சாமான்யர்கள் சிலரின்
ஊரடங்கு கால வாழ்க்கை
பசியால முடங்கிட்டோம்....
நான் மோனி கத்தூன். பீகாரிலிருந்து வந்திருக்கிறேன். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் 10 பேருடன் ரூம் எடுத்து தங்கி கட்டுமான வேலைகள் பார்க்கிறேன்.
நான் பிழைப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்து பத்து வருடம் ஆயிடுச்சி. இப்போது என் அப்பா அம்மா மற்றும் உறவுகள் என மூன்று குடும்பங்களில் பத்து பேர் உள்ளனர். இவர்கள் வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. நாங்கள் அனைவரும் கட்டுமான வேலைக்கு செல்வோம். மாதத்தில் சில நாட்கள் வேலை கிடைக்கும். இதில் கிடைக்கிற பணத்தை வைத்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கொரோனா பாதிப்பு வந்ததில் இருந்து வேலை இல்லை. எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது. எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு நண்பர் தமிழர் அவர் வாட்ஸ்ஆப் செய்தி பார்த்து எல்டியுசி ஹெல்ப்லைன் தோழர் கோபாலை தொடர்பு கொள்ள சொன்னார். அவரை தொடர்பு கொண்டதும், அவர் நேரடியாக வந்து பார்த்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி உதவிகள் கிடைக்க செய்தார். அது சில நாட்கள் வரை சாப்பிட்டோம். மறுபடியும் பசியும் பட்டினியும் தொடர்கிறது. மறுபடியும் தோழர் கோபால் அதிகாரியிடம் பேசும் போது இதோ செய்கிறோம் என்கிறார்களே தவிர மறுபடியும் உதவ அரசு வேகம் காட்டவில்லை.
ஊரடங்கு தடை உத்தரவுக்கு முன்னர் வாரம் கண்டிப்பாக ரூ.2,500, மாதம் ரூ.10,000 வரை சம்பாதித்து வந்தேன். இப்போ ஒரு மாசமா இந்த வருவாய் இழந்துள்ளேன். எனது குடும்பம் பீகாரில் வாழ்க்கை இதை நம்பிதான் இருக்கு.
என்னோடு தங்கி உள்ளவங்களும் இந்த நிலைமைதான். இந்த ஒரு மாதமாக வேதனை தான் உள்ளது. வாரம் ஒரு முறை சன்டே போய் காய், ரைஸ் வாங்கி வந்துடுவோம். வாரம் தலா ரூ.500, ரூ.600க்குள் எங்க பசி தீர்ந்திடும். மாதம் ரூ.3000 போக ஊருக்கு மாதம் ரூ.8,000, ரூ.7,000 அனுப்புவோம்
இப்ப எல்லாம் போச்சு. வெளியில வரமுடியல. எல்லாரும் கைல இருந்தத வெச்சு 2 வேளை ரொட்டி சாப்பிட்டோம். இப்ப ஒரே வேளைதான். பசியால முடங்கிட்டோம். எங்க நிலைமை புரிஞ்சி எல்டியூசி மாதிரி ஆளுங்க செய்யற மாதிரி சர்கார் கருணை காட்டணும்.