COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

புரட்சிகர இளைஞர் கழகத்தின் போராட்டக் குரல் வலுவான லோக் ஆயுக்தா சட்டம் இயற்று! டாஸ்மாக் கடைகளை மூடு!

பிப்ரவரி 23 - 26: பிரச்சார இயக்கம்ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் இயற்று, டாஸ்மாக் கடைகளை மூடு, திருபெரும்புதூர் அறிஞர் அண்ணா மருத்துவமனையை 1000 படுக்கை கொண்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்து, அனைத்து கிராமங்களையும் நகரத்தோடு இணைக்க அரசு சிற்றுந்து சேவையை விரிவுபடுத்து, உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.15,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்கு போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 23 - 26 தேதிகளில் திருபெரும்புதூரில் ஆலைவாயில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புரட்சிகர இளைஞர் கழகம் பிரச்சாரம் மேற்கொண்டது.

திருபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடவுள்ள மாலெ கட்சி வேட்பாளரை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்து பிரிவு மக்களும் ஆதரவு தெரிவித்தனர். முதியோர் ஓய்வூதியம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை என்றும், குடியிருக்க வீடில்லாமல் மாட்டுக் கொட்டகையை விட கேவலமான இடத்தில் குடியிருப்பதாகவும், தரமான மருத்துவமில்லை என்றும் மக்கள் புகார் கூறினர்.

பிப்ரவரி 26 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் திருபெரும்புதூரின் பல்வேறு ஆலைகளின் தொழிலாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். புரட்சிகர இளைஞர் கழக காஞ்சிபுர மாவட்டத் தலைவர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் செந்தில், ராஜேஷ் உரையாற்றினர். மாலெ கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் இரணியப்பன், புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மார்ச் 3 - 5: முற்றுகை, கைது, விடுதலை, முற்றுகை, கைது, விடுதலை, முற்றுகை, கைது, விடுதலை

மக்கள் பிரச்சனைகளை, தேவைகளை மக்களிடமே கேட்டு ஆய்வு செய்து மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 7 முதல் பிப்ரவரி 14 வரை பெற்ற ஒரு லட்சம் கையெழுத்துக்களை முதலமைச்சரை சந்தித்து கொடுக்க புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி தலைமையில் புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் மார்ச் 3 அன்று தலைமை செயலகம் சென்றனர். முதலமைச்சரை சந்திக்க விடாமல், காவல்துறையினர் கைது செய்து ஒன்டிதோப்பு காவலர் குடியிருப்பு சமுதாயக் கூடத்தில் சிறை வைத்தனர். காஞ்சிபுரத்தில் தேர்தல் முதல் நாள் பிரச்சாரம் முடித்து முதலமைச்சர் பத்திரமாக வீடு திரும்பிய பின் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிறகு தோழர் செந்தில் தலைமையில் 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நிதி (ரூ.1936) வசூலித்தனர்.

மக்கள் கோரிக்கைகளில் ஒன்றான டாஸ்மாக், சாராயக் கடைகளை மூட வலியுறுத்தியும் மனுவை பெற்று முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரியும் மார்ச் 4 அன்று காலை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து முழக்கங்கள் எழுப்பி தோழர் கு.பாரதி தலைமையில் பேரணியாக சென்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை இழுத்து மூட முயன்றனர். மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு புதுப்பேட்டை சமுதாய கூடத்தில் சிறை வைக்கப்பட்டனர். மாலை 5.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நிதி (ரூ.1136) வசூலித்தனர்.

மனுவை முதலமைச்சரின் போயஸ் கார்டன் வீட்டிற்குச் சென்று கொடுக்க மார்ச் 5 அன்று சென்றனர். ஜெமினி மேம்பாலம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அனைத்து தடைகளையும் மீறி முதலமைச்சரின் போயஸ் கார்டன் வீட்டை நோக்கி முதலமைச்சர் மனுவை வாங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பிச் சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஆழ்வார்பேட்டை சமுதாயக் கூடத்தில் சிறை வைக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

Search