COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, March 31, 2014

கன்னியாகுமரியில் முற்போக்கு பெண்கள் கழகம் பிரச்சாரம்

நாகர்கோவிலில் 19.03.2014 அன்று அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இகக(மாலெ) வேட்பாளர் தோழர் அந்தோணிமுத்துவிற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரக் கூட்டம் நடத்தியது. கூட்டத்திற்கு தோழர் சுசிலா தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி உரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான தோழர் அந்தோணிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், மீனவர் சங்கத் தலைவர் ஆண்றோ லெனின் ஆகியோர் உரையாற்றினர்.

 கூட்டத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில் பேசிய பெண்கள் அதிமுக, திமுக கட்சிகளுக்கு நாம் ஓட்டு போட்டது ஓட்டு கேட்டது போதும், இனி நமக்காகப் போராடும் சிபிஅய்எம்எல் கட்சியின் மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்தில் வாக்கு கேட்போம், ஆதரவு திரட்டுவோம் என்றார்கள். 

20.03.2014 அன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இகக(மாலெ) ஊழியர் கூட்டம் நடைபெற்றது. வேட்புமனு தாக்கல், பிரச்சார நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. 26.03.2014 அன்று புதுக்கடை தியாகிகள் நினைவுச் சின்னத்தில் இருந்து பிரச்சாரத்தைத் துவக்க முடிவு செய்யப்பட்டது. இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். 

Search