கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,30,918. ஆண் வாக்களர்கள் 7,24,438. பெண் வாக்காளர்கள் 7,06,416. திருநங்கைகள் 64 பேர். புதிய தலைமுறை வாக்காளர்கள், அதாவது முதல் முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள் 57,589. ஆண்கள் 27,269. பெண்கள் 30,320. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாதபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 1956ல் பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 12 முறை வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு முறையும் இககமா ஒரு முறையும் வெற்றிபெற்றன. 2009ல் அய்மு கூட்டணியில் திமுக வென்றது. அதிமுக ஒரு முறை கூட வென்றதில்லை. அது 1977 முதல் 2004 வரை கன்னியாகுமரியில் போட்டியிடவேயில்லை.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மீன் பிடித் தொழிலும் ரப்பர் தொழிலும் பிரதானமான தொழில்கள். கன்னியாகுமரி மாவட்ட ரப்பர், உலகில் முதல் தரம் வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், ரப்பர் தொழிலாளர்களின் நிலைமையோ மிக மோசமாக உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. மீன் பிடித் தொழிலைப் பொறுத்தவரை, மீனவர்கள் காணாமல் போவது, தாக்கப்படுவது அன்றாட நிகழ்வுகளாக உள்ளன. குளச்சல் வணிகத் துறைமுகத் திட்டம் கனவுத் திட்டமாகவே உள்ளது. கன்னியாகுமரியில் ரப்பர், மீன்பிடி தவிர மற்ற பெரிய தொழில்சாலைகள் இல்லை. அதனால், பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்கச் செல்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள தொகுதி இது. சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் பாஜக இந்துகள் வாக்குகளை பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள தொகுதி கன்னியாகுமரி. இடதுசாரிக் கட்சிகளுக்கும் செல்வாக்குள்ள தொகுதி இது.
இகக(மாலெ) முதல்முறையாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடுகிறது. இகக(மாலெ) வேட்பாளர் தோழர் எஸ்.எம். அந்தோணிமுத்து, எம்.ஏ, வயது 49, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் குமரி மாவட்டச் செயலாளராகவும் ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவராகவும் உள்ளார். கட்டுமான, அமைப்புசாரா, மீன்பிடித் தொழிலாளர் மத்தியில் சங்கச் செயல்பாடுகள் உள்ளன. தோழர் அந்தோணிமுத்து ஆரம்பத்தில் இகக(மா) கட்சியில் செயல்பட்டு வந்தார். ரீத்தாபுரம் பேரூராட்சித் தலைவராக மக்கள் பணியாற்றியுள்ளார். இகக(மா)வின் முதலாளித்துவக் கட்சிகளுக்கு வால்பிடிக்கும் அரசியல் நடவடிக்கையில் முரண்பட்டதால் 7 ஆண்டுகளாக புரட்சிகர இடதுசாரி கட்சியான இகக(மாலெ)யில் செயலாற்றி வருகிறார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் முதல் சிறுபான்மையினர் பாதுகாப்பு, ஆராச்சார் நிலத்தை நாகர்கோவில் மக்களுக்கு வழங்கும் போராட்டம் வரை தொடர்ந்து பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தி வருகிறார். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நடத்துகிற சாக்கர் பள்ளிக்கூடத்தை காங்கிரஸ், இந்து முன்னணி குண்டர்கள் தாக்கியதை கண்டித்து உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது இகக(மாலெ) மட்டுமே. மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்பதால் அவர் மீது பொய் வழக்குகள் போடுவதும் சிறையில் அடைப்பதும் வாடிக்கையாக உள்ளது. பல முறை மக்கள் போராட்டத்தில் சிறை சென்றுள்ளார்.