முற்போக்கு பெண்கள் கழக தோவாளை தாலுகா முதல் மாநாடு ஆகஸ்ட் 9 அன்று பொது மாநாடாக நடத்தப்பட்டது. முற்போக்கு பெண்கள் கழக மாநிலச் செயலாளர் தோழர் மேரி ஸ்டெல்லா கொடியேற்றினார். தோழர் ரோஸ்லின் தலைமை தாங்கினார். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு வீடற்ற வறியவர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக் குற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இகக மாவைச் சேர்ந்த பெண்களை பாலியல் வன்முறை செய்ய வேண்டும் என்று சொன்ன மேற்கு வங்க ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் சட்டக் கூலி அமலாக்கப்பட வேண்டும், சாலைகள், பேருந்துகள் ஆகியவற்றை செம்மைப்படுத்தி, மாவட்ட போக்குவரத்து சீர்செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.