கும்பகோணத்தில் பள்ளித் தீ
விபத்தில் மரணமுற்ற மாணவர்களின் குடும்பத்தினருக்கு இன்னமும் நீதி
கிடைக்கவில்லை. பள்ளி விபத்துக்கு காரணமான அதிகாரிகள், நிர்வாகத்தினர்
தண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் ரூ.25
லட்சம், அரசு வேலை வழங்கிட வேண்டும், பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மாணவர்
கல்வி செலவை அரசு ஏற்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய
மாணவர் கழகம் கையெழுத்து இயக்கம் நடத்தியது.
கோரிக்கை மனுக்களுடன் தஞ்சை மாவட்டஆட்சியர் வளாகம் முன்பு ஆகஸ்ட் 4 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியருடன் மாணவர் தலைவர்கள் ரமேஷ்வர் பிரசாத், இளவரசன்ஆகியோருடன் சட்ட மாணவர்கள் பிரியா, சரளா, நதியா, திலிப் ஆகியோர் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசின் பார்வைக்கு கோரிக்கைகளை அனுப்பி பரிந்துரைப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்