COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

உழைக்கும் பெண்கள் தின பிரச்சாரக் கூட்டங்கள்

பெண்கள் விரோத அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக கூட்டணிகளை தோற்கடிக்க,  பெண்களின் சமத்துவம், கவுரவம், பாதுகாப்பு, சமக்கூலி மற்றும் அச்சமற்ற சுதந்திரத்துக்காக போராடுகிற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் விழுப்புரத்திலும் கன்னியாகுமரியிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தியது.

சாரயக் கடைகளை அகற்ற வேண்டும், குக்கிராமங்கள் வரை ரேசன் கடைகளை விரிவுபடுத்த வேண்டும், தினசரி ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும்,ரத்தசோகை, எடை குறைவுடன் குழந்தைகள் பிறப்பு, ஊட்டச்சத்து இல்லமால் இறப்பு போன்றவைகளை தடுத்து நிறுத்த அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையும் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் 300 நாள் வேலை, 300 ரூபாய் சம்பளம் வேண்டும்,, ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்,விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

செங்கல்சூளை, கரும்புவெட்டுதல், கல்குவாரிகள், சிறுகடைகள், துணிக்கடைகள், மளிகைக் கடைகள், வாரத்தண்டல், தகவல் தொழில்நுட்பம் என அனைத்திலும் பெண்கள் உழைப்பு ஈவிரக்கமின்றி சுரண்டப்படுவதற்கு எதிராக, இருளர் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய காவலர்களை இன்னும் கைது செய்யாத, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அறிவிக்கப்பட்ட 13 கட்டளைகளை நிறைவேற்றாத, விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, வேலைவாய்ப்பு உருவாக்கத் தவறிய அஇஅதிமுக அரசுக்கு எதிராக, பெருமுதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக பெண்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக திருநாவலூர் வட்டத்தலைவர் தோழர் ஜே.சம்மனசுமேரி தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் ஆர்.சுசீலா, மாவட்டச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி, மாநில தலைவர் தோழர் தேன்மொழி, மாலெ கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன், அவிதொச மாவட்ட அமைப்பாளர் தோழர் கலியமூர்த்தி உரையாற்றினர். மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மாலெ கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக தோழர் வெங்கடேசனை அறிமுகப்படுத்தினார். தோழர் கந்தசாமி நன்றியுரையாற்றினார்.

Search