“நான் மரண தண்டனையை நீக்கி விடுவதையே ஆதரிப்பேன். நாடு ஒட்டுமொத்தமாக
மரண தண்டனையை நீக்கி விடுவதுதான் பொருத்தமாக இருக்கும்” - மரண தண்டனை பற்றி
டாக்டர் அம்பேத்கர்
அவனைத் தூக்கிலிடுங்கள் !
அவன் உணவு வேண்டும் துணிமணிகள் வேண்டும் என்கிறான்
அது மட்டும் போதாதாம், அவனுக்கு நியாயமும் வேண்டுமாம்
அதற்கும் மேலே அவனுக்கு உண்மையான சுதந்திரமும் வேண்டுமாம்
அவனைத் தூக்கிலிடுங்கள் !
அவன் அவனுக்கு முறையான வேலை வேண்டும் என்கிறான்
வேலை மட்டும் போதாதாம், அவனுக்கு வேலையின் பயன்களும் வேண்டுமாம்
அதுமட்டுமல்ல, அவனுக்கு அவன் வேலை மற்றும் அதன் பயன்கள் மீதான
எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பாத்தியதை வேண்டுமாம்
அவனைத் தூக்கிலிடுங்கள் !
அவன் அவனுக்கு வெற்றுப் பேச்சுக்கள் வேண்டாம் என்கிறான்
பொய்யான வாக்குறுதிகள் வேண்டாமாம், வன்முறை ஆட்சி வேண்டாமாம்
பசித்திருக்கும் நிர்வாண மனிதர்களின் எரியும் இதயங்களின் மீது
எழுப்பப்பட்ட ஒரு பொய்யான ஜனநாயக சிம்மாசனம் வேண்டாமாம்
அவனைத் தூக்கிலிடுங்கள் !
ஒடுக்கு முறையின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள அமைப்பு முறையை,
அவன், ஒவ்வொருவரோடும் கரம் கோர்த்து மாற்றுவேன் என்கிறான்
அவன் சந்தேகமில்லாமல் ஏதேனும் அந்நிய சக்தியின் கூட்டாளியாக இருக்க வேண்டும்
அவனுக்கு தாமதமின்றி அவனது துரோகத்திற்கு பொருத்தமான நியாயமான
பரிசுகளைத் தருவோம்
தேச பக்தி நிறைந்த தூக்குப் போடுபவர்களே, வாருங்கள்!
மூலதனத்தின் நம்பகமான சேவகர்களே, வாருங்கள்!
அவனைத் தூக்கில் போடுங்கள் !
- சுதந்திர இந்தியாவில் நக்சல்பாரி கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் கிஷ்தா கவுடு மற்றும் பூமையா தூக்கிலிடப்பட்டபோது 1978ல் கோரக் பாண்டே எழுதிய கவிதை
“நீதியும், ஒரு பாம்பைப் போல வெறும் காலோடு இருப்பவர்களைத்தான் கடிக்கும்” - எல் சர்வடாரில் தியாகியான ஆஸ்கர் அமுல்ஃபோ ரோமரோ
ஒரு கவுரவக் கடமை
முதலாளித்துவ வர்க்கங்களின் நீதி என்பது, சிறிய மீன்களை மட்டும் பிடித்து அகோரப் பசி கொண்ட சுறா மீன்களை தப்பிக்கவிடும் ஒரு வலை போன்றது. போரின்போது கோடி கோடியாய் கள்ளச்சந்தையில் லாபம் சம்பாதித்தவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் அல்லது சிறுதண்டனையுடன் விட்டுவிடப்படுகிறார்கள். சிறு திருட்டில் சிக்கிக்கொண்ட ஆண்களும் பெண்களும் கொடுமையான தீவிரம் கொண்ட தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
அவர்களது சிறைக் கொட்டடிகளில் உஷ்ணமில்லை. அவர்கள் பசியாலும் குளிராலும் வாடுகிறார்கள், கைவிடப்பட்டவர்கள், கருணையையும் இரக்கத்தையும் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.
பாட்டாளி வர்க்கப் புரட்சி, கருணையின் ஒரு சிறு ஒளிக்கீற்றின் மூலம் இந்த சிறைகளின் இருண்ட வாழ்விற்கு ஒளியூட்ட வேண்டும்; கடுமையான தண்டனைகளைக் குறைக்க வேண்டும்; விலங்குகள் பூட்டுதல் சாட்டையால் அடித்தல் போன்ற மிருகத்தனமான தண்டனைகளை ஒழித்துக்கட்ட வேண்டும்; எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் மருத்துவக் கவனம் உணவுப்படி, வேலை நிலைமைகள் ஆகியவற்றை முன்னேற்ற வேண்டும். இது ஒரு கவுரவக் கடமை!
இப்போதிருக்கிற தண்டனை முறை, மிருகத்தனமான வர்க்க உணர்வும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமும் நிறைந்ததாகும். இந்த முறை தீவிரமாக மாற்றப்பட்டாக வேண்டும்.
ஆனால் சோசலிச உணர்வோடு இணக்கமான ஒரு முழுமையான சீர்திருத்தம் ஒரு புதிய பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் அடிப்படைகள் மீதுதான் சாத்தியமாகும்; ஏனெனில், இறுதி ஆராய்ச்சியில், சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தில்தான் குற்றமும் தண்டனையும் ஆழ வேர் கொண்டுள்ளன. ஆனால் ஒரு தீவிரமான நடவடிக்கையை, விரிவான சட்ட நடைமுறைகள் இல்லாமலே நம்மால் எடுக்க முடியும். அதிதீவிரமான பிற்போக்கான ஜெர்மானிய சட்டத்தின் மாபெரும் அவமானமான மரண தண்டனை உடனடியாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் போர் வீரர்களின் அரசாங்கத்திற்கு இவ்விசயத்தில் ஏன் தயக்கங்கள் இருக்கின்றன? மகத்தான மனிதரான பெக்காரியா, மரண தண்டனையின் அவசியத்தை 200 ஆண்டுகளுக்கு முன்பே சாடினார். லெடபர்க், டாமிக் ஆகிய உங்களுக்கு அது அவக்கேடாகத் தெரியவில்லையா?
உங்களுக்கு நேரம் இல்லை, ஆயிரம் கவலைகள் உண்டு, ஆயிரம் பிரச்சனைகள் உண்டு, உங்கள் முன் ஆயிரம் கடமைகள் உண்டு ? அது உண்மைதான். ஆனால் கையில் கடிகாரத்தோடு, “மரண தண்டனை ஒழிக்கப்படுகிறது” எனச் சொல்ல எவ்வளவு நேரம் தேவைப்படும் எனக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சனையிலும் கூட நீண்ட விவாதங்கள் அதன்பின் வாக்கெடுப்புக்கள் அவசியம் வேண்டும் என நீங்கள் வாதாடுவீர்களா? சம்பிரதாயங்கள் அதிகார வரையறைப் பிரச்சனைகள் துறைசார்ந்த சிவப்புநாடா விவகாரங்களில் உங்களை நீங்கள் இழந்து விடுவீர்களா? உணர்வின் மகோன்னதம், உயர்ந்த அறநெறிகள், மகத்தான நடவடிக்கைகள் இல்லாமல் உலகின் வரலாறு உருவாக்கப்பட்டதில்லை.
லிபக்னெட்டும் நானும் என் வாழ்வில் மூன்றரை ஆண்டுகள் இருந்த சிறையில் இருந்து வெளியே வரும்போது, எங்கள் சக சிறைவாசிகளின் கண்கள் பின் தொடர “உங்களை நாங்கள் மறக்க மாட்டோம்” என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். நாங்கள், ஜெர்மானிய சிறைகளில் உள்ள அனைத்து சிறைவாசிகளின் நிலைமைகளையும் உடனே மாற்றுமாறு தொழிலாளர்கள் மற்றும் போர் வீரர்கள் கவுன்சிலின் நிர்வாகக் குழுவிடம் கோருகிறோம்!
ஜெர்மானிய தண்டனைச் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்கக் கோருகிறோம்!மக்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில், ரத்தம் ஆறாக ஓடியுள்ளது. இன்று, அந்த மதிப்பிட முடியாத திரவத்தின் ஒவ்வொரு துளியையும் பளிங்கு கிண்ணங்களில் அர்ப்பணிப்போடு பாதுகாக்க வேண்டும். புரட்சிகர நடவடிக்கை மற்றும் ஆழ்ந்த மானுட நேயம் இவை மட்டுமே, சோசலிசத்தின் உண்மையான உயிர் மூச்சுக் காற்றாகும்.
ஓர் உலகம் தலைகீழாக புரட்டிப் போடப்பட வேண்டும். ஆனால், தவிர்த்திருக்கக் கூடிய ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் சிந்தும்போது, அது ஒரு குற்றச்சாட்டாகிறது; ஒரு சாதாரண மண்புழுவை தெரியாத்தனமாக மிருகத்தனத்துடன் ஒருவர் நசுக்கிவிட்டாலும், அவர் ஒரு குற்றம் செய்கிறார்.
(ரோசா லக்சம்பர்க் முதல் உலகப் போரை எதிர்த்ததற்காக கார்ல் லிபக்னெட்டோடு சிறையில் வைக்கப்பட்டு, நவம்பர் 1918ல் ஜெர்மானிய தொழிலாளர்கள் நடத்திய புரட்சிகர எழுச்சியால் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நவம்பர் 1918ல் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து)