திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 13,53,501. 6,73,167 ஆண்கள், 6,80,264 பெண்கள், 80 பேர் இதரர். தொகுதியில் தொழிலாளர் வர்க்கப் பகுதியும், கிராமப்புறப் பகுதியும் இணைந்து உள்ளன. அனந்தன் நம்பியார், கல்யாண சுந்தரம், உமாநாத் என பல இடதுசாரி தலைவர்கள் இந்தத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றவர்கள். ஸ்ரீரங்கம், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதி.
பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை, மத்திய அரசின் துப்பாக்கித் தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே ஒர்க்ஷாப் ஆகியவை தொகுதிக்குள் உள்ளன. இககமாலெயின் பாரம்பரிய விவசாய வேலைப் பகுதிகளான கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில் ஒன்றியங்கள் திருச்சி தொகுதியில் இடம் பெறுகின்றன. இந்தத் தொகுதியில் பெல் ஆலையை சார்ந்து இயங்கி வரும் துணை நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து நிற்கின்றனர். மழை பொய்த்துப் போனதால் விவசாயமும் கடும் சிக்கலை சந்திக்கிறது. திருச்சியைச் சுற்றியுள்ள ஊராட்சிகள் பல மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுவிட்டதால் நூறு நாள் வேலையில் கிடைத்த வேலை வாய்ப்பும் பறிபோய் விட்டது.
புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் ஒரு போராட்ட சக்தியாக மாலெ கட்சி எழுந்து வருகிறது. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக்கூலி, அளவு முறை ரத்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறது. சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கோவில் நுழையும் உரிமை, பொதுச் சொத்தில் பங்கு, தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு என தொடர் இயக்கம் நடத்துகிறது.
மாலெ கட்சியின் புரட்சிகர நிலைப்பாட்டால் கவரப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)லிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் இகக(மாலெ)யில் இணைந்துள்ளனர். கட்சி உறுப்பினர்கள் 1000 பேரில் கிட்டத்தட்ட அனைவரும் தொகுதிக்குள் வருகின்றனர். டாஸ்மாக் கடைகள், வரதட்சணை கொடுமை, பின்தங்கிய கலாச்சார முறை இவற்றுக்கு எதிராக, பெண்களின் அச்சமற்ற சுதந்திரத்திற்காக மாலெ கட்சி தொடர்ந்து பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது. நூறு நாள் வேலை தொடர்பான போராட்டத்தில் அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்துப் போராடியுள்ளது. இந்தப் பின்புலத்தில் மாலெ கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
தோழர் ஆசைத்தம்பி (வயது 42) பி.ஏ., பி.எட்., படித்தவர். சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மாணவப் பருவத்திலேயே அரசியல் இயக்கங்களுக்கு வந்தவர். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை இனங்கண்டு இணைந்தவர். நிலத்தடி நீரை உறிஞ்ச வந்த கல்லாக்கோட்டை கால்ஸ் சாராய ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முன்நின்று வழக்குகளை சந்தித்தவர். தொழில்முறை புரட்சியாளராக தன்னை நிறுத்திக் கொண்டவர். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில், 2011 சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வக்கோட்டையில் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.