இகக மாலெ திருவள்ளுர் மாவட்டக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலக்
கமிட்டி உறுப்பினரும் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலச்
செயலாளருமான தோழர் எஸ்.ராஜா பிப்ரவரி 19 அன்று அதிகாலை மரணமுற்றார். இருபது
ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியிலும் வெகுமக்கள் அமைப்புக்களிலும்
பொறுப்புக்கள் ஏற்று கடுமையான தொடர் பணியாற்றிய அவரது அகால மரணம்
ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல தோழர்கள் மீளவில்லை.
தியாகம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு என்ற கம்யூனிஸ்ட் இயல்புகள் அவரிடம் இருந்தன. கட்சியும் வெகுமக்கள் அமைப்புக்களும் நடத்துகிற அன்றாட போராட்டங்களின் ஊடே உருவாகும் நெருக்கடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு சமாளிப்பதில் அவர் பங்கு முக்கியமானது. எப்போதும், கட்சி வேலைகளைப் பற்றியும் சமூக மாற்றம் பற்றியும் சிந்திப்பதும் சக தோழர்களிடம் பேசுவதும்தான் அவரை பற்றிய நினைவாக தோழர்கள் மத்தியில் இருக்கிறது. அவர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் எப்போதும் உற்சாகம் தருவதாக இருந்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம், அதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் கட்சியின் நிகழ்ச்சிகளில் தோழர் ராஜா முக்கியமான பங்காற்றினார். சென்னை மாநகரக் கமிட்டி உறுப்பினராக இருந்தபோது, அம்பத்தூர் பகுதி தொழிலாளர்களின் அனைத்து ஆலை மற்றும் பகுதி போராட்டங்களிலும் முன்னணியில் இருந்த தோழர் ராஜா, பகுதி வேலைகள் உறுதிப்படுத்தப்படுவதன் அவசியத்தை எப்போதும் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
கட்சி ஊழியர்கள் களத்தில் மட்டுமின்றி, கருத்தியல், அரசியல்ரீதியாக அடுத்தடுத்த உயர் நிலைகளுக்குச் செல்ல கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதையும் அவர் தோழர்களுடனான தனது ஊடாடல்களில் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
சக தோழர்கள் பற்றி குறைபாடு கண்டு அவர் எப்போதும் பேசியதில்லை. சக தோழர்களை அரசியல்ரீதியாக உற்சாகப்படுத்துவதே அவரது சிறப்பியல்பாக இருந்தது. சக தோழர்களின் சொந்தப் பிரச்சனைகளைக் களைந்து, அவர்கள் அவற்றைக் கடப்பதில் அக்கறை எடுத்துக் கொண்டு செயலாற்றிய தோழர் ராஜா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தனது குடும்பத்தின் நிலை பற்றி எப்போதும் தோழர்களுடன் பேசியதில்லை.அரிய பண்புகள் கொண்ட, கட்சியின் மிகவும் கடப்பாடு கொண்ட ஊழியரான தோழர் ராஜாவின் மறைவு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
பிப்ரவரி 19 அன்று நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், மஞ்சுளா, பாரதி, ஜானகிராமன், சேகர், இரணியப்பன், ஜவகர், தேன்மொழி, மலர்விழி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பழனிவேல், முனுசாமி, மோகன், குமரேஷ், தேவகி, குப்பாபாய், லில்லி, சீதா மற்றும் முன்னோடிகளுடன் பல நூற்றுக்கணக்காணவர்கள் பங்கேற்றனர்.