COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, August 15, 2014

புனல்குளம், தெற்குவாசல்பட்டி டாஸ்மாக் கடையை மூடு

திருச்சி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமாரின் சொந்த ஊரான புனல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குவாசல்பட்டியில், மக்களுக்கு இடையூறாக இருக்கிற டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஜ÷லை 15 அன்று மாலெ கட்சி தலைமையில் பகுதி மக்கள் 500 பேர் திரண்டு சென்று, ஊராட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர், ஊராட்சியில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியரிடம் அளித்துள்ளார்.

இதற்குப் பிறகும் டாஸ்மாக் கடை அகற்றப்படாததைக் கண்டித்து ஜூலை 24 அன்று கந்தர்வகோட்டையில், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜோதிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, அவிதொச மாநிலத் தலைவர் தோழர் டிகேஎஸ்.ஜனார்த்தனன் கண்டன உரையாற்றினர்.

Search