COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

சட்டவிரோத கருமுட்டை விற்பனை கூடாது

ஈரோட்டில் 28.02.2014 அன்று சட்டவிரோத கருமுட்டை விற்பனையை தடுக்க வேண்டும் என்ற பொருளில் ஏஅய்சிசிடியு கருத்தரங்கம் நடத்தியது. வழக்கறிஞர் ப.பா.மோகன், பியுசிஎல் பொதுச் செயலாளர், ச.பாலமுருகன், மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தமிழ்தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் நிலவன், மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், எ.சந்திரமோகன் மாவட்டக் குழு உறுப்பினர் பொன்.கதிரவன், ஏஅய்சிசிடியு மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினர்.

கருத்தரங்கில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனியார் மருத்துவமனைகள் கருமுட்டை தானம் என்ற பெயரில் விற்பனையில் ஈடுபடுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க குழு நியமிக்கப்பட வேண்டும்.

மத்திய மாநில பெண்கள் ஆணையங்கள் தாமாக முன்வந்து கருமுட்டை தானம் என்ற பெயரில் விற்பனையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணவனால் கருமுட்டை விற்பனைக்கு தள்ளப்பட்டு பின்பு கணவனால் தாக்கப்பட்ட சகுந்தலா என்ற பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளாலும் கணவர் நவராஜூவாலும் சகுந்தலாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சகுந்தலாவும் பொன்.கதிரவனும் கொலை வெறி தாக்குதலுக்குள்ளாகியுள்ளதால் இந்த வழக்கை சிபிசிஅய்டிக்கு மாற்ற வேண்டும்.

Search