மக்களை அலைகழிக்கறாங்க...
லட்சுமி. திருவள்ளூர் மாவட்டம் செங்குன் றத்தில் நடைபாதையில் இட்லி கடை நடத்தி வருகிறார். தான் நடத்தி வந்த டிபன் கடை மூடி ஒரு மாதம் ஆகிவிட்டது என்றார்.
போன மாசம் மோடியும் எடப்பாடியும் சொன்னத பார்த்தா 22ஆந்தேதி ஒரு நாளோடு முடியும்னு நினைச்சோம். அடுத்த நாள் சாயங்காலம் கடை தொறக்கறப்பவே வர்ர 14 வரைக்கும் 21 நாளைக்கு லாக் டவுனு சொல்லிட்டதா சொன்னாங்க... அப்பவே எங்ளுக்கு கதி கலங்கிடுச்சி.
எங்களுக்கு மட்டும் இல்ல... ரெட்டில்ஸ் எல்லாம் சாதாரண மக்கள் தொண்ணூரு சதம் நம்பி இருக்கறது இந்த ரோட்டோர கடைங்கதான். இங்க தெருவுக்கு வர்ரத நம்பிதான், எங்க வாழ்க்க இருக்குது. எங்க குடும்பத்துக்கு ஜீவனத்துக்கான ஆதாரம் இந்த தள்ளுவண்டி கடைதான். எங்க கடைங்கள நம்பி அன்றாட கூலி ஏழை மக்கள் இருக்காங்க. அவங்களுக்கு இங்கதான் கட்டுப்படி ஆவும். அதுல எங்க வீட்ல ரெண்டு வேளை சாப்பிடலாம்.
இப்ப திரும்பவும் ஒரு 18 நாள் வீட்ல அடங்குன்னு சொன்னா எப்பிடி? இடி விழுந்துடிச்சி. அவ்ளோதான். ஆயிரம் ரூபா எத்தனை நாளைக்கு வரும்? கொரானா விட கொடூரமானவங்க ஆட்சி நடக்குது. மக்கள் கவர்மென்ட் சொல்றத கேட்டு நடக்கனும் சொல்றாங்க... இவங்களா 40 நாளைக்கு படியளக்கப் போறாங்க?
இந்த 41 நாள கடக்க ஒரு நாளைக்கு ரூ.500ஆவது இருக்கனம். மாசம் 15,000 கூட இல்லன்ன எப்படி வாழ முடியும்? 1000 ரூபா தராங்க. அதுக்கு ஆயிரத்தெட்டு நிபந்தனகள் போடறாங்க. டோக்கன்... கியூவு.. நாலடி தள்ளி நில்லு... கியூ தெரு கோடிக்கு வந்துட்டா... வீடுக்கு போ... புதன்கிழமை வா... புதன் கிழமை போன ஸடாக் இல்ல 22ம் தேதி வா.... இப்படிதான் மக்களை அலைகழிக்கறாங்க