சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்செப்டம்பர்
1946ல், அய்க்கிய அமெரிக்காவின் சில முற்போக்கு இயக்கங்கள் ‘அய்க்கிய
அமெரிக்காவே, சீனத்தை விட்டு வெளியேறு’ என்று துவங்கிய ஒரு வார கால
பிரச்சார இயக்கம் பரந்த வெகுமக்கள் பரிமாணம் பெற்று சீனா முழுவதும்
பரவியது. இதில் பங்கேற்றவர்கள் சீனத்தை விட்டு அய்க்கிய அமெரிக்க ராணுவம்
வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக அறிவித்தார்கள். அவர்கள்
குவாமின்டாங்குக்கு அமெரிக்க உதவியை நிறுத்தும்படியும் கோரினார்கள்.
ஏகபோக அதிகாரத்துவ மூலதனத்தை உறுதிபடுத்தும் நலனிலிருந்து ஷாங்காயில் சிறு கடை வைத்திருப்போர் அகற்றப்பட்டதற்கு எதிராக போர்க்குணமிக்க கிளர்ச்சியை, தேசிய கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, டிசம்பர் 1, 1946 அன்று சிறு வணிகர்கள் துவங்கினார்கள். ஆனால் தங்கள் வாழ்வாதாரத்துக்கான இந்தப் போராட்டத்தை குவாமின்டாங் இரக்கமின்றி எதிர்கொண்டது. ஆனால் இந்த இயக்கம் ஷாங்காயின் மற்ற பிரிவு குடிமக்களிடமிருந்தும் மற்றும் சீனாவின் பிற பகுதிகளிலிருந்தும் பரந்த ஆதரவைப் பெற்றது.
டிசம்பர் 1946ல், அய்க்கிய அமெரிக்க ராணுவத்தின் மத்திய கால ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் தங்கள் குரலை உயர்த்தினர். (பெய்ஜிங் பல்கலைக் கழக மாணவி ஒருவர் இந்தக் கொடுங்கோன்மைக்கு பலியாகியிருந்தார்). இந்த எதிர்ப்பியக்கம் காட்டுத் தீ போல் பரவி சீனா முழுவதும் பல்வேறு இடங்களில் 5 லட்சம் மாணவர்கள் எதிர்ப்புப் பேரணியில் பங்கெடுத்தனர்.
குவாமின்டாங் அரசாங்கம் ‘மறுசீரமைப்பு’ செய்யப்பட்டபோது, 1947 மே மாதத்தில் தேசபக்த பிரச்சார இயக்கத்தில் இன்னும் ஆழமான, பரந்த மாணவர்களின் பங்கேற்பைக் காண முடிந்தது. ‘பட்டினி, சிவில் யுத்தம் மற்றும் ஒடுக்குமுறை’க்கு எதிரானதாக அவர்கள் முழக்கம் இருந்தது. நான்கிங்கில் கூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் அணி வகுத்ததோடு, தாங்களே இரயில்களை ஓட்டிக் கொண்டு, மாணவர்களை நான்கிங்கிற்கு அழைத்து வந்தார்கள். குவாமின்டாங் ராணுவம் மற்றும் அதன் பல்வேறு முகவர்களுக்கும், மாணவர்களுக்குமிடையிலான வீரமிக்க ஆயுத மோதல்களை வரலாறு கண்டது.
இந்தப் போராட்டக் கால கட்டத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டமும் ஓர் உயர்ந்த அலையைக் கண்டது. விஷம்போல் ஏறும் விலை உயர்வு, ஆட்குறைப்பு, ஆலை மூடலுக்கு எதிராக, ஆகஸ்ட் 1946லிருந்து, செப்டம்பர் 1946க்குள், கிட்டத்தட்ட 1920 வேலை நிறுத்தங்கள் ஷாங்காயில் மட்டுமே நடைபெற்றன. இந்த வேலை நிறுத்தங்களில் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளின் போராட்டமும் தீவிரமடைந்தது. சேசுவானிலுள்ள 130 கவுண்டிகளில் அது பேரெழுச்சி என்ற வடிவம் பெற்றது.
1947 பிப்ரவரி 28 முதல், தைவானின் மக்கள் தங்கள் சுயாட்சிக்கான போரை தீவிரப்படுத்தினர். தைவான் அரசியலமைப்பை சீர்திருத்தும் ஒரு தொகுப்புடன் சுயாட்சி மாநிலம் உருவாக்கப்பட்டது. தைவான் மக்களுக்கு எதிராக குவாமின்டாங் அரசு பயங்கரவாத கொள்கையை கடைபிடித்து 10,000 மக்களை கொடிய வழியில் கொன்றொழித்தது.
ஒட்டுமொத்தத்தில், அய்க்கிய அமெரிக்க ஆதரவு பெற்ற குவாமின்டாங் ஆட்சிக்கெதிரான புரட்சிகர போராட்டம் என்பது, விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் ஆயுதப் போராட்டமாகவும், குவாமின்டாங் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், தேசபக்த, ஜனநாயக போராட்டத்தோடு மாணவர், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் வெகுமக்கள் போராட்டமாகவும் ஆக இரு முனைகளில் வடிவம் பெற்றது. இரு முனைகளிலும் குவாமின்டாங் ஆட்சி தொல்லைகளை சந்தித்தது. ராணுவ முனையில் தோல்வியுற்றதோடு மட்டுமல்லாமல் அதன் மக்களை முட்டாளாக்கும் தந்திரத்திலும் அம்பலப்பட்டுப் போனது.
இந்தப் பின்னணியில், ஜூலை 1947ல், பிற்போக்கு குவாமின்டாங்கின் எண்ணிக்கை 43 லட்சத்திலிருந்து 37 லட்சமாக குறைந்தது. மக்கள் விடுதலைப் படையின் எண்ணிக்கை 12 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்ந்தது. எண்ணிக்கையில் மேலோங்கியிருந்த துவக்க காலங்களில் கூட, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் திவால்தனத்துடன் ராணுவ தோல்வியையும் குவாமின்டாங் எதிர்கொண்டது. இதன் விளைவாக நம்பிக்கையின்மையும், தாக்கும் திறனில் சரிவையும் சந்திக்க நேர்ந்தது.
பின் வரிசையிலுள்ள குவாமின்டாங் படைகள் கூட மக்களின் போராட்டம் மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பின் காரணமாக பாதுகாப்பாக இல்லை. ஆனால் இதற்கு மாறாக, மக்கள் விடுதலைப்படை அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் படையின் பின் வரிசை பகுதிகளில் பரந்த ஆதரவை விரிவாக்கிக் கொண்டது. துவக்க காலத்தில் இருந்த சிக்கல்கள் சாதகமானவையாக மாற்றப்பட்டன.
இது யுத்த சூழலில், அடிப்படை மாற்றங்களை குறிப்பதாக இருந்தது. போர்த்தந்திர ரீதியான, புரட்சிகர மக்களின் இராணுவம் கடந்த 20 ஆண்டுகளாக தற்காப்புப் போரில் தான் ஈடுபட்டு வந்தது. சக்திகளின் சம நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, தற்காப்புப் போர் மக்கள் விடுதலைப் படைக்கு ஆதரவான தாக்குதல் போராக மாறியதோடு குவாமின்டாங் ஆட்சியின் முடிவைக் குறிப்பதாகவும் அமைந்தது.
மக்கள் விடுதலைப் படையின் இந்த வெற்றியில், விடுதலைப் பெற்ற பகுதிகளில் விவசாய சீர்திருத்தக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தியது முக்கிய பங்கு வகித்தது. ‘வரைவு விவசாயச் சட்டம்’ உருவாக்கப்பட்டதன் மூலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வர்க்க வழி மற்றும் விவசாய சீர்திருத்தம் தொடர்பான அடிப்படை திசைவழியை உருவாக்கிக் கொண்டது.
தனி நபர் அழித்தொழிப்புக்குப் பதிலாக நிலபிரபுத்துவ பண்ணை முறையை ஒழிப்பது தான் விவசாய சீர்திருத்தத்தின் நோக்கமாக உருவாக்கப்பட்டது. நிலப்பிரபுக்கும் பணக்கார விவசாயிக்கும்; பெரும் நிலப்பிரபு, நடுத்தர, சிறு நிலப்பிரபு; பொதுவான நிலப்பிரபுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரத்தில் இருக்கும் நிலப்பிரபு என நாம் பிரித்து எல்லைக் கோட்டை வகுத்துக்கொள்ள வேண்டும். நிலச் சீர்திருத்தம் என்ற வரையறைக்குள் ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனி கொள்கைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஆளும் அதிகாரத்திலிருக்கும் நிலப்பிரபுவை நாம் தாக்க வேண்டும், வாடகை மற்றும் வட்டியை குறைக்கும் கோரிக்கையிலிருந்து துவங்க வேண்டும். நாம் அரசியல் மற்றும் அமைப்பு வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக முன்னேற வேண்டும்.
விவசாய சீர்திருத்தத்தை முன்னெடுக்கிற வேளையில் ஏழை விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்களை உறுதியாக சார்ந்திருக்க வேண்டும் மற்றும் முதுகெலும்பான சக்தியாக அவர்களை ஒற்றுமைப்படுத்தி அணி திரட்டிக்கொள்ள உதவவும் வேண்டும். மத்தியதர விவசாயிகளுடன் வலுவான ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களை தத்துவார்த்தரீதியில் அணிதிரட்டி கல்வி அளிப்பதன் மூலம் தான் இந்த ஒற்றுமையை அடைய முடியும். மத்தியதர மற்றும் பணக்கார விவசாயிகளுக்கிடையே உள்ள எல்லைக் கோட்டை வகுத்துக் கொள்ள வேண்டும். நிலங்களை சமமாக பகிர்ந்தளிப்பதில் மத்தியதர விவசாயிகளின் எண்ணங்களை மறுக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது.
அவர்கள் பக்கமுள்ள எதிர்ப்புகள் எதையும் மொத்தமாக மறுதலிக்கக் கூடாது. ஏழை விவசாயிகளுக்கு சரிவிகித அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தை விட கொஞ்சம் கூடுதல் நிலம் மத்தியதர விவசாயிக்கு அளிக்கப்படுவதை அனுமதிக்கலாம். மத்தியதர விவசாயிகளின் முன்னேறிய பிரிவினரை சுயாட்சி அரசாங்க பதவி வகிக்கவும், விவசாய சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கும் உற்சாகப்படுத்த வேண்டும்.
பணக்கார விவசாயிகளின் அதிகப்படி எஞ்சிய உபரி நிலம் மற்றும் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். பழைய வகை பணக்கார விவசாயிகள், முக்கியமாக, நிலப்பிரபுத்துவ சுரண்டல் மூலமே உபரி நிலத்தை உருவாக்கியிருப்பர். அந்த நிலம் மேலான தரத்துடனும் பரந்தும் இருக்கும். மேலும், போரில் துவக்க காலத்தில் அவர்களின் இயல்பான ஆதரவு குவாமின்டாங் பக்கமே இருக்கும்.
உள்ளூர் உபரி நிலம், தனியார் மற்றும் நிலப்பிரபுவுக்கு சொந்தமான நிலம் ஆகியவை உள்ளூர் விவசாய சங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் சராசரியாக, சமவிகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சமமாக பகிர்ந்தளிக்கப்படும் இயக்கப்போக்கில், அளவு மற்றும் தரம் ஆகியவை சமன்படுத்தப்பட வேண்டும். ‘வரைவு விவசாயச் சட்டம்’ ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு காலத்தில், விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் 10 கோடி விவசாயிகள் நிலம் பெற்றனர். நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்பு, ஒருவருக்கொருவர், சுயமாக முன்வந்து ஒத்துழைப்பது மற்றும் உதவுவதன் மூலம் விவசாய உற்பத்திகளை அதிகப்படுத்த, புத்துருவாக்க விவசாய வெகுமக்களிடம் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில், விவசாய சீர்திருத்தம் விவசாய உற்பத்தியை உயர்த்துவதற்கு பங்களிப்பு செய்ததோடு, அந்தப் பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் பங்களித்தது. மேலும், விவசாய சமூகம் விடுதலைக்கான யுத்தத்தில் அதிக உற்சாகத்துடன், அதிகரித்த அளவிலும் பங்களிப்பு செய்து, மக்கள் விடுதலைப்படையின் பின் அணிவரிசையை உறுதிப்படுத்தி, தற்காப்பு யுத்தத்தை தாக்குதல் யுத்தமாக மாற்ற வழிவகை செய்தது. ( தொடரும் )