மார்ச் 23 அன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேம்பநாட்டில் பகத்சிங் நினைவு உறுதியேற்புப் பொதுக்கூட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி இகக (மாலெ) வேட்பாளர் அறிமுகக் கூட்டமாக நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு இகக(மாலெ) மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் இகக(மாலெ) விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தோழர் வெங்கடேசனை அறிமுகப்படுத்தினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் மற்றும் வேட்பாளர் தோழர் வெங்கடேசன் உரையாற்றினர்.