வானூர் (தனி), திண்டிவனம்(தனி), விக்ரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி, பெரும்பான்மை வறிய மக்களைக் கொண்ட தொகுதி. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35% தலித்துகள் உள்ளனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 11,88,793. ஆண்கள் 6,01,704 பேர். பெண்கள் 5,87,040 பேர். இதரர் 48 பேர்.
வன்னிய சமூக மக்களில் 45% பேர் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். 8.30 லட்சம் விவசாயத் தொழிலாளர்களும், 3.70 லட்சம் விவசாயிகளும் உள்ளனர். தொடர்ந்து தலித் மக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருகிறது. தலித்துகள் கல்வியில், பொருளாதாரத்தில் உயர முயற்சிப்பதை பொறுத்துக் கொள்ளாத சாதி ஆதிக்க சக்திகள் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். இடதுசாரி இயக்கங்கள் கிராமப்புற மக்கள் மத்தியில் நீண்ட காலமாக வேலை செய்து வருகின்றன.
கிராமப்புற வறியவர்கள் கரும்பு வெட்டும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். செங்கல் சூளைகள், கல்குவாரி, நூற்பாலைகள் என அமைப்புசாரா தொழிலாளர்களாய் வாழ்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கிராமப்புற வறியவர் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. கிராமப்புற வேலை உறுதித் திட்ட ஊழலுக்கு எதிராக, சட்டக்கூலி பெற என வறியவர்களின் போராட்டத் தலைவனாய் விளங்கிவருகிறது.
வீட்டுமனை, வீடு, தொகுதி முழுக்க கழிவு நீர் போக்கிகள் இல்லாததும், பொதுச் சுகாதாரம் சீர் கெட்டு இருப்பதும் முக்கிய பிரச்சனைகளாக மக்கள் மத்தியில் முன்வந்துள்ளது.
திருக்கோவிலூர் இருளர் பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டபோது இகக(மாலெ) முதல் கண்டனக் குரல் எழுப்பியது. சாதிய மோதல்கள் எனக் காரணம் காட்டி ஜனநாயக இயக்கங்களை முடக்க ஜெ அரசு 144 தடை உத்தரவை பயன் படுத்தியபோது தடையை மீறி ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுத்தது.
ஒடுக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்துக்காக, மக்களின் மேம்பட்ட வாழ்நிலைமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. மக்கள் போராட்டங்களின் நீட்சியாக, மக்கள் குரலை நாடாளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்ய தேர்தல் களத்திலும் போட்டியிடுகிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் தோழர் மா.வெங்கடேசன் (வயது 44) பி.ஏ., பட்டதாரி. 1984ல் திருநாவலூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கிளைச் செயலாளராக பணியாற்றியவர். பின்னர் சென்னை சென்று 1985லிருந்து வடசென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்துக்கான தேடுதலில் இகக(மாலெ)யோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட அவர் 2000ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசில் பிரதிநிதியாக பங்கெடுத்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டமன்றத் தேர்தலிலும் இகக(மாலெ) கட்சி சார்பில் போட்டியிட்டார். உள்ளூர்மட்ட போராட்டங்களோடு தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டவர் தோழர் வெங்கடேசன்.