இந்தத் தொகுதி தொன்றுதொட்டு இருந்துவரும் தொழிலாளர் வர்க்கத் தொகுதியாகும். கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் என 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். மொத்தம் 16,41,792 வாக்காளர்கள். 8,30,100 பேர் ஆண்கள், 8,11,671 பேர் பெண்கள். இதரர் 21 பேர்.
தொகுதிக்குள் ஜவுளி மற்றும் பொறியியல் துறையில் மிகப் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இப்போது தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து கொண்டது. கல்வி, மருத்துவம், ஓட்டல் என பல துறைகளில் மூலதனம் பாய்ந்திருக்கிறது. ஆயினும் 90%க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களால் நிறைந்த தொகுதி. சின்னியம்பாளையம் போன்ற வீரஞ்செறிந்த தொழிலாளர் போராட்ட வரலாறு கொண்டது.
தொகுதியில் 7 முறை இடதுசாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இகக(மாலெ) இப்போதுதான் முதன்முறையாக போட்டியிடுகிறது. பிரிக்கால் தொழிற்சங்கத்தில் புரட்சிகர சக்தியாக துவங்கிய வேலை பாட்டாளி வர்க்க கட்சியின் புரட்சிகர அரசியலை நாடாளுமன்றத் தேர்தல் போராட்டத்தில் எடுத்துச் செல்லும் அளவு உயர்ந்துள்ளது. பிரிக்கால், சாந்தி கியர்ஸ் என அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர் வேலைகளோடு, குடியிருப்புப் பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர் மத்தியில் உழைப்போர் உரிமை இயக்கம், இடம் பெயரும் தொழிலாளர் மத்தியில் வேலை என முன்னுதாரணமிக்க வேலைகள் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
பாட்டாளி வர்க்கத்துக்கே உரிய அமைப்பாக்கப்பட்ட வகையில் பிரச்சார வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொகுதியின் வேட்பாளராக எல்எம்டபுள்யுவில் வேலை செய்யும் தொழிலாளி தோழர் தா.சந்திரன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
‘தொழிலாளி ஓட்டு தொழிலாளிக்கே’ என்று தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிக்கப்படு கிறது. பாஜக உசுப்பிவிடும் மதவெறி அரசியலுக்கான ஒரு களமாகவும் இத் தொகுதி உள்ளது. ஆகவே மதவெறி அரசியலோடு வரும் காளையின் கொம்பை பிடித்து அடக்குகிற சவாலும் புரட்சிகர இடதுசாரி அரசியலுக்கு உண்டு. தொகுதி மக்களிடம் குறிப்பாக உழைப்பாளி மக்களிடம் மாலெ கட்சியின் தாக்குதல் மிக்க பிரச்சாரம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
இகக மாலெ வேட்பாளர் தோழர் தா.சந்திரன் எல்எம்டபுள்யு தொழிலாளி. பி.காம். பட்டதாரி. சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. தீம்தரிகிட, தாமரை போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். எல்எம்டபுள்யு தொழிற் சங்கத்தில் உதவித் தலைவர் மற்றும் பொருளாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். +2 படிக்கும் காலத்திலிருந்து இடதுசாரி இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்.
முதலில் யுசிபிஅய், பிறகு சிபிஅய், பிறகு அதிலிருந்து சிபிஅய்(எம்எல்) கட்சியில் இணைந்தவர். பிரிக்கால் போராட்டத்தின் துவக்கம் முதலே அதில் பங்கு பெற்று வருபவர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் இடிந்தகரை சென்றபோது மாலெ கட்சி பொதுச் செயலாளர் தோழர் திபங்கருடன் கைது செய்யப்பட்டவர்.