COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

ஊரடங்கு காலத்தில் செங்கை மாவட்ட எல்டியுசி வேலைகள்

எ.கோபால்

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் களப் பணியில் இறங்கினோம்
. வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அறிந்து வடமாநில தொழிலாளர்கள் நம்மை தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தோம். அவரது உத்தரவுக்கு இணங்க செங்கை வட்டாட்சியர் துணைவட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர்கள் நம்மை தொடர்பு கொண்டு, நாம் கொடுத்த தகவலின் பேரில் ஊரப்பாக்கத்தில் தங்கியுள்ள, பீகார் தொழிலாளர்கள் பத்து பேருக்கும், வண்ட லூர் ஓட்டேரியில் குடும்பமாக தங்கியிருந்த மேற்குவங்க தொழிலாளர்கள் 23 பேருக்கும், வண்டலூரில் தொழுநோயாளி குடியிருப்பில் உள்ள 47 குடும்பங்களுக்கும் அரசு மூலம் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி என சுமார் 80 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க செங்கை மாவட்ட உழைப்போர் உரிமை இயக்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட எழில் நகரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர் கள் 23 பேர் உணவின்றி தவிப்பதாக செய்தியறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்கப் பட்டது. அரசின் நிவாரணப் பொருட்கள் அவர் மூலம் அவர்களுக்கு தரப்பட்டன.
10.04.2020 அன்று, வண்டலூரில் தூய்மை பணியாளர்கள் உட்பட 20 குடும்பங்களுக்கும், கொளப்பாக்கத்தில் இரண்டு குடும்பங்களுக்கும், கீரப்பாக்கத்தில் நான்கு குடும்பங்களுக்கும் அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறி வழங்கப்பட்டது. கீரப்பாக்கம் ஊராட்சி தண்டரை கிராமத்தில் 33 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் 175 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 13.04.2020 அன்று பகுதியில் 22 குடும்பங்களுக்கு நமது தலையீட்டால் அரசு நிவாரணம் வழங்குவது உறுதி செய்யப்பட்டது.
25.04.2020 அன்று வண்டலூரில் தொழுநோயாளி குடியிருப்பில் உள்ள 47 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ணீ லிட்டர் பால் என 235 கிலோ அரிசியும் 24 லிட்டர் பாலும் வழங்கப் பட்டது. இதுவரை 104 குடும்பங்களுக்கு 510 கிலோ அரிசி செங்கை மாவட்ட எல்டியுசி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது 25 கிலோ அரிசி இருப்பு உள்ளது.
அல்கிமார்ஸ் ரூ.3,000, கிரவுண் ரூ.1,000, ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் தோழர் ராஜகுரு மூலம் ரூ.5,500, வண்டலூர் கட்சி தோழர்கள் ஆதரவாளர்கள் மூலம் ரூ.1,500 என மொத்தம் ரூ.11,000 நிதி பெறப்பட்டது. அரிசி மற்றும் பொருட்களாகவும் உதவிகள் பெறப்பட்டன. இந்த வேலைகளில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அமைப்பு குழு முழுமையாகவும் தீவிரமாகவும் செயல்பட்டது. நிவாரணப் பணிகள் தொடர்கின்றன.

Search