COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

இகக மாலெ மாவட்ட மாநாடுகள்

நாமக்கல் - ஈரோடு: ஆறாவது மாவட்ட மாநாடு

நாமக்கல் - ஈரோடு மாவட்ட 6ஆவது மாநாடு 28.02.2014 அன்று ஈரோட்டில் நடைபெற்றது. தோழர் பொன்.கதிரவன் கொடியேற்றினார். கே.ஆர்.குமாரசாமி, கே.மாகாளி, ராஜாத்தி, சுசிலா, பொன்.கதிரவன் ஆகியோர் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார்கள். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கலைந்து சென்ற மாவட்ட கமிட்டியின் வேலை அறிக்கையை ஏ.கோவிந்தராஜ் முன் வைத்தார்.

விசைத்தறி தொழிலாளர்களை அரசியல் சக்தியாக திரட்ட என்ன செய்யலாம், விசைத்தறி தொழிலாளர்களை வார்டு வாரியாக கிளைகளில் அமைப்பாக்க என்ன செய்யலாம்,  வெகுமக்களுடன் நெருக்கமான உறவும் போராட்டமும் நடத்த என்ன செய்யலாம், கட்சி கிளைகளும் உள்ளூர் கமிட்டிகளும் சுயமாக இயங்க என்ன செய்யலாம், கட்சி உறுப்பினர் தீப்பொறி சந்தா எண்ணிக்கையை அதிகப்படுத்த என்ன செய்யலாம், மாவட்ட கமிட்டி உள்ளூர் கமிட்டிகள், கிளை தலைமைக் குழுக்கள் அரசியல் கருத்தியல் அளவில் உயர என்ன செய்யலாம்,  வெகுமக்களை ஈர்க்கும் வகையில் எந்த வகையான பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம் போன்ற கேள்விகள் விவாதத்திற்காக முன்வைக்கப்பட்டன.

கலந்து கொண்ட 32 பிரதிநிதிகளில் 16 பேர் விவாதங்களில் ஈடுபட்டனர். மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் மாநாட்டில் வாழ்த்துரையாற்றினார். மாநில கமிட்டியின் பார்வையாளர் தோழர் சந்திரமோகன் உரையாற்றினார்.

மாநாடு 19 பேர் கொண்ட மாவட்ட கமிட்டியை தேர்ந்தெடுத்தது. 1. ஏ.கோவிந்தராஜ், 2. பொன்.கதிரவன், 3. கே.ஆர்.குமாரசாமி, 4. எம்.ஆறுமுகம், 5. என்.வெங்கடேஷ், 6. ஜாக்குலின்மேரி, 7. டி.தண்டபாணி, 8. கே.முத்து, 9. வி.ஈஸ்வரன், 10. ஜி.நரசிம்மன், 11. ஜி.மாதேஸ், 12. எம்.சக்திவேல், 13. எம்.தங்கவேல், 14. எஸ்.சுப்பிரமணி, 15. பி.கருப்பண்ணன், 16. மோகன்குமார், 17. எஸ்.மோகன்ராஜ், 18. பி.மாரியப்பன், 19. டி.மேகநாதன். புதிய மாவட்ட கமிட்டிக்கு தோழர் எ.கோவிந்தராஜ் மீண்டும் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

திருநெல்வேலி: ஏழாவது மாவட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) திருநெல்வேலி மாவட்ட ஏழாவது மாநாடு 09.03.2014 அன்று தோழர் மாடக்கோட்டை சுப்பு அரங்கத்தில் நடைபெற்றது. தோழர் என்.கணபதி கொடியேற்றினார். தோழர்கள் கே.கணேசன்,  ராமையா, அன்புச்செல்வி, சபாபதி, சுந்தர்ராஜன் ஆகியோர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை நடத்தியது. சிபிஅய்(எம்எல்) கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.சங்கரபாண்டியன் அறிக்கையை முன்வைத்தார். கட்சி மாநிலக்குழு உறுப்பினரும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான எஸ்.எம்.அந்தோணிமுத்து, வாழ்த்துரை ஆற்றினார்.

தோழர்கள் டி.சங்கரபாண்டியன், ஜி.ரமேஷ், கே.கணேசன், வீ.கருப்பசாமி, ராமையா, ரவிடேனியல், அன்புச்செல்வி, சபாபதி, சுந்தர்ராஜன் ஆகிய 9 பேர் கொண்ட புதிய மாவட்டக் கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் டி.சங்கரபாண்டியன் மாவட்டச்  செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கார்ப்பரேட் சார்பு, மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளைத் தோற்கடிக்க வேண்டும், பெருமுதலாளிகள் சார்பு, உழைக்கும் மக்கள் விரோத அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளை புறக்கணிக்க வேண்டும், உண்மையான ஜனநாயகத்திற்காக, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காக புரட்சிகர இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்  கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும், நெல்லை மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரமும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும், கூடங்குளம் அணுஉலை மூடப்பட வேண்டும், போராடும் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி திரும்பப் பெறப்பட வேண்டும் ஆகியவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Search