கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரத்தில், சட்டவிரோதமாக
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆராச்சார் அரசு நிலம் மீட்கப்பட்டு அதில்
வீடற்றவர்களுக்கு வீட்டு மனை வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாலெ கட்சி தொடர்
போராட்டம் நடத்தி வருகிறது. பொய் வழக்குகள், கைது, சிறை வாசம் என்ற
அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கடந்து, போராட்டத்தின் அடுத்த கட்டமாக, பிப்ரவரி
18 அன்று அகில இந்திய முற்போக்கு கழக மாநிலச் செயலாளர் தோழர் மேரி
ஸ்டெல்லா, மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் சுசீலா தலைமையில்
நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.