அதுவே தாராளமயம், தனியார்மயம், உலகமயம். அதன் ஒரு பகுதியே சட்டத் திருத்தங்கள்.

‘நேரம்தான் மனிதனுடைய வளர்ச்சிக்கான பரப்பாகும். சுயேச்சையாகச் செலவழிப்பதற் குரிய நேரம் எவரிடம் இல்லையோ, உண்ணல் உறங்கல் முதலிய உடல் தேவைகளுக்கான இடைக்காலம் தவிர எவருடைய வாழ்நாள் முழுதும் முதலாளிக்காக உழைப்பதில் மூழ்கிப் போய்விடுகிறாரோ, அவர் சுமை மிருகத்திற்கும் கடையராகிறார். அவர் பிறருக்கு செல்வத்தை உற்பத்தி செய்யும் எந்திரமாகி, உடல் சிதைந்து பண்பற்ற உள்ளம் கொண்டவராகிறார்’.

‘பல தொழில் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சியாளர்களைப் பணியில் அமர்த்துவதாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ரெகுலர் வேலைக்கு அமர்த்தப்பட்ட அவர்களுக்கு வேலையில் பயிற்சி எனப் பயிற்சி திட்டம் சொன்னாலும், பயிற்சியாளர்கள் என்ற போர்வையில் அவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு குறைந்த கூலி தரப்படுகிறது. நலச் சட்டப் பயன்கள் மறுக்கப்படுகின்றன. குறிப் பாக, திருமணம் ஆகாத இளம் பெண்கள் ஜவுளி மில்களில் பணிக்கு அமர்த்தப்படு கிறார்கள். பயிற்சிக் காலம் மூன்றாண்டுகள் முடிந்த பிறகும், அவர்களை வேலைக்கு அமர்த் தாமல், வேலை அளிப்பவர்கள், புதிய ஆட்களை பயிற்சியாளர்கள் ஆக்குகிறார்கள். ஜவுளித் துறையில் பரவலாக இருக்கும் இந்த நடை முறை, மற்ற தொழில்களுக்கும் பரவுகிறது’.