அஇஅதிமுகவின் செங்கோட்டை அதிவேக
விரைவு ரயில் தயாராகிவிட்டது. தமிழ்நாட்டிலும், நாட்டின் பிற பகுதிகளிலும்
யார், எந்த கூட்டணி என்ற தெளிவு இன்னும் பல கட்சிகளுக்கு ஏற்படாத சூழலில்
ஜெயலலிதா மட்டும் மிகுந்த நம்பிக்கையுடன் தெளிவுடன் கூட்டணி அறிவித்து,
எங்களுக்கு இந்தக் கூட்டணி போதும் என்று அறிவித்து தேர்தல் அறிக்கை என்கிற
ஓர் ஏமாற்றுத் தொகுப்பையும் வெளியிட்டுவிட்டார். முடிவாகாத ஒரே விசயம்,
கூட்டணியில் இருக்கிற இகக, இககமாவுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த இடங்கள்
ஒதுக்கப்படும் என்பது மட்டும்தான்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளான இகக, இககமா கட்சிகள் ரொம்ப நல்லவர்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்வார்கள். தொடர் கூட்டணி, சட்டமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் நன்றி பிறழா ஆதரவு, அறிக்கைகள் என இருந்தபோதும் நாற்பது தொகுதிகளிலும் அஇஅதிமுக மக்களவை தேர்தல்களில் போட்டியிடும் என்று அறிவித்தார் ஜெயலலிதா. தோழர்கள் அசரவில்லை. பிறகு, கூட்டணி அறிவிப்புக்கள் வெளியாயின.
இகக, இகக மா கட்சிகள், பிப்ரவரியில் நடந்த இரண்டு சட்டமன்ற நிகழ்வுகளிலும் ஜெயலலிதாவின் மனங்குளிர நடந்து கொண்டார்கள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அவர் புகழ் பாடும் இககமா சட்டமன்ற துணைத்தலைவர் பாலபாரதியின் சிறப்பு நேர்காணலை டெக்கான் கிரானிக்கிள் இதழ் பிப்ரவரி 24 அன்று வெளியிட்டது. ஆனால், பிப்ரவரி 24 அன்று, பொதுவாக தனது பிறந்த நாளன்று கட்சி அலுவலகத்துக்கு வராத ஜெயலலிதா வந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நாற்பது தொகுதிகளுக்கும் அஇஅதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என்று பாலபாரதியோ மற்ற இகக, இககமா தலைவர்களோ எதிர்ப்பார்த்திருப்பார்களா?
கூட்டணி கட்சிகளை மிகவும் சங்கடத்தில் தள்ளுவதாக ஜெயலலிதாவுக்கே பட்டிருக்க வேண்டும். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட அஇஅதிமுக வேட்பாளர்கள் பெயர் திரும்பப் பெறப்படும் என்றார். நான் சொல்லும் இடத்தில் நீ நில், உனக்கு வேறு வாய்ப்பு இல்லை என்று ஜெயலலிதா சொல்கிறார் என்றுதான் திருவாளர் பொதுஜனம் இந்த நடவடிக்கையைப் பற்றிச் சொல்கிறார். இதற்கு மேலும் அந்தக் கூட்டணியில் தொடர வேண்டும் என்று அதிகார பூர்வ இடதுசாரிக் கட்சிகள் கருதும் என்றால் அவர்கள் மன உறுதியை பாராட்டியாக வேண்டும்.
அடுத்த நாளே அடுத்த அதிர்ச்சி தந்தார் ஜெயலலிதா. மக்களவை தேர்தல் 2014க்கான அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையை படித்துப் பார்க்க உங்களுக்கு நேரம் பிடிக்கும், அதனால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் அறிக்கை பற்றிய விளக்கம் தருகிறேன் என்று சொல்லி பத்திரிகையாளர் கூட்டத்தை முடித்துக் கொண்டார். இகக, இககமா கட்சிகளும் அறிக்கையை வாசித்துப் பார்த்து தங்கள் கூட்டணி முடிவில் இருந்து வழுவாமல் இருப்பதையும் ஜெயலலிதா உறுதி செய்துள்ளார். அவர்கள் இந்த தேர்தல் அறிக்கையை கொண்டாடப் போகிறார்கள். என்னதான் அவமானம் நேர்ந்தாலும், தங்கள் முடிவு எந்த அளவுக்கு சரியானது என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளப் போகிறார்கள்.
11 கட்சி கூட்டணி அறிவித்த பிரகாஷ் காரத், பிரதமர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று ‘மேடம் ஜெயலலிதா’ சொன்னதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ‘மேடம்’ சொல்வது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இனி நாட்டுக்கே பொருந்தும்.
அடுத்து மத்தியில் அரசு அமைக்கவிருக்கும் ஒரு கட்சி என்ன தொனியில் வாக்குறுதிகள் முன்வைக்குமோ அந்தத் தொனி தேர்தல் அறிக்கையில் வெளிப்படுகிறது. வளமையான இந்தியா, வலிமையான நல்லரசு அமைய அஇஅதிமுகவுக்கு வாக்களிக்கக் கோருகிறது.
தேர்தல் அறிக்கை 44 பக்கங்கள். அதில் முதல் 14 பக்கங்களிலும் பின்னர் ஆங்காங்கே சில பக்கங்களிலும், தமிழக அஇஅதிமுக ஆட்சியின் மக்கள் நல நடவடிக்கைகள் என்று ஜெயலலிதா வழக்கமாக சொல்லி வருகிற நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாக்குறுதிகள் தொடர்பான பக்கங்களில் முதல் அய்ந்து பக்கங்களுக்கு கூட்டாட்சி, இலங்கை தமிழர், தமிழக மீனவர், கச்சத்தீவு, காவிரி, தமிழ், மின்சாரம், மண்ணெண்ணெய் ஆகியவை பற்றி, மக்களவை தேர்தலை மனதில் கொண்டு, ஜெயலலிதா பேசி வருகிற விசயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற நவதாராளவாத கொள்கை நடவடிக்கையை பின்னோக்கித் திருப்பப்படும் என்று வாக்குறுதி தரப்படுகிறது. பொது விநியோகத் திட்டம் இருக்கிற மாநிலங்களில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்குப் பதில் பொது விநியோகத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
தேசிய அளவிலான வாக்குறுதிகளில், மதச் சார்பின்மை முதலிடம் பெற்றுள்ளது. அடுத்து சமூக நீதி, பெண்கள் நலன் ஆகியவற்றை பாதுகாக்கப் போகிற ஜெயலலிதா, பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்படுவது தடுக்கப்படும் என்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது என்றும் சொல்கிறார். முகேஷ் அம்பானிக்கு 01.04.2014 முதல் தரப்படும் எண்ணெய் விலை இரட்டிப்பு உயர்வு மறு ஆய்வு செய்யப்படும் என்கிறார். கருப்புப் பணம் மீட்கப்படும் என்கிறார். ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு, 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என மிகவும் ஜனரஞ்சகமான நடவடிக்கைகளை வரிசைப்படுத்தும் அறிக்கை, வெளியுறவுக் கொள்கைகளில் மட்டும் இலங்கை, சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூன்றையும் பகை நாடுகளாகப் பார்க்கும் ஆளும்வர்க்கப் பார்வையில் இருந்து சற்றும் மாறுபடவில்லை. மறுபுறம், தமிழ்நாட்டின் சில திட்டங்கள் நாட்டுக்கே விரிவுபடுத்தப்படும் என்று சொல்கிற அறிக்கை டாஸ்மாக் கடைகளை மட்டும் அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.
ஜெயலலிதா சொன்னவற்றை செய்வாரா? 2011 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட் டுள்ளனவா? வீடற்றவர்களுக்கு 3 சென்ட் நிலம் தரப்படும் என்பது ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதி. சென்னை போன்ற இடங்களில் மக்கள் வாழும் இடங்களில் இருந்து அகற்றப்படுவதும் அவர்கள் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுவதையும்தான் நம்மால் பார்க்க முடிகிறதே தவிர, வீட்டுமனை வேண்டும் என்று மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்களும் எழுப்பும் போராட்டக் குரல்களைத் தான் கேட்க முடிகிறதே தவிர, வாக்குறுதிப்படி வீட்டுமனை தரப்பட்டதாக இதுவரையில் பார்க்கவோ, கேட்கவோ முடியவில்லை.
10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிக்கை சொல்கிறது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிற கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை கேட்டு வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளவர் எண்ணிக்கை 16 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது என்று ராமதாஸ் புள்ளிவிவரம் தருகிறார். தடையில்லா மின்சாரம் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கிறதே. 2014 தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைஉயர்வைக் கட்டுப்படுத்த சர்வதேசப் பொருளாதார நுணுக்கங்கள் பேசும் ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தவுடன், ஏன், பால் விலை, பேருந்து கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தும்போது இந்த நுணுக்கங்கள் ஏன் தெரியாமல் போனது? பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் என்று சொல்கிற ஜெயலலிதா, தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறையும் மின்துறையும் நட்டத்தில் இயங்குவதாக ஏன் தொடர்ந்து சொல்கிறார்?
ராமதாஸ் சொல்வதோ, மற்றவர்கள் சொல்வதோ இருக்கட்டும்; வறுமையை ஒழிக்க, தமிழக அரசின் கடைநிலை ஊழியர் பெறும் ஊதியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் அ.சவுந்தரராஜன் கோரிக்கை முன்வைத்தார். அதாவது உழைப்பவர் எவரானாலும் ரூ.15,000 சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை நாசுக்காக முன்வைத்தார். ஜெயலலிதா தனது பதிலுரையில், அவரது கோரிக்கை எப்படி வறுமையைப் போக்கும் என்று தெரியவில்லை என்றும் வறுமையைப் போக்கத்தான் தனது தலைமையிலான அரசு மிகச்சிறப்பான ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்தி வருகிறது என்றும் ஆடு, மாடு பெற்ற பயனாளிகள் இரண்டு ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டு விடுவார்கள் என்றும் சொன்னார். புள்ளிவிவர விளையாட்டு விளையாடும் ஜெயலலிதா தமிழ்நாட்டில், ஆடும் மாடும் பெற்றவர்களில், இதுவரை, எவ்வளவு பேர் வறுமையில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள் என்று விவரம் ஏதும் தரவில்லை.
ஆக, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி இருக்கும் வரை, உழைக்கும் மக்களுக்கு கவுரமான வாழ்க்கை வாழ்வதற்கான வருமானம் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை. (80 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.20 கூட செலவு செய்ய முடியாத நிலை இருக்கும் ஒரு நாட்டில் ஜெயலலிதா செல்வாக்கு செலுத்தும் ஒரு கட்சியோ கூட்டணியோ மத்தியில் ஆட்சிக்கு வந்து, அந்த ஆட்சி வறுமை ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப் புறப்பட்டுவிட்டால், நாட்டில் ஆடு, மாடுகள் எண்ணிக்கை சில நூறு கோடி என்றாகிவிடாதா?)
ஆடும், மாடும் வறுமையைப் போக்கும் நடவடிக்கை என்றால், லட்சிய நோக்கு 2023, புதிய தொழில் கொள்கை 2014, புதிய ஆட்டோமொபைல் கொள்கை 2014 எல்லாம் யாருக்காக? ரூ.15 லட்சம் கோடி முதலீட்டில் பயன்பெறப் போவது யார்? பொருளாதார வலிமையின் மய்யமாக தமிழ்நாடு எழும் என்று தேர்தல் அறிக்கை சொல்கிறது. நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது.
இங்குள்ள மனித ஆற்றல் அப்படிப்பட்டது. அந்த மனித ஆற்றலுக்கு, என்ன கிடைக்கும்? 70 நாட்களுக்கு மேலாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மய்யம் என்று சொல்லப்படுகிற திருபெரும்புதூரில் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்களும், சட்டமன்றத்துக்கு மிக அருகில் உள்ள ஜிம்கானா கிளப் தொழிலாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தீர்வு காண முடியாத ஜெயலலிதா அரசாங்கத்தின் நிர்வாகம், பொருளாதார வலிமையை மட்டும் எப்படி உருவாக்கும்? புத்தாண்டையும் பொங்கல் பண்டிகையையும் போராட்டத்தில் கழித்த அந்தத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ஜெயலலிதா?
கிராம சுகாதார செவிலியர் வேலைப் பளுவைக் குறைக்க, கூடுதல் செவிலியர்களை பணிக்கமர்த்தாமல், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஆஷா முறையில் 4200 பெண்களை, செயல்பாட்டின் அடிப்படையிலான ஊதியத்தில், அதாவது பீஸ் ரேட்டில், பணிக்கமர்த்தத் திட்டமிடும் ஓர் அரசு பெண்கள் நலன்களை எப்படி பாதுகாக்கும்? உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் பால் அலட்சியம் காட்டும் ஓர் அரசு மத்தியில் செல்வாக்கு செலுத்தாமல் தடுக்க வேண்டியயது முதல் கடமையல்லவா?
சமூக நீதி, சிறுபான்மையினர் நலன் என்று தேர்தல் அறிக்கை சொல்வதைப் பார்த்து பரமக்குடியும் தருமபுரியும் மேலப்பாளையமும் கை கொட்டிச் சிரிக்கின்றன. தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க மூர்க்கத்தோடு தயாராகிறது. துரதிர்ஷ்டவசமாக, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய சக்திகள், அதன் வேகத்தை கூட்டுபவர்களாக இருக்கிறார்கள். அஇஅதிமுக அதிவேக விரைவு ரயிலை தமிழ்நாட்டின் எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டிய கடமைக்கு தமிழக மக்கள் தயாராக வேண்டும்.