என்ன செய்ய வேண்டும்?
நூல் வாசிப்பு கூட்டம்
கம்யூனிஸ்ட் கட்சி துவங்கிய அக்டோபர் 11, 2019 முதல், எழுக தமிழ் பேரணி தொடங்கி, சிஎஎ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான காலவரையற்ற பட்டினிப் போராட்டம் வரை, பல்வேறு தொடர் போராட்டங்கள், தலையீடுகள் என விடாப்பிடியான கடமைகள் முழுமையாக நேரத்தை எடுத்துக் கொண்டன.
நவம்பர் 24 அன்று நடந்த மாநில ஊழியர் கூட்டத்தில், என்ன செய்ய வேண்டும் நூல் தொடர்பான வகுப்பு ஜனவரி 26 நடத்த திட்டமிடப்பட்டு வேறு வேறு கடமைகளால் நடத்த முடியாமல் போனது. மக்கள் பிரச்சனைகள் மீது விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கோரும் இயக்கத்தினூடே வகுப்பு நடத்திவிட வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் மார்ச் 15 அன்று சென்னையில் என்ன செய்ய வேண்டும் நூல் மீதான வகுப்பு நடத்தப்பட்டது. மாநில தலைமைக் குழு உறுப்பினர்கள் இந்த வகுப்பில் கலந்துகொண்டனர்.
பாட்டாளி வர்க்க கட்சிக்கு தலைமை தாங்குபவர்கள் மத்தியில் தன்னெழுச்சிக்கு தன்னெழுச்சியாக அடிபணியும் போக்குக்கு எதிராக, பாட்டாளி வர்க்க தலைமையில் புரட்சி என்ற தத்துவத்தை புரிந்துகொள்வதில் உள்ள இடைவெளியை நியாயப்படுத்தும் போக்குகளுக்கு எதிராக லெனின் நடத்திய கருத்துப் போராட்டம் பற்றிய நூல் மீதான வகுப்பு 10 தலைப்புகளில் பத்து தோழர்களால் முன்வைக்கப்பட்டது. தலைப்புகள் மீதான குறிப்புகள் தோழர்களுக்கு உரிய கால அவகாசத்துடன் முன்னரே தரப்பட்டது.
ஆலோசனைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி என்ன செய்ய வேண்டும் நூல் எழுதப்பட்ட பின்னணி, தேவை ஆகியவை பற்றி விரிவாக முன்வைத்தார். அதன் பிறகு தோழர்கள் தங்களுக்கு தரப்பட்ட தலைப்புகள் மீதான குறிப்புகளை மீண்டும் மீண்டும் படித்துள்ளனர் என்பது தோழர்கள் முன்வைத்த விசயங்களில் தெரிந்து கொள்ள முடிந்தது.
1. விமர்சன சுதந்திரம் கேட்டவர்கள் எங்கு போய் முடிந்தார்கள்?
2. தத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் சலுகைக்கு இடமில்லை என என்ன செய்ய வேண்டும் சொல்லும் மூன்று நிலைமைகள்.
3. மக்களின் தன்னியல்பும் கம்யூனிஸ்ட்களின் உணர்வுபூர்வமான முயற்சிகளும்.
4. தொழிற்சங்கவாத அரசியலும் சமூக ஜனநாயக (கம்யூனிஸ்ட் அரசியலும்) எங்கு வேறுபடுகிறது?
5. அரசியல் கல்வி என்ன இருக்க வேண்டும், பொருளாதார சீர்திருத்த போராட்டங்கள் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் பயிற்சி, புரட்சிகரமான தொழிலாளர் வர்க்க முன்னோடிகள், இயல்பான அறிவாளிகளாக எப்படி ஆகிறார்கள்?
6. தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியல் உணர்வு அவர்கள் சங்க அமைப்பு தாண்டி வெளியில் இருந்துதான் வரும். ஏன்?
7. தொழிற்சங்க செயலாளராய் இருப்பது கம்யூனிஸட் அமைப்பாளரது வேலை இல்லை. மக்களின் பிரதிநியாக இருக்க அவருக்கு பயிற்ச்சி அளிக்க வேண்டும்.
8. அமைப்பின் எல்லைகள் பரந்து விரிந்து செல்ல வேண்டும்.
9. தேர்ச்சி நயமின்மை, பக்குவமின்மை ஆகியவை பற்றி, நமக்கு நாமே அதிருப்தி கொண்டு அவற்றை களைய வேண்டும்.
10. கம்யூனிஸ்ட்களின் உணர்பூர்வமான வேலைகள் எப்படி இருக்க வேண்டும்?
என்ற தலைப்புகளை படித்து வந்த தோழர்கள் குறிப்பான கருத்துகளை முன்வைத்தனர்.
தோழர்கள் ஏ.கோவிந்தராஜ், க.ராமன், ஜெயபிரகாஷ்நாராயணன், ஜானகிராமன், ராஜகுரு, சீதா, கே.ராஜேஷ் மற்றும் அமைப்புக்குழு தோழர்கள், வகுப்பில் விவாதிக்கப்பட்ட போக்குகள் மீதான தங்கள் உணர்தல்களை, கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். நாம் செல்ல வேண்டிய தூரத்துக்கு இன்னும் கூடுதல் அர்ப்பணிப்பு, தியாகம், கடுமையான உழைப்பு தேவை என்பது தோழர்களின் கருத்துகளில் மறுஉறுதி செய்யப்பட்டிருந்தது.
தொகுப்பு: சேகர்