COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

இகக, இககமாவுக்கு இகக மாலெயின் கடிதம்

(இகக, இககமா மாநிலச் செயலாளர்களுக்கு மார்ச் 11, 2014 தேதியிட்டு எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் நேரில் அளித்துள்ளார்)

தோழர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ம் இணைந்து தமிழ்நாட்டில் தனித்து  நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.

எங்கள் கட்சி, மூன்று நட்சத்திரக் கொடி சின்னத்துடன் திருபெரும்புதூர், திருச்சி, கோயமுத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி நாடளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இடதுசாரி ஒற்றுமை கருதி எங்கள் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள் தனித்து போட்டியிடுவதால், இடதுசாரி ஒற்றுமை கருதி, நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் இகக, இககமா உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளை ஆதரிக்க இருக்கிறோம்.

தோழமையுடன்,
எ.எஸ்.குமார்
மாநில தலைமையகத்துக்காக

Search