COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

இகக தோழர்கள் இகக மாலெயில் இணைந்தனர்

திருவள்ளூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 05.03.2014 அன்று மாலெ கட்சி பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது. பேரணிக்கு கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் தலைமை தாங்கினார். காவல்துறை பேரணி புறப்பட இருந்த இடத்துக்கு வந்து, தோழர்கள் அணிதிரள்வதை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திடீரென பேரணிக்கு அனுமதி மறுத்ததால், மக்கள் திரள் நிறைந்த அந்த இடத்திலேயே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஒரு பேரணிக்கு பதிலாக அய்ந்துக்கும் மேற்பட்ட பேரணிகள் நடந்தன.

மக்கள் போராட்டங்களை முதலாளித்துவ கட்சிகளுக்கு மாற்றி மாற்றி அடகு வைக்கும் இககவின் நடவடிக்கைகளால் இகக மீது நம்பிக்கை இழந்த இககவின் புழல் ஒன்றியக்குழு தோழர்கள், 100 கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெகுமக்கள் உறுப்பினர்களுடன் சமீபத்தில் இககமாலெயில் இணைந்தனர். அவர்களும் இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 300 பேர் வரை கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தோழர் அன்புராஜ் வரவேற்புரையாற்றினார். கட்சியில் புதிதாக இணைந்த தோழர்கள் மணி, ராமன், அசோகன் ஆகியோருடன் அரசியல் தலைமைகுழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் புவனா உரையாற்றினர்.

Search